Published:Updated:

சிவகார்த்திகேயன் - 2021 ஹிட் இயக்குநர் காம்பினேஷன்... என்ன ஸ்பெஷல்?

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'டான்' படத்தை பிப்ரவரி மாதத்திலும், கோடை விடுமுறையில் 'அயலான்' படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

Published:Updated:

சிவகார்த்திகேயன் - 2021 ஹிட் இயக்குநர் காம்பினேஷன்... என்ன ஸ்பெஷல்?

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'டான்' படத்தை பிப்ரவரி மாதத்திலும், கோடை விடுமுறையில் 'அயலான்' படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

சிவகார்த்திகேயன்

தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படம்தான் இன்றைய ட்ரெண்ட். வம்சி இயக்கத்தில் விஜய், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் என நம்ம ஊர் ஹீரோக்கள் இப்படியான ட்ரெண்டை பின்பற்றி தங்களது மார்கெட்டை விரிவடைய செய்கிறார்கள். தவிர, தமிழ் சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் கூடியிருக்கிறது என்றே சொல்லலாம். மேலே சொன்ன மூன்று படங்களுக்கும் தயாரிப்பாளரும் இயக்குநரும் டோலிவுட் சினிமாவை சார்ந்தவர்களே !

'டான்', 'அயலான்' என இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கின்றன. பிப்ரவரி மாதத்தில் 'டான்' படத்தையும் கோடை விடுமுறையில் 'அயலான்' படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இவ்விரண்டு படங்கள் இல்லாமல், டோலிவுட்டில் சூப்பர்ஹிட்டான 'ஜதிரத்னலு' படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வந்தது. சமீபமாக, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தப் படம் பாண்டிச்சேரியில் நடக்கும் கதை, ஹாலிவுட் நடிகை ஒருவர்தான் இதன் நாயகி என்கிறார்கள்.

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு

தெலுங்கு, தமிழில் உருவாகும் இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு பணியாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தமிழ் வெர்ஷனில் இயக்குநர் ராஜு முருகன் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. மேலும், சிவகார்த்திகேயனின் பைலிங்குவல் படத்தில் பிரேம்ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'மாநாடு' படத்தின் எடிட்டிங்கில் கலக்கிய பிரவீன் கே.எல்தான் சிவகார்த்திகேயன் படத்திற்கும் எடிட்டர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த மாதத்திலிருந்து இதற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு 'டாக்டர்' படமே தெலுங்கில் 'Varun's Doctor' என்ற பெயரில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. முதன் முதலாக சிவகார்த்திகேயன் பைலிங்குவல் படத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.