கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட் ஸ்பைடர்

லிஜோ மோள், அவர் நடித்த ‘ஜெய்பீம்' படத்தின் செங்கேணி மாதிரியான கேரக்டர்களே மீண்டும் மீண்டும் அவரைத் தேடி வர, தவிர்த்துவருகிறாராம்.

‘பொன்னியின் செல்வன்-1'ல் பாடல் எழுதிய இளங்கோ கிருஷ்ணன், அதன் இரண்டாம் பாகத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்திய ‘அகநக' பாடலுக்குக் கிடைத்த வரவேற்பில் மகிழ்கிறார் அவர். அடுத்து பிரபாஷின் பிரமாண்ட படமான ‘ஆதிபுருஷ்' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். இதனைத் தொடர்ந்து மாதவன் நடிக்கும் படம் உட்பட நான்கைந்து படங்களில் பிஸியாகிவிட்டார்.

லிஜோமோல்
லிஜோமோல்

`சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 42', சூர்யாவின் முந்தைய படங்களைவிட, மூன்று மடங்கு பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் படத்தின் புரொமோ வீடியோவையும், மே மாதத்தில் டீசரையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லிஜோ மோள், அவர் நடித்த ‘ஜெய்பீம்' படத்தின் செங்கேணி மாதிரியான கேரக்டர்களே மீண்டும் மீண்டும் அவரைத் தேடி வர, தவிர்த்துவருகிறாராம். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் லிஜோ, ரொம்பவே தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது தமிழில் நடித்துவரும் ‘அன்னபூரணி', ‘காதல் என்பது பொதுவுடமை', ‘காகங்கள்' ஆகிய மூன்றுமே லிஜோவுக்குப் பெயர் வாங்கிக்கொடுக்கும் படங்களாக இருக்குமாம்.

கோலிவுட் ஸ்பைடர்

ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே ஹன்சிகாவை வைத்து வெப்சீரீஸ் ஒன்றையும் இயக்கி முடித்துவிட்டார் ராஜேஷ். விரைவில் ஓ.டி.டி-யில் அதனை எதிர்பார்க்கலாம்.

விஜய்யின் ‘பீஸ்ட்'டில் தீவிரவாதியாக நடித்த மல்லுவுட் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அதன்பின் மீண்டும் மலையாளத்தில் பிஸியானார். இதற்கிடையே தெலுங்கில் நானியின் ‘தசரா'விலும் நடித்துமுடித்தவரை, மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவரது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸில்' கெத்தான ரோலில் நடித்துவருகிறார் ஷைன்.

ஷைன் டாம் சாக்கோ
ஷைன் டாம் சாக்கோ

lijoo ‘சந்திரமுகி-2' படப்பிடிப்பில் பி.வாசுவிற்கும், வடிவேலுவிற்கும் சண்டை என்றும் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு திட்டிவிட்டார் என்றும் ஏகத்துக்கும் இணையதளங்களில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதுபற்றி விசாரித்தால், யூனிட்டினர் மறுக்கிறார்கள். ‘‘அப்படியெதுவும் இல்லை. மைசூர், ஹைதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பிலும் வடிவேலு கலந்துகொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார். ‘சந்திரமுகி-2' படப்பிடிப்பு முழுவதும் முடிந்தும்விட்டது'' என்கிறார்கள்.