Published:Updated:

`நான் திருமணம் செய்யப்போகும் அந்த நபர்'-கீர்த்தி சுரேஷின் வைரல் பதிவு!

கீர்த்தி சுரேஷ்

திருமணம் பற்றியான வதந்திகளுக்கு விளக்கமளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

Published:Updated:

`நான் திருமணம் செய்யப்போகும் அந்த நபர்'-கீர்த்தி சுரேஷின் வைரல் பதிவு!

திருமணம் பற்றியான வதந்திகளுக்கு விளக்கமளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்
மலையாள திரைப்படமான 'Pilots' எனும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ்.

இன்று மலையாளம், தமிழ், தெலுங்கு என கிட்டதட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகையாகப் பரிணமித்து வருகிறார். அதுமட்டுமன்றி பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இவர் அண்மையில் ’தசரா' படத்தில் தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில்,  அப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 70 - 75 லட்சம் மதிப்புள்ள சுமார் 130 பேருக்கு பத்து கிராம் கொண்ட தங்கக் காசுகளைப் பரிசாக வழங்கி டாக் ஆஃப் தி டவுனாக மாறினார். இதையடுத்து, தெலுங்கில் 'Bhola Shankar', தமிழில் மாரி செல்வராஜின் 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி, துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப் போவவதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இது சமூக வலைத்தளங்களில் பெரும்பேசுபொருளாக மாறி, நேரடியாக சிலர் கீர்த்தியிடம், 'உங்களுக்கு திருமணமா? என்று கேட்கும் அளவிற்குச் சென்றுவிட்டது.

இதையடுத்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி தானே முன்வந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கீர்த்தி, "ஹஹஹா!! இந்த நேரத்தில் என் அன்பான நண்பரை வதந்திகளில் இழுக்க வேண்டியதில்லை. நான் திருமணம் செய்யப்போகும் அந்த மர்ம மனிதரை நானே வெளிப்படுத்துவேன். அதுவரை கொஞ்சம் சில்லாக இருங்கள். ஆனால், யாரையும் இதுவரை தேர்வு செய்யவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.