Published:Updated:

கர்ப்பத்தை அறிவித்தார் டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா; 2024-ல் திரும்பிவருவதாக உறுதி!

கர்ப்பம் ( மாதிரிப்படம் )

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நவோமி ஒசாகா, 2019-ம் ஆண்டு முதல், 25 வயதான ராப்பருடன் டேட்டிங் செய்து வருகிறார். நவோமி புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதில், “கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்றது, மிகவும் சவாலான நேரங்கள் மிகவும் வேடிக்கையாகவே இருந்தன. விளையாட்டில் இருந்து விலகிய இந்த சில மாதங்கள், என் வாழ்க்கையை நான் அர்ப்பணித்த விளையாட்டின் மீது எனக்கு ஒரு புதிய அன்பை கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார். அத்துடன் தன்னுடைய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா
ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா
ட்விட்டர்

மேலும், `வாழ்க்கை மிகவும் குறுகியது என்பதை நான் உணர்கிறேன். நான் எந்த தருணத்தையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆசீர்வாதத்துடன் கூடிய சாகசமாகும். எதிர்காலத்தில் நான் எதிர்நோக்குவதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் எதிர்நோக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், என் குழந்தை எனது ஆட்டங்களில் ஒன்றைப் பார்த்துவிட்டு, 'அது என் அம்மா' என்று யாரிடமாவது சொல்ல வேண்டும், ஹாஹா,” என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவருடைய பதிவின் முடிவில், ’வாழ்க்கையைக் கடக்க சரியான பாதை இல்லை என்று நான் நினைக்கவில்லை. நல்ல நோக்கத்துடன் முன்னேறினால், இறுதியில் உங்கள் வழியைக் கண்டுபிடிப்பீர்கள் என்று உணகிறேன்’ எனக் கூறி, ஜப்பானிய பழமொழியுடன் பதிவை முடித்துள்ளார்.

tennis
tennis

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா, ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். செப்டம்பரில் நடந்த பான் பசிபிக் ஓபனுக்குப் பிறகு, WTA சுற்றுப்பயணத்தில் போட்டியிடாததால், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிக்குத் தான் திரும்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார் நவோமி ஒசாகா.