Published:Updated:

``பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக..." - வெற்றிமாறன் படத்தின் பாடலை வெளியிட்ட கனிமொழி எம்.பி

ஆண்ட்ரியா, எம். பி கனிமொழி, வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆர் கைசர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பாடலை வெளியிட்டுப் பாராட்டியிருக்கிறார் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

``பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக..." - வெற்றிமாறன் படத்தின் பாடலை வெளியிட்ட கனிமொழி எம்.பி

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆர் கைசர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பாடலை வெளியிட்டுப் பாராட்டியிருக்கிறார் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

Published:Updated:
ஆண்ட்ரியா, எம். பி கனிமொழி, வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் 'க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி (Grass Root Film Company)' தயாரிப்பில் ஆர் கைசர் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ளத் திரைப்படம் 'அனல் மேலே பனித்துளி'. நடிகர், பாடகர் என வலம் வரும் ஆண்ட்ரியா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபத்திரத்தில் நடிகின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில், பாடலாசிரியர் உமா தேவி வரிகளில் ஆண்ட்ரியா பாடியுள்ள 'எது நான் இங்கே...' என்னும் பெண்களை மையப்படுத்தியப் பாடலை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி பதிவிட்டுள்ள அவர், "பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும் பாடலாசிரியர் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.

இத்திரைப்படம் இந்த மாதம் (நவம்பர்) 18ம் தேதி 'SonyLIV' ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.