Published:Updated:

கலகத் தலைவன்: "`யுத்தம் செய்' படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; ஆனால்..." - உதயநிதி ஸ்டாலின்

கலகத் தலைவன்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதன் முழுத்தொகுப்பு

கலகத் தலைவன்: "`யுத்தம் செய்' படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; ஆனால்..." - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதன் முழுத்தொகுப்பு

Published:Updated:
கலகத் தலைவன்
க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி. தடையற தாக்க, மீகாமன்,தடம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 'கலகத் தலைவன்' திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், 'பிக் பாஸ்' புகழ் ஆரவ், நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட இயக்குநர் மிஷ்கின், மாரி செல்வராஜ், ராஜேஷ், சுந்தர். சி, பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால்,பாபி சிம்ஹா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர்.

கலகத் தலைவன் திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா
கலகத் தலைவன் திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, " இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை கொடுத்த உதயநிதி ஸ்டாலினிற்கு  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தில் அவருடைய நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கும். " என உரையை முடித்தார். அடுத்து வந்து பேசிய இயக்குநர் ராஜேஷ், " பத்து வருடத்திற்கு முன்னால் உதயநிதியை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தை இயக்கினேன். அதை விட தற்போது இளமையாகி விட்டார். அவர் ஆரம்ப காலகட்டத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் வேறு மாதிரியான திரைப்படங்களில்  எதுவும் நடிக்க மாட்டாரா என்கிற பேச்சு எழுந்தது. தற்போது வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். உதயநிதியை அறிமுகப்படுத்திய இயக்குநர் நான்   என்பதில் மகிழ்ச்சி." என விடைபெற்றார்.

இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பிக் பாஸ்' புகழ் ஆரவ், " என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் இது. நான் மகிழ் திருமேனியின் மிகப்பெரிய ரசிகன். இத்திரைப்படத்தில் எனக்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறினார்கள் என்னை வில்லனாக ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் எழுந்தது. ஆனால் மகிழ் திருமேனியின் பயிற்சியில் நன்றாக வந்துள்ளது. "என பேசினார்.

'பிக் பாஸ்' புகழ் ஆரவ், உதயநிதி ஸ்டாலின்,  நிதி அகர்வால், மகிழ் திருமேனி
'பிக் பாஸ்' புகழ் ஆரவ், உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், மகிழ் திருமேனி

மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் சுந்தர் சி, " நான் தடம் திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகன். மகிழ் திருமேனியின் இரண்டு மணி நேரத் திரைக்கதை என்னை மிரட்டியது. நான் இந்த நடிகர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு, இதுவரை பணியாற்றாத நடிகர்கள் விஜய்யும், உதயநிதியும் தான் ." என முடித்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து வந்து பேசிய நடிகர் அருண் விஜய், " தடம் திரைப்படத்திற்கு பிறகு மகிழ் திருமேனியின் திரைப்படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்திருந்தேன். இப்போது கலகத் தலைவன் திரைப்படம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது. " என்றார். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், " லவ் டுடே திரைப்படத்திற்கு இப்போது இவ்வளவு வரவேற்பு கிடைப்பதற்கு 'ரெட் ஜெயண்ட்' நிறுவனம் தான் காரணம். அதற்காக உதயநிதி ஸ்டாலினிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். " என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், " மகிழ் திருமேனியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் காதல் காட்சிகள் அனைத்தும் என்னை ஈர்த்துள்ளது. எனது பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்துவிட்டு அவரின் தனித்துவமான குரலில் என்னை வாழ்த்தினார். உதயநிதி நடித்த திரைப்படங்களில் அதிக நாட்கள் செலவழித்தது 'மாமன்னன்' திரைப்படத்திற்கு தான்." என பேசி முடித்தார்.

இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின், "இன்று மாலை இந்தியா இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து விட்டது அதை எண்ணி வருத்தமாக இருக்கிறது." என அரங்கத்தை கைதட்டல்களால் நிரம்ப செய்த இயக்குநர் மிஷ்கின், " உதயநிதி, சினிமாவை விட்டு நான் விலகி விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார், அவரை விடாதீர்கள் வருடத்தின் 365 நாட்களில் ஒரு 100 நாட்களாவது நீங்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். உதயநிதி தான் அடுத்த கழகத் தலைவர் அதில் மாற்றமே இல்லை. " எனப் பேசினார்.

கலகத் தலைவன் திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா
கலகத் தலைவன் திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய திரைப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி படக்குழுவினருக்கு நன்றியுரையை கூறி விடை பெற்றார். நிகழ்ச்சியில் இறுதியாக வந்து பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், " மகிழ்திருமேனி திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பினை 70 நாட்களில் முடித்து விட்டோம். 2019 ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தை தொடங்கினோம், மூன்று வருடங்களாக மகிழ்திருமேனி இறுதி கட்டப் பணிகளில் வேலை பார்த்து வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டோம். அதன் பிறகு இப்படி ஒரு படம் இருக்கிறது என்பதையே மறந்து விட்டோம். யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் மிஷ்கின் தான் என்னை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது அது நடக்கவில்லை. சைக்கோ திரைப்படத்திற்காக நான் பல கடினமான சூழல்களை அனுபவித்தேன் என்று கூறினார். அப்படி ஒன்றுமில்லை. மிஷ்கின் பல காட்சிகள் கால்களுக்கு மட்டுமே வைத்துவிடுவார். அதனால் எனக்கு பதிலாக வேறு யாரையாவது வைத்து நடிக்க வைப்பார். " என நகைச்சுவை பாணியில் பேசி உரையை முடித்துக் கொண்டார்.