சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அடுத்த டேக்

சுதா கோங்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
சுதா கோங்ரா

இவர்களைத்தவிர சுதா கோங்ரா ‘சூரரைப் போற்று’ படத்துக்கு அடுத்தபடியாக விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

அடுத்த டேக்

மிழ் சினிமாவில் இது பெண் இயக்குநர்களின் நுழைவுக்காலம். தமிழ் சினிமா நூறாண்டைத் தாண்டியும் இன்னும் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டவில்லை என்றாலும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தன் படைப்புகள்மூலம் தூண்டிவிட்டிருக்கும் தற்போதைய பெண் இயக்குநர்களின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்ஸ் இவை...

மதுமிதா

‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’ படங்களுக்குப் பிறகு ‘கே.டி. (எ) கருப்புத்துரை’ மூலம் பல தரப்பு சினிமா ரசிகர்களது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் மதுமிதா.

மதுமிதா
மதுமிதா

“கே.டி. படம் பார்த்துட்டு, ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் பாலிவுட் படம் இயக்குவதற்கான வாய்ப்பு தந்திருக்காங்க. த்ரில்லர் ஜானர்ல கதை இருக்கும். யார் ஹீரோ, என்ன மாதிரியான கதை, எந்த நிறுவனத்துடைய தயாரிப்பு இப்படி எல்லா அறிவிப்பும் வெகு விரைவில் வரும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்’’ என்கிறார் மது.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

‘ஆரோகணம்’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களின் மூலமாக இயக்குநராகவும் கவனம் ஈர்த்தவர் நடிகை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். அடுத்து ‘ஆர் யூ ஓகே பேபி’ எனும் டைட்டிலில் ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறார்.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

‘`தமிழ் சினிமாவில் ஃபார்முலா படங்கள் கமர்ஷியலா ஹிட் ஆகுது. அதைத்தாண்டி நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் கமர்ஷியலா ஹிட் ஆகணும். அதை மாற்றத்தான் முயற்சி பண்ணிட்டிருக்கோம். மாத்திடுவோம்” என்கிறார்.

நந்தினி

‘திரு திரு துறு துறு’ படம், ‘நிலா நிலா ஓடிவா’ வெப் சீரிஸ் என பிஸியாக இருந்த இயக்குநர் நந்தினியிடம் அடுத்த படம் குறித்துப் பேசினேன். “அடுத்து ஒரு பெரிய OTT ப்ளாட்ஃபார்ம்ல வெப் சீரிஸ் பண்றதுக்காக சைன் பண்ணியிருக்கேன். ஜூன், ஜூலைல ஷூட்டிங் ஆரம்பம். வெப் சீரிஸ்ல இப்போ கவனம் செலுத்திட்டு இருக்கிறதனால, படங்கள் எதுவும் கமிட் பண்ணல.

நந்தினி
நந்தினி

படங்கள் பண்ண தயாரிப்பாளர்களை அணுகினாலும், ‘வெப் சீரிஸ் பண்ணலாமே!’ன்னுதான் சொல்றாங்க. நான் இயக்கிய படங்களின் பட்ஜெட்டைவிட மூணு மடங்கு அதிகமான பட்ஜெட்ல த்ரில்லர் ஜானர்ல இந்த வெப் சீரிஸ் பண்ணப்போறேன். சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.”

ஹலிதா ஷமீம்

‘பூவரசம் பீப்பி’, ‘சில்லுக்கருப்பட்டி’ என மெல்லுணர்வுப் படங்களைத் தந்த ஹலிதா ஷமீமின் அடுத்த படம் ‘ஏலே.’ “இது கிராமத்துப் பின்னணி கொண்ட அப்பா - பையன் கதை.

ஹலிதா ஷமீம்
ஹலிதா ஷமீம்

சமுத்திரக்கனி, மணிகண்டனுடன் அந்தக் கிராமத்து மக்களும் நடிச்சிருக்காங்க. `மதுமதி’ன்னு ஒரு புதுமுகம் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ‘சில்லுக்கருப்பட்டி’ல எப்படி இதுவரைக்கும் சினிமால பார்க்காத சமுத்திரக்கனியைப் பார்த்ததா கமென்ட்ஸ் வந்ததோ அதே மாதிரி, யங் லுக், வயசான லுக்குன்னு படம் முழுக்க அதகளம் பண்ணியிருக்கார்்” என உற்சாகமாகப் பேசினார் ஹலிதா.

சுதா கோங்ரா

இவர்களைத்தவிர சுதா கோங்ரா ‘சூரரைப் போற்று’ படத்துக்கு அடுத்தபடியாக விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

சுதா கோங்ரா
சுதா கோங்ரா

அது ஓகே ஆனால் மாஸ் ஹீரோவை இயக்கும் முதல் பெண் இயக்குநர் ஆவார் சுதா.