அலசல்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட் ஸ்பைடர்

சசிகுமாரின் ‘பிரம்மன்’ உட்பட தமிழில் ஒருசில படங்களில் நடித்த டோலிவுட் நாயகி லாவண்யா திரிபாதி, அதன் பின் தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

‘கார்கி’க்குப் பிறகு கதைகள் தேர்வில் தனிக் கவனம் செலுத்துகிறார் சாய் பல்லவி. ‘மாவீரன்’ படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என்கிறார்கள். அதில் சிவாவின் ஜோடியாகும் சாய் பல்லவி, அடுத்து மீண்டும் ஹீரோயின் சென்ட்ரிக் படம் ஒன்றில் நடிக்கிறார். அதில் விதார்த் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், அதனை லைகா தயாரிக்கிறது என்றும் தகவல்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ‘ஸ்ரீதேனாண்டாள்’ முரளி இருந்துவருகிறார். இந்தச் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் மார்ச்சில் முடிவடைகிறது. அதனால் 2023 - 2026-ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னையில் பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது.

கோலிவுட் ஸ்பைடர்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கொடும்பாளூர் இளவரசி வானதியாக நடித்தவர் சோபிதா துலிபாலா. இதன் பிறகு ‘பொன்னியின் செல்வன் 2’-டையும் முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அங்கே ‘சிதாரா’ என்ற படத்திலும், ‘தி நைட் மேனேஜர்’ என்ற வெப்சீரீஸிலும் நடித்திருக்கும் சோபிதா, அமெரிக்காவிலும் ஒரு கலக்கு கலக்க இருக்கிறார்... ‘மங்கிமேன்’ என்ற அமெரிக்கப் படத்திலும் நடித்துவருகிறார் சோபிதா.

கோலிவுட் ஸ்பைடர்

‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல், அடுத்து பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். சென்ற ஆண்டு தொடங்கிய அதன் படப்பிடிப்பு இவ்வாண்டு ஜூலை வரை நீடிக்கும் என்கிறார்கள். அதில் பிரபாஸின் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துவருகிறார். பேன் இந்தியா படமாக உருவாகி வரும் ‘சலா’ரைப் பெரிதும் எதிர்பார்க்கிறார் ஸ்ருதி. இன்னொரு பக்கம், ‘சலார்’ படப்பிடிப்பே மிரட்டுகிறது. ‘‘பிரசாந்த் நீல் அருமையான மனிதர்... ‘கே.ஜி.எஃப்’ படங்களை விட பிரமாண்ட மேக்கிங்காக இருக்கும்’’ என்கிறார் அதில் நடித்துவரும் ‘மைம்’ கோபி.

சசிகுமாரின் ‘பிரம்மன்’ உட்பட தமிழில் ஒருசில படங்களில் நடித்த டோலிவுட் நாயகி லாவண்யா திரிபாதி, அதன் பின் தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழுக்கு வந்திருக்கிறார். அதர்வாவின் ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘100’, ‘ட்ரிக்கர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அதர்வா, இதில் போலீஸாகக் களமிறங்கியிருக் கிறார்.

கோலிவுட் ஸ்பைடர்

‘‘அடிக்கடி ட்விட்டர்ல ஏதாவது ஒரு தத்துவமோ, அல்லது மோட்டிவேஷன் ட்வீட்டோ போடுறீங்க... எந்த மனநிலையோடு அப்படிப் பதிவிடுறீங்க?’’ என்ற கேள்வியை சமீபத்தில் செல்வ ராகவனிடம் கேட்டிருக் கிறார்கள். அதற்கு செல்வா சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘‘நண்பா.. நான் பட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அதை உனக்கு புத்திமதியா சொல்லல. நான் பார்த்துட்டு வந்த விஷயத்தை, மத்தவங்களுக்கும் பயன் படட்டுமேன்னு பகிர்ந்துக்கறேன். அவ்ளோதான்'’ என்றாராம்.