கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

சூர்யா, ஹரி
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா, ஹரி

தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சித்திரை ஸ்பெஷலாக போஸ்டர் ஒன்றையும் வெளியிடுகின்றனர்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, ‘லியோ‘வுக்கான காஷ்மீர் ஷெட்யூலை முடித்து, சென்னையில் முகாமிட்டிருக்கிறது. ஸ்டூடியோ ஒன்றில் வீடு செட் தயாராகிவருகிறது. விரைவில் விஜய், த்ரிஷா காம்பினேஷனில் ஷூட் நடக்கவிருக்கிறது. சென்னை செட்யூலுக்குப் பிறகு இந்த டீம் ஹைதராபாத் பறக்கலாம் என்கின்றனர்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
விஜய் - லோகேஷ் கனகராஜ்

கன்னியாகுமரி பகுதியில் நடந்துவந்த பாலாவின் ‘வணங்கான்‘ படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. இதற்கு முன் சூர்யாவை வைத்து அவர் படமாக்கிய தோற்றத்திலேயே அருண்விஜய் தோற்றமும் இருக்கிறது என்கிறார்கள். அடுத்தகட்டப் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடக்க உள்ளதால், லொக்கேஷன் பார்க்கச் சென்றிருக்கிறார் பாலா.

தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சித்திரை ஸ்பெஷலாக போஸ்டர் ஒன்றையும் வெளியிடுகின்றனர். படத்தை தீபாவளிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர். இன்னொரு விஷயம், கார்த்தியின் ‘ஜப்பான்‘ படமும் தீபாவளி அன்றுதான் வெளியாகவிருக்கிறதாம்.

சூர்யா, ஹரி
சூர்யா, ஹரி

இயக்குநர் ஹரியின் பல வருடக் கனவு இப்போது நனவாகியிருக்கிறது. சென்னையில் நவீன வசதிகளுடன் ப்ரீவியூ தியேட்டர் ஒன்றைக் கட்ட வேண்டும் எனத் திட்டமிட்டு வந்தார். இந்த வருடம் கட்டி முடித்துவிட்டவர், ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனப் பெயரும் வைத்திருக்கிறார். ரெக்கார்ட்டிங், எடிட்டிங், டப்பிங் என அனைத்து வசதிகளுமே உண்டு. சூர்யாவிடம் இதைத் திறந்து வைக்கச் சொல்லி ஹரி கேட்க, ரொம்பவே சந்தோஷமாக சம்மதித்து திறந்து வைத்திருக்கிறார் சூர்யா.

 அஜித்
அஜித்

அஜித், மகிழ்திருமேனியின் ‘ஏகே 62‘ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏப்ரல் 14-ல் அறிவிக்கவும், படப்பிடிப்பை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ல் தொடங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

தனது ‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ மூலம், மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இது குழந்தைகளுக்கான படம் என்றும், எண்பது, தொண்ணூறு காலகட்டத்துக் குழந்தைகளின் விளையாட்டுகளின் மகத்துவத்தை இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு உணர்த்தும் படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.