தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது!

மேகா ஆகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
மேகா ஆகாஷ்

திரை வானிலே...

மேகா ஆகாஷ்... ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் நாயகி. படம் வருவதற்கு முன்பே பிரபலமானவர். கெளதம் வாசுதேவ் மேனன் பட்டறையில் செதுக்கப்பட்ட மேகா, ஆகாயம் வரை அத்தனையும் பேசுகிறார்.

திரை வானிலே...
திரை வானிலே...

‘‘நான் தமிழ்நாட்டுப் பொண்ணு. சென்னைலதான் வளர்ந்தேன், படிச்சேன். அம்மா மலையாளி, அப்பா தெலுங்கு. ஸோ, அவங்க மொழிகளையும் சேர்த்து ஸ்கூல்ல தமிழ், இந்தி, இங்கிலீஷ்னு பல மொழிகளையும் கத்துக்கிட்டேன்’’ எனத் தன்னை அழகாக அறிமுகம் செய்துகொள்கிறார். திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே நடிகை நதியாவுடன் இணைந்து விளம்பரப் படத்தில் அசத்தியவர் மேகா.

என்`குருநாதா' கெளதம் வாசுதேவ் மேனன் சார்தான்.ஏதாவது டவுட்டுன்னா அவர்கிட்டதான் கேட்பேன். நல்ல மனிதர்.

“நான் இப்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். யெஸ்... பெரிய பேனர், பெரிய இயக்குநர், பெரிய ஹீரோன்னு பல எதிர் பார்ப்புகளை கிளப்பின `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல நான் ஹீரோயின். ஒரு பாலிவுட் பட ஷூட்டிங்காக மும்பையில் இருந்தப்ப தான் இந்தப் படத்தோட ரிலீஸ் தேதி உறுதியாச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன், எங்க டீமோட சேர்ந்துதான் படம் பார்க்கணும்னு... நினைச்ச மாதிரியே கெளதம் சார் அண்டு டீம், என் ஃபேமிலியோட படத்தைப் பார்த்தோம். ரசிகர் களோட கைதட்டல் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு. அது வேற லெவல் ஃபீலிங், யூ நோ!

இந்தப் படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே பல படங்கள் பண்ணிட்டேன். ஆனாலும், இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் வெற்றியைவிட, படம் சீக்கிரம் வெளிவரணும், அதை நம்பி பல பேர் இருக்காங்கங்கிறதுதான் எங்க எல்லோருடைய எண்ணமா இருந்தது. காட்'ஸ் கிரேஸ்... படம் ரிலீஸ் ஆச்சு. இப்போ பாசிட்டிவ், நெகட்டிவ்னு நிறைய கமென்ட்ஸ் வருது. முக்கியமா, பாசிட்டிவ் கமென்ட்ஸை உற்றுக்கவனிச்சுட்டு இருக்கேன். மொத்தத்துல மேகா ஹேப்பி அண்ணாச்சி!

2019-ம் வருஷம் என்ன கொடுத்தது?

நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது என்கிறதை ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட வாழ்க்கை கத்துக்கொடுத்தது. எது நடக்கணுமோ அது நடந்தே தீரும், எதிர்பார்ப்பை வெச்சுக்காம நம் வேலைகள்ல கவனமா இருந்தா போதும்கிற அனுபவத்தை எனக்கு இந்த வருஷம் தந்திருக்கு. வருஷ ஆரம்பத்துல ரஜினிசார்கூட நான் நடிச்ச ‘பேட்ட’, இப்ப ‘எனை நோக்கி பாயும் தோட்டா’... இந்த இரண்டு படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்திருக்கு. ரசிகர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்!

நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது!
நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது!

பாலிவுட் என்ட்ரி எப்படி நடந்தது?

ஹாலிடேக்காக மும்பைக்குப் போயிருந் தேன். அப்போ ஓர் இந்திப் படத்தோட ஆடிஷன்ல கலந்துகிட்டு, டூர்ல கவனமாகிட்டேன். திடீர்னு ஒருநாள் `யூ ஆர் செலக்டட்'னு போன் வந்துச்சு. அதுக்கப்புறம்தான் படத்தோட கதையைக்கேட்டு ஒரு கண்டிஷனோட நடிக்க சம்மதிச்சேன். படத்தோட பெயர் ‘சேட்டிலைட் ஷாங்’ (Satellite Shank). தமிழ்ப் பொண்ணு கேரக்டர்ல நடிக்கிறேன். ‘தமிழ்ப் பொண்ணுங்களை கிண்டல் பண்ற மாதிரியான காட்சிகள் இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த ரோல்ல நடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டுத்தான் நடிக்க சம்மதிச்சேன். என் உணர்வுகளுக்கு இயக்குநர் மரியாதை கொடுத்தார்.

விளம்பரப் பட அனுபவம்?

சினிமாவுல நடிக்க வர்றதுக்கு முன்னாடி `நேச்சுரல்ஸ்' விளம்பரத்துல நதியா மேம் மகளா நடிச்சேன். அது எங்க அம்மா எடுத்த விளம்பரப் படம்தான். அம்மா அவங்க துறையில ரொம்ப பிஸியா இருப்பாங்க. என்கூட சேர்ந்து கதை கேட்டாலும் முடிவை என்கிட்ட விடுற ஃபிரெண்ட்லியான அம்மா. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்!

இந்தத் துறையில் யார் உங்களுக்கு டியர் ஃபிரெண்ட்?

ஃபிரெண்டுன்னு சொல்ல முடியாது. `குருநாதா'ன்னு சொல்லலாம்... கெளதம் வாசுதேவ் மேனன் சார்தான். எனக்கு ஏதாவது டவுட்டுன்னா அவர்கிட்டதான் கேட்பேன். நல்ல மனிதர்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மேகா எப்படி?

ஃபேமிலி, புக்ஸ், காபி ஷாப், வெப் சீரிஸ்னு பிஸியாகிடுவேன்!