
‘விடுதலை' பாகம் ஒன்றில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், தலைமைச் செயலாளராக நடித்துள்ளார். படப்பிடிப்பில் அவரது தமிழை விஜய்சேதுபதி ரொம்பவே ரசித்துப் பாராட்டியிருக்கிறார்
‘பிரேமம்' அனுபமா பரமேஸ்வரன், சில படங்களில் உதவி இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். விரைவில் அவர் இயக்குநராகவும் ஆவார் என அவருடைய நட்பு வட்டத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் கணிக்கமுடியாத வகையில் அவர் ஒளிப்பதிவாளர் ஆகியிருக்கிறார். ‘ஐ மிஸ் யூ' என்ற குறும்படத்திற்கு அனுபமாதான் ஒளிப்பதிவு. நடிப்பு உட்பட அப்படத்தில் இடம்பெற்றவர்கள் அத்தனை பேரும் அனுபமாவின் நண்பர்களாம்.

மீண்டும் ஹீரோயின் சென்ட்ரிக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா. ஷங்கரின் உதவியாளர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75' என தற்காலிகமாகத் தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு திருச்சி, சென்னை என நடக்கிறது. நயனின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் இது.
‘பீஸ்ட்'டிற்குப் பிறகு தெலுங்கு, இந்திப் பக்கம் சென்றுவிட்டார் பூஜா ஹெக்டே. இந்தியில், சல்மான்கானுடன் நடித்த ‘கிசி கா பாய் கிசி கி ஜான்' இவ்வாண்டின் முதல் ரிலீஸாக, இந்த ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாவதால் புன்னகையில் பூரிக்கிறார் பூஜா. அந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவாக டோலிவுட் வெங்கடேஷும் நடித்திருக்கிறார். அடுத்து, மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் பூஜா.

‘விடுதலை' பாகம் ஒன்றில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், தலைமைச் செயலாளராக நடித்துள்ளார். படப்பிடிப்பில் அவரது தமிழை விஜய்சேதுபதி ரொம்பவே ரசித்துப் பாராட்டியிருக்கிறார். ‘‘இந்தப் படத்திற்காக வெற்றி என்னை அழைப்பதற்கு முன்புதான் ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அவர் நடிக்கக் கேட்டதும் உடனே சம்மதித்து விட்டேன். கமல் சார் சொல்வதுபோல, எனக்குள் இருந்த நடிகரை எழுப்பிவிட்டார் வெற்றிமாறன்'' என்கிறார் ராஜீவ் மேனன்.
மலையாளத்தில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்', ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்', `ஒன்', ‘மாலிக்' எனப் பல படங்களில் தன் தனித்துவமான நடிப்பினால் கவனம் ஈர்த்த நிமிஷா சஜயனை முதன்முறையாக தமிழுக்கு அழைத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். எமி ஜாக்சன் மீண்டும் நடிக்க, ‘மிஷன் 1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்குகிறார் விஜய். இதில், நிமிஷாவுக்கு அழுத்தமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாம். `இதற்குப் பின் தமிழில் ஒரு சுற்று வருவார் நிமிஷா' என்கிறது விஜய்யின் யூனிட்.

நடிப்பில் மீண்டும் பிஸியாகிவிட்டார் மாதவன். ‘விக்ரம் வேதா' தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிப்பில் ஒரு படம், அதில் மாதவனுடன் சித்தார்த்தும் இணைந்து நடிக்கிறார். இது தவிர, ஜி.டி.நாயுடுவின் பயோபிக் மற்றும் மித்ரன் ஆர்.ஜவகரின் படம் என வரிசையாக மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் மேடி.