சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சினிமா விகடன்: “பாசிட்டிவ் சிந்தனை என்பது ஏமாற்றும் தந்திரம்!”

அர்ஃபீன்
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ஃபீன்

பிரபலங்களை அவர்களது மன அழுத்தத்திலிருந்து மீட்கும் ஆபத் பாந்தவனான அர்ஃபீனிடம் பேசினேன்.

கான்கள் ஆதிக்கம் செலுத்தும் அதே பாலிவுட்டில் இன்னொரு கானும் கவனம் ஈர்க்கிறார். அவர் அர்ஃபீன் கான். 43 நாடுகள்... முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், மாணவர்கள் என லட்சக் கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியவர். உலகின் நம்பர் ஒன் பர்பாமன்ஸ் கோச்.

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய சுஷாந்த் சிங், பாதாள் லோக் வெப் சீரீஸ் நடிகர் ஆசிஃப் பஸ்ராவின் தற்கொலைகளுக்குப் பிறகு பாலிவுட்டில் பெரிதும் தேடப்படும் நபராகியிருக்கிறார் அர்ஃபீன். பிரபலங்களை அவர்களது மன அழுத்தத்திலிருந்து மீட்கும் ஆபத் பாந்தவனான அர்ஃபீனிடம் பேசினேன்.

``லைப் கோச் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன பர்பாமன்ஸ் கோச்?’’

 சினிமா விகடன்: “பாசிட்டிவ் சிந்தனை என்பது ஏமாற்றும் தந்திரம்!”

‘`லைப் கோச் என்பவர், உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அட்வைஸ் தருபவர். நான், பர்பாமன்ஸ் கோச். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டுமென நான் அட்வைஸ் பண்ண மாட்டேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் விதத்தை என்னால மாற்ற முடியும். பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வது என் வேலையில்லை. உங்கள் சிந்தனையை மேம்படுத்தப் பயிற்சிகள் தருவதுதான் பர்பாமன்ஸ் கோச்சின் வேலை.’’ தெளிவுரையோடு தொடர்பவர், வாழ்வின் பெரும்பகுதியை லண்டனில் கழித்திருக்கிறார். இளவயதில் இவர் சந்தித்த தோல்விகளும் குழப்பங்களுமே இவரது இன்றைய செலிபிரிட்டி அடையாளத்துக்கான அஸ்திவாரம்.

‘`நான் பள்ளிக்கூடத் தேர்வுகளில் பலமுறை பெயிலாகியிருக்கிறேன். என்மேல் யாருக்கும் நம்பிக்கை இருந்ததில்லை. 11 வயதில் ஸ்கூலில் பேனா, பென்சில் விற்றது; பேக்கரி, போஸ்ட் ஆபீஸ், மெக்டொனால்டில் கார் கழுவியது எனப் பல வேலைகள் பார்த்திருக்கிறேன். 19 வயதில் பிசினஸ், வசதியான வாழ்க்கை என எல்லாம் கைகூடின. அடுத்த சில வருடங்களில் அத்தனை சந்தோஷங்களும் சிதைந்துபோயின. சம்பாதித்த வேகத்தில் எல்லாம் காணாமல் போனது.

 சினிமா விகடன்: “பாசிட்டிவ் சிந்தனை என்பது ஏமாற்றும் தந்திரம்!”

கொஞ்சமும் நம்பிக்கையில்லாத நிலையில் என்னைச் சரியாக்க பல பயிற்சிகள், செமினார்களுக்குப் போனேன். எதுவும் நிரந்தரமான பலன்களைத் தரவில்லை. தோல்வி என்பது அவமானமல்ல, பாடம் எனச் சொல்லி எனக்குள் மாற்றத்துக்கான முதல் விதையை விதைத்தவர்கள் என் பெற்றோர். உலகில் சந்தோஷமாக இருக்கும் வெற்றியாளர்கள், உணர்வுகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். அவர்கள் யாரும் பாசிட்டிவ் மனப்பான்மையை நம்பவில்லை. எனக்கும் அதில் உடன்பாடில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும், என் பார்வையை மாற்றிக்கொள்ளவும் பழகினேன். 12 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு ‘தி இன்கிரெடிபிள் யூ’ என்ற என்னுடைய தனித்துவமான பயிற்சிமுறையை உருவாக்கினேன்...’’ - நீண்ட நெடும்பயணம் பகிர்பவர் ஆரம்பக்காலத்தில் பணமே வாங்காமல் பயிற்சிகள் அளித்திருக்கிறார். இன்று அவரது 10 வாரப் பயிற்சிக்குக் கட்டணம் 40,000 ரூபாய்.

 சினிமா விகடன்: “பாசிட்டிவ் சிந்தனை என்பது ஏமாற்றும் தந்திரம்!”

``மன அழுத்தம் எல்லோருக்குமானதுதானே... பிரபலங்களின் மன அழுத்தம் மட்டும் பெரிதாகப் பேசப்படுவது ஏன்?’’

‘`மன அழுத்தம் சாமானியனுக்கும் பிரபலத்துக்கும் ஒன்றுதான். அதை யார் எப்படி அணுகுகிறார்கள் என்பதில்தான் வித்தியாசமே. சுயமதிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரை எந்த அழுத்தமும் பாதிக்காது. டொனால்டு ட்ரம்ப் ஓர் உதாரணம். அவரைப் பிடிக்கும், பிடிக்காது என்பதைத் தள்ளிவைத்துவிட்டுப் பாருங்கள்... தொடர் விமர்சனங்கள் பாய்ந்தாலும் என் வழி தனி வழி என இருப்பவர். அவரை பைத்தியக்காரர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், தன் மன அழுத்தத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர் அவர்.

அர்ஃபீன்
அர்ஃபீன்

ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களைக் கடவுள்களாகப் பார்க்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். விட்னி ஹூஸ்டன், ராபின் வில்லியம்ஸ், சுஷாந்த் சிங்... இபபடி எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். எந்தப் பிரபலத்துக்கும் உறவும் அது தரும் பிணைப்பும்தான் விலை மதிக்க முடியாத சொத்து. வெற்றியை விரட்டும் பயணத்தில் பலரும் வாழ்வின் மிகச்சிறந்த மனிதர்களை, உறவுகளை இழந்துவிடுகிறார்கள்.

வாழ்க்கையில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதை நினைத்து வருந்த வேண்டியதில்லை. என்னுடைய பயிற்சியின் முக்கியமான ஒரு பகுதியே தோல்விகளுக்குப் பழகுவதுதான். வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது என்பதை உணரச் செய்யவே இது. வாழ்க்கையில் வெறும் வெற்றிகளை மட்டுமே சந்தித்த நபர் யாராவது இருப்பார்களா?’’- எதார்த்தம் உணர்த்துபவருக்கு அமிதாப் பச்சன் உட்பட ரசிகர் படையே உண்டு. ஹ்ருத்திக் ரோஷன் இவரின் நெருங்கிய நண்பர்.

‘`வாழ்க்கையே பிரச்னையாக இருக்கும்போது பாசிட்டிவ்வாக சிந்திப்பது எப்படிச் சாத்தியமாகும்? நீங்கள் எதிர்கொள்வதை அப்படியே பார்ப்பதும், அந்த வலியை ஏற்று, பிறகு அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை யோசிப்பதும்தான் சரி. பாசிட்டிவ் சிந்தனை என்பது ஒரே நாளில் உங்களைப் பணக்காரர்களாக மாற்றிவிடுவதாகச் சொல்லும் பிசினஸ் தந்திரங்களைப் போன்றது.

இந்தியர்களுக்கு ‘நோ’ சொல்வதில் பெரிய தயக்கம் இருக்கிறது. அடுத்தவருக்கு தான் தவறானவராகத் தெரிந்துவிடக்கூடாதென நினைக்கிறார்கள். என் பாஷையில் சொல்வதென்றால் ‘நைஸ் கை சிண்ட்ரோம்’ (Nice Guy syndrome)... இந்த மனநிலை, காலப்போக்கில் அவர்கள் சுயத்தையும் சந்தோஷத்தையும் தொலைக்கக் காரணமாகிவிடும். முடியாது

என்றால் ‘நோ’ சொல்லும் தைரியம் வேண்டும்.’’