அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

இந்தியன் II - படத்துக்கு அடுத்த சிக்கல்!

கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்

- அரசியல் காரணமா?

‘இந்தியன்’ படத்தில் ஊழல்வாதிகளை வர்ம முத்திரையால் முடக்கிப்போடுவார் ‘இந்தியன்’ தாத்தா கமல்ஹாசன். இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன்-2’ படம் அரசியல் சூழல்களால் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம்... “இயக்குநர் ஷங்கர் டைரக்‌ஷனில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவந்த ‘இந்தியன்-2’ படம் முடக்கப்படுகிறது” என்கிற ஒற்றைவரித் தகவல் நம் காதுக்குவர, விசாரணையில் இறங்கினோம்.

2018-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் ‘இந்தியன்-2’ படத்தைத் தயாரிக்க விருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. காஜல் அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளி யானது. பட அறிவிப்பு வெளியாகியும் ஷூட்டிங் தள்ளிப்போனது. ஷங்கரின் கோரிக்கையை லைகா நிறுவனம் ஏற்காமல் போனதால் பிரச்னை நடந்து வருவதாகக் கூறப்பட்டது. ஒரு வழியாகத் தயாரிப்பு நிறுவனத்துடன் சமாதானம் நடைபெற்று, சென்னை அருகே பிரமாண்ட செட் அமைக்கப் பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. இந்த நிலையில்தான் இந்தப் படம் லைகா நிறுவனத்தினால் கைவிடப்பட்டுள்ளதாக மீண்டும் செய்திகள் கசிந்துள்ளன.

இந்தியன்
இந்தியன்

இதுகுறித்து கமல் மற்றும் லைகா நிறுவனத்துக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இவை... “எந்திரன்-2 படத்தை ஷங்கர் இயக்கிவரும்போதே இந்தியன்-2 படத்துக்கான கதையையும் உருவாக்கிவிட்டார். அதன் பிறகு கமலுடன் ஷங்கர் கதைகுறித்து விளக்கியபோது கமலுக்கும் கதை பிடித்துவிட்டதால் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஆனால், ஆரம்பம் முதலே லைகா நிறுவனம் கெடுபிடிகளைக் கையாண்டது. குறிப்பாக, ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களுக்கு பட்ஜெட் குறித்தும் ரிலீஸ் தேதி குறித்தும் தயாரிப்பு நிறுவனத்திடம் எந்த உறுதியும் வழங்க மாட்டார். ஆனால், லைகா நிறுவனம் இந்தப் படம் தொடங்கிய சில நாள்களிலேயே, ‘படத்துக்கான பட்ஜெட் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து ஒப்பந்தம் செய்தால் மட்டுமே படத்தைத் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும்’ என்று தடாலடியாக அறிவித்தது. இதனால், கடுப்பான ஷங்கர், ஒரு கட்டத்தில் படத்தை நிறுத்திவிடலாம் என்று முடிவுசெய்தார். ஆனால், கமல் இரு தரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கி னார். ஷங்கரை சமாதானம் செய்து பட்ஜெட் மற்றும் ரிலீஸ் தேதிக்கு ஒப்பந்தம் செய்யவைத்தார்.

இந்தப் படத்தில் முதியவராகக் கமல் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. இதில் கமலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் ஷூட்டிங் தள்ளிப்போனது. சிகிச்சை முடித்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்ற நேரத்தில், தேர்தல் வந்ததால் கமல் பிரசாரத்தில் தீவிரமானார். அங்குதான் ஆரம்பித்தது படத்துக் கான சிக்கல்... தேர்தல் முடிவுகள் கமலுக்கு வெற்றியைத் தராவிட்டாலும் முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளைப் பெற்றார். பல தொகுதிகளில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்தது, அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் திடீரென லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க விருப்பம் இல்லை என்பதை வாய்மொழியாக இயக்குநரிடம் சொல்லியுள்ளது.

இதற்குப் பின்னால் திரைத்துறையில் நடக்கும் அரசியலும் தமிழக அரசியலும் பின்னிப் பிணைந்திருக்குமோ என்கிற சந்தேகம் கமலுக்கு உள்ளது. ‘இந்தியன்-2’ வெளியானால் அந்தப் படத்தின் கதைக்கரு கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முக்கிய பங்காக இருக்கும் என்று அறிந்தே, திட்டமிட்டு இந்தப் படத்தை நிறுத்தும் வேலையில் சிலர் இறங்கியுள்ளனர். ஆக, ‘இந்தியன்-2’ படம் நிறுத்தம் என்ற அறிவிப்பு இன்னும் நில நாட்களில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது” என்று விளக்கமாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ-வான பாபுவிடம் கேட்டால், “டி.வி நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார் கமல். ‘இந்தியன்-2’ படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந் துள்ளது. படத்தை நிறுத்துவதாகப் படநிறுவனமோ, இயக்குநரோ எதுவும் சொல்லவில்லை” என்று மட்டும் சொன்னார்.