
எனக்கு தனுஷ் சாருடைய நடிப்பு ரொம்பப் பிடிக்கும்.
‘லக்ஷ்மி’ என்ற குறும்பட சர்ச்சை மூலம் வைரலானவர் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி. ‘சுட்ட கதை’, ‘முன்தினம் பார்த்தேனே’ என இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் ‘லக்ஷ்மி’தான் இவருக்கான விசிட்டிங் கார்டு.
இப்போது தனுஷுடன் ‘கர்ணன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனையாம்.

“ ‘கர்ணன்’ படத்தில் என் கேரக்டரை ஸ்கிரீன்ல பார்க்கும்போது எல்லோரும் ரொம்ப ஈஸியா கனெக்ட் ஆகிடுவாங்க. ஏன்னா, இந்த மாதிரி ஒரு கேரக்டரை நிச்சயம் எல்லோரும் அவங்க வாழ்க்கையில் மீட் பண்ணியிருப்பாங்க. சினிமா நடிகர்களுடன் அந்த ஊர் மக்களும் நிறைய பேர் நடிக்கிறாங்க. அவங்ககூட பேசும்போது வேற உலகத்துக்குள்ள இருக்கிற மாதிரி இருந்தது.”
‘`தனுஷுடன் நடிச்ச அனுபவம்?’’
“எனக்கு தனுஷ் சாருடைய நடிப்பு ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு கேரக்டருக்குள்ளயும் எவ்ளோ ரியாலிட்டியைக் கொண்டு வர்றார்ங்கிறதை கூட இருந்து பார்க்குறது செம அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்ல யார்கிட்டயும் அதிகம் பேசமாட்டார். மார்க்ல நிக்குறதுதான் தெரியும். ரொம்ப கேஷுவலா நடிச்சிட்டு போயிட்டே இருப்பார். நான் ஒரு நாள் அவர்கிட்ட ‘கொஞ்ச நேரம் உங்ககூட உட்கார்ந்து நடிப்பு பத்திப் பேசணும். எப்படி எமோஷன்களை இயல்பா கொண்டுவர்றீங்க, உங்களுடைய ப்ராசஸ் என்ன, என்ன டெக்னிக்ஸ் பயன் படுத்துறீங்கன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கணும்’னு சொன்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ‘நிச்சயமா பேசுவோம்’னு சொல்லியிருக்கார். கடைசி ஷெட்யூல்ல நடக்கும்னு நம்புறேன்.”
‘`நீங்க நடிச்ச ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ நிறைய திரைப்பட விழாக்கள்ல விருதுகள் வாங்கிட்டு இருக்கு. அந்தப் படத்துல நடிச்ச அனுபவம் சொல்லுங்க...’’
“ அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன்னு மூணு எழுத்தாளர்களுடைய மூணு கதையைத்தான் படமா எடுத்திருக்கார் வசந்த் சார். அதுல ‘பூ’ பார்வதி, காளீஸ்வரி, நான்னு மூணு பேரும் ஒவ்வொரு கதையில் நடிச்சிருக்கோம். நடிப்பு, வசனம், காஸ்ட்யூம்னு ஒரு இடத்துலகூட சினிமாத்தனம் இருந்துடக்கூடாதுன்னு அவ்ளோ மெனக் கெட்டி ருக்கார். எங்ககிட்டேயும் அதைச் சொல்லிப் புரியவெச்சு வேலை வாங்கினார். படத்துல மியூசிக்கே கிடையாது. பார்வதியுடைய பெரிய ரசிகை நான். அவங்க படங்கள் பார்த்துட்டு ஒரு ரசிகையா அவங்களுக்கு இ-மெயில்லாம் அனுப்பியிருக்கேன். இப்போ அவங்களும் நானும் நண்பர்கள். சீக்கிரமே அந்தப் படம் தியேட்டர்ல வெளியாகும்.”
‘`நீங்க பெரிய கிரிக்கெட் ப்ளேயர்னு உலகத்துக்கு இவ்ளோ நாள் தெரியாமப்போச்சே?’’
“தமிழ்நாடு ஜூனியர் டீமுக்கு கேப்டனா இருந்தேன். சீனியர் டீமுக்கு துணை கேப்டனா இருந்தேன். அப்புறம் இந்தியா ‘பி’ டீமுக்கு செலக் டாகி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா மித்தாலி ராஜ் கேப்டன்ஸில இந்தியன் டீமுக்காக விளையாடினேன். அந்த நேரத்துல மித்தாலி ராஜ் பத்திச் சொன்னாக்கூட யாருக்கும் பெருசாத் தெரியாது. கேப்டனையே தெரியாதுன்னா ப்ளேயர்ஸோட நிலைமைலாம் எப்படி இருக்கும். அவ்வளவு ஏன், உள்ளூர்ப் போட்டிகள் இருக்குன்னு பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தையே தரமாட்டேன்னு சொல்லிட் டாங்க. பல விஷயங்களால ஒரு கட்டத்துல இன்ட்ரஸ்ட் போயிடுச்சு. ஹெச்.ஆர் படிச்சு முடிச்சு ஒரு கார்ப்பரேட் கம்பெனில வேலை பார்த்தேன். அப்படியே நாடகம், சினிமான்னு லைஃப் மாறிடுச்சு.”
‘`நீங்க பிரபலமானது ‘லக்ஷ்மி’ குறும்படம் மூலமாதான். அந்தக் குறும்படத்துக்காக உங்களைப் பற்றி சோஷியல் மீடியால நிறைய விமர்சனங்கள் வந்தன... அதை எப்படிக் கையாண்டீங்க?’’
“பாசிட்டிவ், நெகட்டிவ்னு ஏகப்பட்ட விமர்சனங்கள். சிலர் என் போட்டோவை ப்ரொஃபைல் போட்டோவா வெச்சிக்கிட்டாங்க. சிலர் என்னையும் இயக்குநரையும் சோஷியல் மீடியால திட்டி எழுதிட்டிருந்தாங்க. நிறைய கமென்ட்ஸ் சென்ஸே இல்லாமல் இருந்தது. இதே கதையில் ஒரு பொண்ணுக்குப் பதிலா அந்த இடத்துல ஒரு ஆண் இருந்திருந்தால் யாருமே ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டாங்க. தப்புன்னா அது யார் பண்ணினாலும் தப்புதான். ஆனா, ஆணா இருந்தா தப்பில்லை, பெண்ணா இருந்தா தப்புன்னு நினைக்கிறதுதான் இங்க பிரச்னை. ‘சிந்து பைரவி’, ‘சதி லீலாவதி’ மாதிரி Extra Marital affairs பத்தி வெளியான நிறைய சினிமாக்களைப் பார்த்தி ருக்கோம். அப்போல்லாம் கோபம் வராதவங்களுக்கு ஒரு ஷார்ட் பிலிம்ல வர்ற பெண் கதாபாத்திரத்தைப் பார்த் துட்டுக் கோபம் வருதுன்னா அதுல நியாயம் இல்லை. நாலு நாள் இதைப் பத்தி யோசிச் சிட்டிருந்தேன். அப்புறம் டீல் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.”