கட்டுரைகள்
Published:Updated:

எனக்குப் பெண் ரசிகர்கள் கிடைச்சுட்டாங்க!

யாஷிகா ஆனந்த்
News
யாஷிகா ஆனந்த்

ரொம்ப நாளாகவே உடல் எடையைக் குறைக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்கு இந்த லாக்டெளன் டைம் சரியா அமைஞ்சது.’’

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த், ‘ஜாம்பி’, ‘இவன்தான் உத்தமன்’, ‘ராஜபீமா’, ‘சிறுத்தை சிவா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருக்கிறார். திடீரென உடம்பைக் குறைத்து, சீரியல்களில் தலைகாட்டிய யாஷிகாவிடம் பேசினேன்.

``பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததிற்குப் பின், உங்க வாழ்க்கை எப்படி மாறும்னு நினைச்சீங்க; அது நடந்ததா..?’’

``நான் பெரிசா எதையுமே எதிர்பார்க்க வேயில்லை. ஏன்னா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியே நான் நடிச்சிருந்த `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் ரிலீஸாகிடுச்சு. அந்தப் படம் மூலமா எனக்கு ஒரு ஃபேம் கிடைச்சது. அதனாலதான், என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே கூப்பிட்டாங்க. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியினால ஒரு விஷயம் உடைஞ்சிருக்கு. யாஷிகாவை கிளாமரான கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடலாம்கிற விஷயம் உடைஞ்சு, எந்த மாதிரியான கேரக்டரா இருந்தாலும் யாஷிகா பண்ணுவாங்கன்னு நிறைய பேருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புரிய வெச்சிருக்கு. இப்போ நான் நடிச்சிருக்கிற படங்களிலும் கிளாமர் இருக்காது. நல்ல நல்ல கேரக்டர் ரோல்களில் நடிக்கிறதுக்குத்தான் வாய்ப்புகளும் வருது. அதுமட்டுமல்லாம, நான் நினைச்சுப் பார்க்காத ஒரு விஷயமும் பிக்பாஸ் மூலமா எனக்கு நடந்திருக்கு. எனக்கு நிறைய பெண் ரசிகர்கள் கிடைப்பாங்கன்னு நான் நினைக்கவேயில்லை. பிக்பாஸிலிருந்து வெளியில் வந்ததிற்குப் பின், நிறைய ரசிகைகள் எனக்குக் கிடைச்சாங்க.’’

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

``சன் டிவியின் ‘ரோஜா’ சீரியலில் நடிக்க என்ன காரணம்..?’’

``நான் நடிச்ச அஞ்சு படங்கள் இப்போ ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. அந்தப் படங்கள் ஓடிடிலேயோ, தியேட்டர்களிலேயோ ரிலீஸாகலாம். இந்தப் படங்களெல்லாம் லாக்டெளனுக்கு முன்னாடியே முடிஞ்சிட்டதால, லாக்டெளன் டைம்ல வேலையே பார்க்காமல் இருந்தது ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு. `ரோஜா’ சீரியலோட டைரக்டர் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். அதனால, அந்த சீரியலில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சேன். மத்தபடி, எனக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிக்கிற எண்ணம் இல்லை.’’

``திடீர்னு ஸ்லிம் ஆகிட்டீங்களே..?’’

``ரொம்ப நாளாகவே உடல் எடையைக் குறைக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்கு இந்த லாக்டெளன் டைம் சரியா அமைஞ்சது.’’

``பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பி-க்காக போட்டியாளர்களைச் சித்ரவதை செய்யக்கூடாது என்றும் சமீபத்தில் ஓவியா ட்வீட் செய்திருந்தார். இதற்கு உங்களது கருத்து என்ன..?’’

``பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யணும்கிறது ஓவியாவோட கருத்து. அதுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பலை. டி.ஆர்.பி-யைப் பற்றிச் சொல்லணும்னா, ஒரு நிகழ்ச்சியோட வெற்றி தோல்வியைத்தான் டி.ஆர்.பி-யை வெச்சு முடிவு பண்ணணும்; மனுஷங்களோட கேரக்டர்களை அதை வெச்சு முடிவு பண்ண முடியாது. பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ. அந்த வீட்டிற்குள் நடக்கிறதெல்லாம் டி.ஆர்.பி-க்காக நடக்கிறது இல்லை. அங்க இருக்கிற சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி, அவங்க ரியாக்ட் பண்ணிக்கிறாங்க. அந்த ஷோ கொடுக்கிற ஸ்ட்ரெஸ்னாலதான் அங்க சண்டைகள் வருது; சண்டை நடந்ததுக்கு அப்புறம் சமாதானமும் நடக்குதுதானே. அதனால, டி.ஆர்.பி-க்காகத்தான் இதெல்லாம் பண்ணுறாங்கன்னு நான் சொல்ல மாட்டேன்.’’