சினிமா
Published:Updated:

“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”

வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில்...

‘இந்தப் படத்தில் மருத்துவராக நாசர், பிரகாஷ்ராஜ் மாதிரிதான் நடிகர்களைத் தேடுவாங்க. நான் ஒரு பழக்கத்தில் ‘நீயா நானா' கோபிநாத்தைக் கண்டடைந்தேன்

``நாலு ஃபைட், அஞ்சு பாட்டு, பஞ்ச் டயலாக்னு ஃபார்முலா சினிமா இல்லை இது. எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இனிமே இது கமர்ஷியல், ஆர்ட் பிலிம்னு நாம சொல்றதுக்கு வேலையே இல்லை. எல்லாத்தையும் ரசிகர்கள் தீர்மானிக்கிறாங்க. இப்படித்தான் படம் பண்ணணும்னு முன்னாடி சில அம்சங்கள் இருந்துது. இப்ப சகலமும் மாறி நிக்குது. படம் புதுசா தெரிந்தால் யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க. வித்தியாசமா செய்ய நினைக்கிறவங்களுக்கு இது அருமையான நேரம். இந்த நேரத்தில் எங்க படம் ‘வாசுவின் கர்ப்பிணிகள்' வர்றது பெரிய ப்ளஸ். ‘மாஸ்டர்' படத்தைத் தயாரித்த பிரிட்டோ சார்தான் இதையும் தயாரித்திருக்கிறார்.'' திருப்தியாகப் பேசுகிறார் இயக்குநர் மணி நாகராஜ். ‘பென்சில்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். அவர் பேசப் பேச படத்தின் சித்திரம் விரிந்தது.

“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”
“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”

`` ‘வாசுவின் கர்ப்பிணிகள்...' பெயரே வித்தியாசம் தருது!’’

‘‘ஒரு மகப்பேறு மருத்துவரிடம் வந்து சேரும் பெண்களில் நால்வரின் வாழ்வைப் பேசுகிற படம். ஒரு ஆந்தாலஜி மாதிரி. எல்லாமே டாக்டரின் பார்வையில்தான் நடக்கிறது. தாய்மை அடைந்ததற்கான காரணங்கள் வெவ்வேறு. டாக்டர் எப்படி ஆற்றுப்படுத்தி, அவர்களை இயல்புக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் கதை. மெல்லிய உணர்வுகளோடு பயணிக்கிற கதையில் எல்லோருமே அவ்வப்போது பொருத்திக் கொள்ள முடியும். பெண்களின் வலிகள், வெளியிடப்படாத உணர்வுகள், மனக் காயங்கள், பிரச்னைகள் ஆகியவற்றைப் படம் வெளிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும் துயரை மட்டுமே காணும் பெண்களின் தனிக் குரலாக இந்தப் படம் இருக்கும்.''

“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”
“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”

``இதில் கோபிநாத் எப்படி?’’

‘‘இந்தப் படத்தில் மருத்துவராக நாசர், பிரகாஷ்ராஜ் மாதிரிதான் நடிகர்களைத் தேடுவாங்க. நான் ஒரு பழக்கத்தில் ‘நீயா நானா' கோபிநாத்தைக் கண்டடைந்தேன். நீயா நானாவில் தீர்க்கமாகப் பிரச்னைகளைப் பேசி, ஒரு தீர்வை அல்லது நியாயத்தை முன்வைப்பார் இல்லையா..! அதுவேதான் இந்தப் படத்திலும் நடக்கிறது. அவரது ரியல் லைஃப் அனுபவங்கள் வேறு வடிவத்திலும் சினிமாவில் வெளிப்படுகிறது. அவர் முன்னால் ‘நிமிர்ந்து நில்' படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவரால் உணர்ந்து நடிக்க முடியும் என்று நம்பினேன். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பிறகு அவரால் இந்த சினிமாவில் அருமையாக உள்ளே சென்றுவிட முடிந்தது. இன்னும் பெரிய இடங்களுக்கு கோபிநாத்தை சினிமா பயன் படுத்தும் என நம்புகிறேன்.''

“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”
“இது துயர் காணும் பெண்களின் தனிக் குரல்!”

``பெண்கள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க..?’’

‘‘சீதா, வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன், கிருஷ்சிகா, லெனா குமார் என பலர் நடித்திருக்கிறார்கள். இதில் லெனா குமார் கோபிநாத்தின் மனைவியாக வருகிறார். கர்ப்பிணியாக நடிக்கணும், இம்மாதிரியான பிரச்னைகள் கொண்ட பெண்ணாக வரணும்னு சொல்லும்போதே ‘அருமையா இருக்கே'ன்னு சொல்லிட்டு, ‘இந்த விஷயங்கள்தான் எங்களுக்கு இடிக்குது'ன்னு நிறைய பேர் போயிட்டாங்க. சீதா மாதிரியானவர்கள் உணர்ந்து நடித்துக் கொடுத்தார்கள். அனிகா சுரேந்திரன் சிறு பெண்ணாக இருந்தாலும் கேரக்டரின் தன்மையை உணர்ந்து கொண்டார். கரியரில் பெரிய இடத்திற்குப் போக வேண்டிய தகுதிகள் இதில் நடித்திருக்கிற புதுமுகங்களுக்கு இருக்கு.''

``பாடல்கள் பத்திப் பேசுறாங்க...’’

‘‘இசையமைப்பாளர் அவின் புதுமுகம். ஆனால் அப்படித் தெரியாமல் மியூசிக் செய்திருக்கிறார். ‘குக்கூ', ‘அட்டகத்தி' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.கே.வர்மாதான் இதற்கும் கேமராமேன். பெண்களின் பிரச்னைகளில் சிலதை உணர்வுபூர்வமாகக் கையாண்டோம் என்ற திருப்தி வந்து சேர்ந்திருக்கிறது. இதை மக்களும் உணரும்போது என் உழைப்பிற்கான வெற்றியாகக் கருதுவேன்.''