Published:Updated:

``நயன்தாராவால்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் சாத்தியமானது"- கீர்த்தி சுரேஷ்

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்

நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கிற `தசரா' படம் இம்மாதம் 30 -ம் தேதி நடைபெறுகிறது.

Published:Updated:

``நயன்தாராவால்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் சாத்தியமானது"- கீர்த்தி சுரேஷ்

நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கிற `தசரா' படம் இம்மாதம் 30 -ம் தேதி நடைபெறுகிறது.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்
ஸ்ரீகாந்த் ஒடலா  இயக்கத்தில், நடிகர் நானி மற்றும்  நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தசரா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பான் இந்தியா மூவியாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட  கீர்த்தி சுரேஷ், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு நயன்தாரா ஒரு மிக முக்கிய காரணமாக திகழ்ந்திருக்கிறார் என்று நயன்தாராவைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், “தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பதற்கு நயன்தாரவைதான் பாரட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்தான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

‘மாயா’ படத்தில் அவர் நடித்த பிறகுதான் மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டது.  அவர் அந்தப் படத்தில் பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்ததால் சக நடிகைகளுக்கும்  இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரால்தான்  நிறைய  பேர் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்" என்று கூறி நயன்தாராவை கீர்த்தி சுரேஷ்   பாராட்டியிருக்கிறார்.