சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

புகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்!

வாணி போஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாணி போஜன்

ஒரு போட்டோகிராபரின் டைரி

கிரண் சா
கிரண் சா

கிரண் சா... ஈவென்ட் போட்டோகிராபர். இப்போது தமிழ் சினிமாவின் பிஸி செலிபிரிட்டி போட்டோகிராபர். இவர் புகைப்படம் எடுக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. இவரது ஃபேவரிட் செலிபிரிட்டி புகைப்படங்கள், அந்தப் படங்களை எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம்.

விஜய்
விஜய்

விஜய்

விஜய் சாரை `சர்கார்’ பட இசை வெளியீட்டு விழாவில் போட்டோ எடுத்தேன். விஜய் சாரோட நிறைய ஈவென்ட்ஸை எடுத்திருக்கேன். ஆனால், இந்த ஈவென்ட்டில் விஜய் சாரை மட்டும்தான் எடுக்கச் சொல்லியிருந்தாங்க. கிட்டத்தட்ட 5,000 போட்டோஸ் எடுத்திருப்பேன். அதுல இந்தப் போட்டோ செம ரீச். விஜய் சார் அவரோட ஃபேன்ஸைப் பார்த்துக் கைகாட்டின இந்தப் போட்டோவைப் பல பேனர்களில், ஆட்டோக்களில் பார்த்தேன். விஜய் சாரும், `இந்தப் போட்டோ சூப்பரா இருந்துச்சு’ன்னு சொன்னார். கிரண் செம ஹேப்பி!

த்ரிஷா
த்ரிஷா

த்ரிஷா

ருமுறை த்ரிஷா மேடத்தை ஷூட் பண்ண வாய்ப்பு கிடைச்சது. முதல் வாய்ப்பு திடீர்னு அமைஞ்சதனால, எதுவும் பெரிசா ப்ளான் பண்ணாம ஷூட் பண்ணிட்டோம். எனக்கு அந்த ஷூட்டில் திருப்தியே இல்லை. இன்னொரு நாள் அதே மாதிரி திடீர்னு போன் பண்ணி ஷூட்டுக்கு வரச் சொன்னாங்க. ஏற்கெனவே கொஞ்சம் யோசிச்சு வெச்சிருந்ததனால, ரெண்டாவது ஷூட்டை சூப்பரா எடுத்துட்டேன். ஒரு வொயிட் சாரியில அவங்க வீட்டு கார்டன்லவெச்சு போட்டோஸ் எடுத்தேன். அதைக் கொஞ்சமா எடிட் பண்ணுனதுக்கு அப்புறம் ரொம்பவே சூப்பரா இருந்துச்சு.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

நான் செலிபிரிட்டிகளை போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பிச்சதுல இருந்து, காஜல் அகர்வாலை ஷூட் பண்ணணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், அது ரொம்ப நாளா நடக்காமலே இருந்தது. ஒருநாள் அவங்களோட ஸ்டைலிஸ்ட்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘காஜல் மேம் சென்னைக்கு வர்றாங்க. அவங்களை போட்டோ எடுக்கணும்’னு சொன்னாங்க. நானும் போய் எடுத்தேன்; அந்தப் போட்டோஸ்தான் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் அவங்க எப்போ சென்னைக்கு வந்தாலும், ஒரு போட்டோ ஷூட் நடத்திடுவோம். அதுல ஒண்ணுதான் இது.

சமந்தா
சமந்தா

சமந்தா

மந்தா மேடத்தை ஒரே வாரத்தில் ஆறு போட்டோ ஷூட் பண்ணினேன். `இரும்புத்திரை’ படத்தோட வெற்றிவிழா, `யு டர்ன்’ படத்தோட பிரஸ் மீட்னு அடுத்தடுத்து சென்னைக்கு வந்தாங்க. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை போட்டோ ஷூட் எடுக்கச் சொன்னாங்க. அப்படி எடுத்த போட்டோஸ்ல ஒண்ணுதான் இது. சமந்தா மேடத்தைப் பொறுத்தவரை, ஒரு ஈவென்ட்டுக்குக் கிளம்பும்போது போட்டோஸ் எடுக்குறாங்கன்னா, அந்த ஈவென்ட் நடக்கிற ஸ்பாட்டுக்கு அவங்க போறதுக்குள்ள சில போட்டோஸ் அவங்களோட போனுக்கு வந்திடணும்னு எதிர்பார்ப்பாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நானும் வேகமா எடிட் பண்ணி அனுப்பிடுவேன்.

ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த்

ப்ரியா ஆனந்த்

ரு ஃபிரெண்ட் மூலமா ப்ரியா ஆனந்த் பழக்கமானாங்க. முதலில் அவங்களைவெச்சு சின்னதா ஒரு ஷூட் பண்ணினேன். அப்புறம் அவங்களே ஒருநாள் போன் பண்ணி, ‘நாம கோவா போய் ஒரு ஷூட் பண்ணலாம்’னு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. `அவங்களைவெச்சு பிளாக் அண்டு வொயிட்ல ஒரு ஷூட் பண்ணலாம்’னு ஐடியா வந்துச்சு. கோவா பீச்ல ஒரு நாள் முழுக்க இந்த ஷூட்டை எடுத்தோம்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

`நடிகையர் திலகம்’ படத்திலிருந்து கீர்த்தி மேடத்தின் எல்லா ஷூட்டும் நான்தான் எடுத்துட்டிருக்கேன். சமீபத்தில், அவங்க வெயிட் லாஸ் பண்ணிட்டு, ஒரு போட்டோ ஷூட் எடுக்கணும்னு சொன்னாங்க. ஒரு ஈவென்ட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி என்னை போட்டோ எடுக்கச் சொன்னாங்க. அப்போ நான் எடுத்த போட்டோஸ் எனக்கே திருப்தி இல்லை. அதனால், அவங்க ஈவென்டுக்குப் போயிட்டு வந்ததும், ஒரு மணி நேரம் போட்டோ ஷூட் எடுத்தேன். நீங்க பார்க்கிறது அதுல ஒரு போட்டோதான். இந்தப் போட்டோஸ் வெளியில வந்ததும், ரொம்பவே பேசப்பட்டுச்சு.

அமலா பால்
அமலா பால்

அமலா பால்

`திருட்டுப்பயலே - 2’ படத்திலிருந்து அமலா பால் மேடத்துக்கு ஷூட் பண்ணிட்டிருக்கேன். அவங்களைவெச்சு நிறைய ஷூட் பண்ணியிருந்தாலும், பீச்ல ஒரு போட்டோ ஷூட் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஈ.சி.ஆர்-லதான் இந்தப் போட்டோஸ் எடுத்தோம். ஆனால், இது ஈ.சி.ஆர் மாதிரியே தெரியாது. ஏதோ வெளியூர்ல எடுத்த மாதிரி இருக்கும். அமலா பால் மேடத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு போட்டோகிராபர் - க்ளையன்ட்ங்கிறதைத் தாண்டி பர்சனலா ரொம்ப கனெக்ட்டடா இருப்பாங்க.

சாயிஷா
சாயிஷா

சாயிஷா

சாயிஷாவை ஃபர்ஸ்ட் டைம் ஷூட் பண்ணும்போது, அவங்களை அவுட்டோரில்வெச்சு போட்டோஸ் எடுத்தேன். போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே பயங்கரமா வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. ‘அஞ்சு நிமிஷம் மட்டும் கொடுங்க மேம்; எடுத்து முடிச்சிடுறேன்’னு சொன்னேன். ‘ஒரு மணி நேரம்கூட எடுத்துக்கோங்க. போட்டோஸ் நல்லா வந்தா போதும்’னு சொன்னாங்க. நல்லா நேரம் எடுத்துக்கிட்டுப் பண்ணின ஷூட்தான் இது!

வரலட்சுமி
வரலட்சுமி

வரலட்சுமி

ரு மேடம், ‘போட்டோ ஷூட் எடுக்கலாம்’னு அவங்களா சொல்லவே மாட்டாங்க. நாம போன் பண்ணி, ‘ஒரு ஷூட் பண்ணலாமா?’ன்னு கேட்டா, உடனே ஓகே சொல்லிடுவாங்க. `இவங்களுக்கு எது செட்டாகும்; செட்டாகாது’ன்னு தெரிஞ்சுக்கவே எனக்கு ரெண்டு ஷூட் ஆச்சு. அதுக்கப்புறம் அவங்களை எப்படி ஷூட் பண்ணுனா நல்லா இருக்கும்னு ப்ளான் பண்ணிட்டு, எடுத்த ஷூட்தான் இது.

நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி செம ஃபன்னான ஆள். இந்த போட்டோ ஷூட்டுக்காகக் கிட்டத்தட்ட மூணு மணி நேரம் வெயிட் பண்ணினாங்க. ஒருநாள் போன் பண்ணி ஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. அன்னிக்கி நான் வேற ஒரு ஷூட் புக் பண்ணிட்டேன். அதனால, ‘இந்த டைம் மட்டும் வேற ஆளைவெச்சு ஷூட் பண்ணிக்கோங்க’ன்னு சொன்னேன். `நீ அந்த ஷூட்டை முடிச்சுட்டு வா. நான் வெயிட் பண்றேன்’னு சொன்னாங்க. `1 மணிக்கு வரேன்’னு சொல்லிட்டு, 4 மணிக்குத்தான் போனேன். எதுவுமே சொல்லாம, வெயிட் பண்ணி, இந்த ஷூட்டை எடுத்தாங்க. அதனாலேயே இது எங்களுக்கு ஸ்பெஷல் ஷூட்.

பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கர்

`மான்ஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில்தான் முதல்முறையா பிரியா பவானி ஷங்கரைப் போட்டோ எடுத்தேன். அந்தப் போட்டோக்களில் அவங்களோட லுக் ஏதோ செட்டாகாத மாதிரி இருந்துச்சு. அவங்க மேக்கப் போட்டால் கொஞ்சம் பெரிய பொண்ணு மாதிரி தெரியறாங்க. அதனால் அவங்ககிட்ட, ‘மேக்கப் போடாமல் ஒரு போட்டோ ஷூட் எடுக்கலாம்’னு சொன்னேன். அவங்களும் அதுக்கு ஓகே சொன்னாங்க. `வெள்ளை டிரெஸ் மட்டும் போட்டுக்கோங்க; காலையில 5 மணிக்கு பீச்ல போட்டோஸ் எடுக்கலாம்’னு சொல்லி, எடுத்தோம். இந்தப் போட்டோ சோஷியல் மீடியாவில் நல்ல டிரெண்ட் ஆச்சு.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவி சார் குடும்பத்தோடு ஒரு விருது விழாவுக்குக் கிளம்பிட்டிருந்தார். `இந்தத் தருணத்தைப் போட்டோ எடுத்துவெச்சுக்கலாம்’னு ஜெயம் ரவி சாரோட மனைவி ஆர்த்தி அக்காதான் என்னை போன் பண்ணி வரச்சொன்னாங்க. நானும் போய் எல்லோரையும் தனித்தனியா, குடும்பமா போட்டோக்கள் எடுத்தேன். அதுல இந்தப் போட்டோ பெருசா ரீச் ஆச்சு. ரவி சார் அண்டு ஆர்த்தி அக்கா, அவங்களோட பையனைப் பார்க்கிற மாதிரி, செம எமோஷனலா இந்தப் போட்டோ இருக்கும். அவங்களுக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

டிடி
டிடி

டிடி

ரொம்ப நாளா ப்ளான் பண்ணி எடுத்த ஷூட் இது. அவங்க அதிகமா ஸ்டூடியோக்குள்ளதான் போட்டோஸ் எடுத்திருக்காங்க. எனக்கு எப்பவுமே அவுட்டோர் ஷூட்தான் பிடிக்கும். அவங்களைவெச்சு அவுட்டோர் ஷூட் பண்ணலாம்னு, சென்னை நேப்பியர் பாலத்துக்குப் போனோம். அந்தப் பாலத்தோட வளைவுல அவங்களை நிறைய போட்டோக்கள் எடுத்தேன். அதுவரைக்கும் யாரும் அவங்களை அப்படியெல்லாம் போட்டோ எடுக்கலை. இந்த ஷூட் பெருசா பேசப்பட்டுச்சு.

வாணி போஜன்
வாணி போஜன்

வாணி போஜன்

வாணி போஜன் `தெய்வமகள்’ சீரியலில் நடிச்சதனால, அந்த சத்யா கேரக்டரை யாரும் மறக்கலை. அவங்களை அதிகமா புடவை கட்டித்தான் பார்த்திருக்காங்க. நான் அவங்ககிட்ட, ‘உங்களை வெஸ்டர்ன் ஸ்டைலில் போட்டோஸ் எடுக்கணும்’னு சொன்னேன். அவங்க ஓகே சொன்னதும், பாண்டிச்சேரியில போட்டோஸ் எடுத்தோம். அந்தப் போட்டோக்களால பட வாய்ப்புகள் வந்துச்சுன்னு சொன்னாங்க.