
மறுபடியும் விஜய் தன் மகன் சஞ்சய்யை மேற்படிப்பு படிக்க லண்டன் அனுப்பிவிட்டார். சினிமா என்ட்ரி நிச்சயம் என்றாலும், இப்போது படிப்பு அவசியம் என முடிவு செய்துவிட்டாராம் விஜய்.
‘ரஜினி அடுத்தடுத்து செய்யப்போகும் படங்களுக்கான கதைகளை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒரு தடவை சொல்லிவிடுங்கள்' என்று இயக்குநர்களுக்கு இப்போது அறிவுறுத்தப்படுகிறதாம். இறுதி முடிவு ரஜினிதான் என்றாலும், கதையில் தான்தான் நடிக்கவேண்டும் என்பதற்கான காரணங்கள், கதையின் வெயிட் என எல்லாவற்றையும் ரவிக்குமார் எடை போடமுடியும் என்று ரஜினி நினைக்கிறாராம். கே.எஸ்.ஆரும் இதனை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு கடமையாற்றிவருகிறாராம்.

மறுபடியும் விஜய் தன் மகன் சஞ்சய்யை மேற்படிப்பு படிக்க லண்டன் அனுப்பிவிட்டார். சினிமா என்ட்ரி நிச்சயம் என்றாலும், இப்போது படிப்பு அவசியம் என முடிவு செய்துவிட்டாராம் விஜய். சஞ்சய்யும், அப்பாவின் விருப்பத்தைத் தட்டமுடியாமல் லண்டன் சென்றிருக்கிறார். முன்னதாக, தாத்தா, பாட்டியின் (எஸ்.ஏ.சந்திரசேகர்- ஷோபா) ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் விமானமேறியிருக்கிறார் பேரன்.
பிரியா பவானி சங்கர், வரிசையாக படங்களில் இடம்பிடித்துவிடுகிறார். அவருடன் போட்டியில் நிற்கமுடியாமல் திணறுகிறாராம் பிரியங்கா மோகன். போட்டி அளவுக்கு அதிகமாகப் போய், இருவரிடையேயான நட்பிலும்கூட உரசல் என்கிறார்கள். சமீபத்தில் ஒரு திருமணத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இருவரும் வெவ்வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கடந்துவிட்டார்களாம்.

‘சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா' படப்பிடிப்பு இதுவரை ஐம்பது சதவிகிதம் நிறைவடைந்திருக்கிறது. மே மாதத்தோடு மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுகிறார்கள். ஆனாலும், படத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்குத்தான் திரைக்குக் கொண்டு வருகிறார்களாம். படப்பிடிப்பின் கடைசி நாளில்தான், ரிலீஸ் தேதியை அறிவிக்கவிருக்கிறார்களாம். ‘‘இந்தப் படம் 3டி மற்றும், பத்து மொழிகளில் வரவிருப்பதால், கிராபிக்ஸ் உள்ளிட்ட இதர வேலைகள் அதிகமாக இருப்பதுதான் ரிலீஸ் தேதி தள்ளிப்போகக் காரணம்'' என்கிறார் `சிறுத்தை' சிவா.
கமல், ‘இந்தியன் 2' படப்பிடிப்பிற்காகத் தென்னாப்பிரிக்கா போயிருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அடுத்த படத்திற்காக மணிரத்னத்தோடு இணையத்தில் பேசுகிறார். நடிகர்கள் யார் யாரைத் தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் கமலோடு விவாதிக்கப்படுகிறதாம். இன்னும் மூன்று மாதங்களில் மணிரத்னத்தின் கதை ரெடியாகிவிடும் என்று தெரிகிறது. தயாரிப்பில் லைகாவின் பங்கும் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

பி.வாசுவின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் ‘சந்திரமுகி 2' படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை நோக்கி மும்முரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கங்கனா ரணாவத், வடிவேலு ஆகியோரின் போர்ஷன்களையும் படமாக்கிவிட்டனர். இன்னும் இரண்டு பாடல் காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சியும் மட்டுமே எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகக்கூடும்!