Published:Updated:

விக்ரம் படத்தில் நடிக்கும் இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர்!

விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

Published:Updated:

விக்ரம் படத்தில் நடிக்கும் இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

விக்ரம்

டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விக்ரம் பல கெட்டப்களில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இர்பான் பதான் - அஜய் ஞானமுத்து
இர்பான் பதான் - அஜய் ஞானமுத்து

இந்நிலையில், இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை 2020 ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இர்பான் பதான், 'ஜலாக் திக்லா ஜா' என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இவரும் இவரது சகோதரர் யூசுப் பதானும் இணைந்து 'கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்ஸ்' என்ற கிரிக்கெட் அகாடமியை ஆரம்பித்து கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இர்பான் பதான் தவிர, ஹர்பஜன் சிங், ஶ்ரீசாந்த் என கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த ஆண்டில் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர்.