கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட் ஸ்பைடர்

விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஓ.டி.டி ரைட்ஸை ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. முதல் பாகம் எல்லா மொழிகளிலும் வரவேற்பை அள்ளியதால், இதனையும் தென்னிந்திய மொழிகளில் டப் செய்துவருகிறார்கள்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’, துருக்கியில் ஓஹோவென ஆரம்பமாகி, அங்கேயே ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பும் நடந்தது. அதன்பின் நிதி நெருக்கடி காரணமாக அவ்வப்போது படப்பிடிப்பு நடந்துவந்தது. கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்தும்விட்டது. இந்நிலையில் விக்ரமின் முயற்சியால் மிச்சப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்து, படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஜூனில் வரும் என்கிறார்கள்.

‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், நிவின்பாலி நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை இயக்கி முடித்துவிட்டார் ராம். அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, மலையாள நாயகி கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதன் படப்பிடிப்பையும் தொடக்கியுள்ளார். இதில் நிவின்பாலி படத்தை கோடைக் கொண்டாட்டமாகக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.

கோலிவுட் ஸ்பைடர்

ஆர்யாவை ‘டார்லிங்' என்றுதான் கூப்பிடுகிறார் பாபி சிம்ஹா. சமீபத்தில் அவர் நடித்த ‘வசந்த முல்லை'யில் கெஸ்ட் ரோலில் ஆர்யா நடித்துக்கொடுத்திருந்தார். ‘‘நண்பன்கிட்ட ‘ஒரு சின்ன ரோல் இருக்கு. பண்ணுறியா’ன்னு கேட்டேன். ‘எப்போன்னு சொல்லுடா'ன்னு உரிமையா கேட்ட டார்லிங், அவரது படப்பிடிப்பையும் விட்டுட்டு வந்து நடித்துக் கொடுத்தார். ஆர்யாவுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்'' எனப் புகழ்கிறார் பாபி.

விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஓ.டி.டி ரைட்ஸை ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. முதல் பாகம் எல்லா மொழிகளிலும் வரவேற்பை அள்ளியதால், இதனையும் தென்னிந்திய மொழிகளில் டப் செய்துவருகிறார்கள். விபத்துக்குப் பின் உடல்நலம் தேறிவரும் விஜய் ஆண்டனி, இப்போது படத்தின் போஸ்ட் புரொக்டக்‌ஷன் வேலைகளையும் கவனித்துவருகிறார்.

கோலிவுட் ஸ்பைடர்

இளையராஜாவின் இசையில் பாடிய சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். ராஜாவின் எழுபது, எண்பது காலகட்டப் பாடல்கள் அத்தனையும் தனுஷிற்கு அத்துப்படி. இது அவரது நண்பரான வெற்றிமாறனுக்கும் தெரிந்த சேதிதான். தனுஷ், ஒரு பாடகராக வலம் வந்தாலும், ராஜாவின் இசையில் பாடியதில்லை. இந்நிலையில் ‘விடுதலை'யில் இசைஞானி இணைந்திருப்பதால், இதில் தனுஷைப் பாட வைக்கலாம் என வெற்றி விரும்பி இளையராஜாவிடம் சொல்ல, அவரும் மகிழ்ந்து வரச் சொல்லியிருக்கிறார். இன்னமும் நம்ப முடியாத ஆச்சரியத்தில் மிதக்கிறார் தனுஷ்.

‘பருத்தி வீரன்’, ‘ஆதிபகவன்’ படங்களுக்குப் பிறகு, ஒரு சில வருட இடைவெளிக்குப் பின் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தை இயக்குகிறார் அமீர். கதையை வெற்றிமாறன், தங்கம் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். சூரி, ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடந்துவருகிறது.