லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இவளுக்கு பெரிய நயன்தாரானு நினைப்பு? - சித்ரா

 சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
சித்ரா

வசந்த முல்லை போலே

`` `பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை மூன்று வகைகளில் பிரிக்கலாம். முல்லை ஃபேன்ஸ், கதிர் ஃபேன்ஸ், கதிர்-முல்லை ஃபேன்ஸ். `கொரோனா’வால சீரியல் இல்லையா... இவங்க எல்லாருமே பயங்கர அப்செட்!’’ - தடதடவெனப் பேசுகிறார் சித்ரா. ``லாக் டெளன் ஆரம்பிச்ச முதல் ரெண்டு நாள்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டா, ஃபேஸ்புக்னுதான் இருந்தேன். பிறகு, இந்த நாள்களைப் பயனுள்ளதா மாத்தணும்னு நினைச்சு வீட்டைச் சுத்தம் செய்யறது, சமைக்கறது, தோட்ட வேலைன்னு இறங்கிட்டேன். லீவுல வீட்டுக்கு வந்திருக்கிற அக்கா பசங்களுக்கு டான்ஸும் யோகாவும் சொல்லித் தர்றேன்.

ஷூட்டிங் இருந்தவரைக்கும் வீட்டுல அம்மா பாத்துட்டிருந்த வேலைகள் பெரிசா தெரிஞ்சதில்லை. பல நாள் வீட்டுக்கு வந்ததும் அம்மாகிட்ட நான் முகம் சுழிச்சிருக்கேன். இப்போ அதை உணர்ந்ததுனால, ‘ஸாரிம்மா, என்னை மன்னிச்சிடுங்க'ன்னு அடிக்கடி சொல்லிட்டிருக்கேன்.

 சித்ரா
சித்ரா

சோஷியல் மீடியால உங்க ரசிகர்கள் `லைவ்ல வாங்க'ன்னு ஒரே அன்பு டார்ச்சர் பண்ற மாதிரி தெரியுதே...

ஆமாங்க... ‘மறுபடியும் முல்லையை எப்ப பார்ப்போம்’னு கேட்டுட்டே இருந்தாங்க. இந்தக் கேள்விக்கு சீரியல் டைரக்டர், புரொடியூசர், சேனல்னு யார்கிட்டயுமே பதில் இல்லையே... அதான், ஒருநாள் கொஞ்ச நேரம் அவங்க ஆசைப்படி, மேக்-அப்லாம் போட்டுட்டு முல்லையாவே வந்தேன். என் ரசிகர்களுக்கு என்னால தர முடிஞ்ச சின்ன சந்தோஷம் அதுதான்!

இன்னொரு புறம் நெகட்டிவ் கமென்ட் பண்றவங்களும் இருக்காங்களே?

எல்லாரையுமே எப்பவுமே திட்டிட்டிருக்கிறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். நான் சைக்காலஜி படிச்சிருக்கறதால, இதையெல்லாம் சுலபமா கடந்து போயிடுறேன். ஆங்கரிங் வந்த புதுசுல, லைவ் வர்றப்ப... `இவளுக்கு மனசுல பெரிய நயன்தாரானு நினைப்பு'னு கமென்ட் அடிப்பாங்க. அதைப் பார்த்து எரிச்சலடைய கூடாது. எதிர்மறைக் கருத்துகளை கடந்து போக பழகிட்டா பிரச்னை இல்லை. அவங்களுக்குப் பதில் சொல்லிட்டிருந்தா நம்ம நேரமும் எனர்ஜியும்தான் வேஸ்ட்!

மே 2-ம் தேதி உங்க பிறந்த நாளுக்காக பெரிய அளவில் ப்ளான் போயிட்டிருந்ததுன்னு கேள்விப்பட்டோம். ஆனா, கொரோனா லாக் டெளனால கொண்டாட முடியலையோ...

தமிழ்நாடு அளவுல மட்டுமில்லாம வெளிநாட்டுல இருந்தும் சிலர் கலந்துக்கற மாதிரி பெரிய ‘ஃபேன் மீட்’ நடத்தி அவங்க மத்தியில பிறந்தநாளைக் கொண்டாட நினைச்சிருந்தேன். அதுக்கான ஏற்பாடுகள்லாம் விறுவிறுன்னு நடந்திட்டி ருந்திச்சு. வாழ்நாள்லயே நான் மறக்க முடியாத பிறந்தநாளா அமையப்போகுதுன்னு நினைச்சிட்டிருந்த நிலையில, ‘கொரோனா’ வந்து அதை வேற மாதிரியான மறக்க முடியாத நாளா மாத்திடுச்சு. நாடே முடங்கி வீட்டுக்குள் இருக்கிற நாள்ல வந்த என் பிறந்தநாளை எப்படிங்க வாழ்நாள்ல மறக்க முடியும்? வருங்காலத்துல ’கொரோனா பிறந்த நாள்’னோ ‘க்வாரன்டைன் பிறந்தநாள்’னோ இதைச் சொல்லிக்கலாம்!''