Published:Updated:

Vaathi audio launch: "சம்யுத்தா மேடம்தான் என்னோட க்ரஷ்" - கென் கருணாஸ்

கென் கருணாஸ்

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கென் கருணாஸின் பேச்சு!

Published:Updated:

Vaathi audio launch: "சம்யுத்தா மேடம்தான் என்னோட க்ரஷ்" - கென் கருணாஸ்

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கென் கருணாஸின் பேச்சு!

கென் கருணாஸ்
வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில், தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, நடிகை சம்யுத்தா, இயக்குநர் பாரதி ராஜா எனப் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலகலப்பாக பேசிய கென் கருணாஸ் "திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதே போல் தான் வாத்தி திரைப்படத்திற்கும் உதவி இயக்குனராக சென்றேன். தனுஷ் சார் என்னிடம், `உனக்கு இத்திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்!' என்றார்.

கென் கருணாஸ்
கென் கருணாஸ்

அதன் பிறகு இயக்குனர் வெங்கி அத்லூரி என்னை அழைத்து நடிக்க வைத்தார். நடிப்பிலும், இயக்கத்திலும் என்னுடைய வாத்தி எப்போதும் தனுஷ் தான். இந்த படத்துல தமிழ்ல ஒரு சீன் தெலுங்குல ஒரு சீன் எடுப்பாங்க, தெலுங்குல எடுக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டேன். சம்யுத்தா மேடம்தான் என்னோட க்ரஷ். பள்ளி காலத்தில் எல்லோருக்கும் க்ரஷ் இருப்பது போல. எனக்கும் இத்திரைப்படத்தில் சம்யுக்தா மேல் கிரஷ் இருந்தது" என்றார்.