Published:Updated:

Kollywood: மாவீரன் டு மாமன்னன் வரை - ஜூன், ஜூலை ரிலீஸாகும் படங்கள்!

மாவீரன்

இந்த ஜூன் மாதத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படமும் திரைக்கு வர ரெடியாகிறது.

Published:Updated:

Kollywood: மாவீரன் டு மாமன்னன் வரை - ஜூன், ஜூலை ரிலீஸாகும் படங்கள்!

இந்த ஜூன் மாதத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படமும் திரைக்கு வர ரெடியாகிறது.

மாவீரன்
கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி எனப் பல டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் இந்தக் கோடையில் வெளிவராமல்போனதால், ஹாலிடே சம்மர், ரசிகர்களுக்கு ஜாலிடே சம்மராக இல்லாமல்போனது.

இந்நிலையில் வருகிற ஜூன், ஜூலையில் சிவகார்த்திகேயன், விஷால், 'ஜெயம்' ரவி, ஆர்யா, சந்தானம் உட்பட பலரின் படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதுகுறித்த தகவல் இனி..

வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி
வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி

’விருமன்' முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடித்த 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படமும், மரகதநாணயம்' ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் 'ஹிப்ஹாப்' ஆதி நடிக்கும் 'வீரன்' படமும் வருகிற ஜூன் 2-ம் தேதி வெளியாகின்றன. வீரன் படம் ஃபேன்டஸி காமெடி ஆகும்.

'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'
'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'

இந்த ஜூன் மாதத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படமும் திரைக்கு வர ரெடியாகிறது. சந்தானம் டீமில் உள்ள எஸ். பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். 'சபாபதி' படத்தைத் தயாரித்த ரமேஷ்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

அருண் விஜய், எமி ஜாக்சன்
அருண் விஜய், எமி ஜாக்சன்

கார்த்தியின் 'காஷ்மோரா' உட்பட பல படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சிங்கப்பூர் சலூன்' படத்தையும், 'மதராசப்பட்டினம்' விஜய் இயக்கத்தில் அருண்விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர் 2' படத்தையும் வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர்.

இதற்கிடையே 'கர்ணன்' மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேல், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'மாமன்னன்' ஜூன் 28-ம் தேதி வெளியாகிறது. இது உதயநிதி கடைசியாக நடித்த படமாகும்.

சிவா, சரிதா
சிவா, சரிதா

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மண்டேலா' மடோன் அஸ்வின் இயக்கியுள்ள 'மாவீரன்' ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. சிவாவின் ஜோடியாக அதிதி ஷங்கரும், மிஷ்கின், சரிதா எனப் பலரும் நடித்துள்ளனர். இதே நாளில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருக்கும் 'இறைவன்' படமும் வெளியாகிறது. இந்தப் படத்தை 'என்றென்றும் புன்னகை' அஹமத் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ஜூன் 28-ல் 'மாமன்னன்' வருவதைப் போல, ஜூலை 28-ல் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' ரிலீஸ் ஆகிறது. பீரியட், டைம் டிராவல் கலந்த ஜானரான இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

தவிர, ஜூலையில் சந்தானம் நடித்த 'வடக்குப்பட்டி ராமசாமி', 'கிக்' ஆகிய படங்களையும் திரைக்குக் கொண்டு வரத்திட்டமிட்டு வருகின்றனர்.