கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

விஜய் தேவரகொண்டா - சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் தேவரகொண்டா - சமந்தா

இனிமேல் படங்கள் வெளியீட்டில் தலையிடுவதில்லை என உதயநிதி முடிவு செய்துவிட்டார்.

விஜய் தேவரகொண்டாவோடு தெலுங்கில் சமந்தா நடித்துவரும் படம் ‘குஷி.’ கடந்த மே மாதத்துக்கு முன்பு காஷ்மீரில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்குக் கிளம்ப ரெடியானார்கள். ஆனால், சமந்தாவுக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பால் அதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது, வரும் ஜனவரியில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், இந்த முறையும் சமந்தாவால் படப்பிடிப்பு தள்ளிப்போயிருக்கிறதாம். இதனால் கடுப்பான விஜய் தேவரகொண்டா இதற்காகக் கொடுத்திருந்த தேதிகளையெல்லாம் வேறு படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

தனுஷின் ‘வாத்தி' படம் ரிலீஸ் ஆவதில் பஞ்சாயத்து ஏற்பட்டிருக்கிறது. படத்தை வாங்கிய தரப்பும், படத்தைத் தயாரித்தவர்களும் பிரச்னைகளை தனுஷ் முன்னிலையில் தீர்த்துக்கொள்ள அவரிடம் நேரம் கேட்டிருக்கிறார்கள். ‘படத்தில் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டேன். இது மாதிரி பேச்சுவார்த்தைகளில் என்னை இழுக்காதீர்கள்’ என்று சொல்லித் தவிர்த்துவிட்டாராம் தனுஷ். இதனால் தயாரிப்பாளரும் வாங்கியவரும் திகைத்துப் போய்விட்டார்களாம். இந்தச் சூழ்நிலையைச் சுலபமாக சமாளிக்க, நமக்குள் ஒற்றுமை அவசியம் என முடிவு செய்து, பிரச்னையை அவர்களே தீர்த்துக்கொள்ளப் போகிறார்களாம்.

கோலிவுட் ஸ்பைடர்

இனிமேல் படங்கள் வெளியீட்டில் தலையிடுவதில்லை என உதயநிதி முடிவு செய்துவிட்டார். படம் வாங்கும்போது மட்டும், அமைச்சர் பணிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல், `இரவு வந்து முடிவு சொல்வேன்’ என்று சொல்லிவிட்டாராம். படங்களை வெளியிடத் தேர்வு செய்வதற்காக அவரின் திரைப்பட நண்பர்கள் சார்ந்த குழு பல்வேறு தரப்பிலிருந்தும் தயாராகிறதாம். ரெடியானதும் அதற்கு ஒப்புதல் அளித்து அந்த வேலைகளிலிருந்து விடுதலை ஆகிறார் சின்னவர். ஏற்கெனவே பார்த்து ஓகே ஆன புராஜெக்ட்டுகள் முடியவே ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக்கத் தீர்மானித் திருக்கிறார்கள். அதற்காக எந்த இயக்குநரைத் தேர்வுசெய்யலாம் என அறிவாலயத்தில் ஒரு பேச்சுவார்த்தை தனியாக போய்க்கொண்டிருக்கிறதாம். வெற்றிமாறனைத்தான் நிறைய பேர் தேர்ந்தெடுத்து, சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவரோ ஏற்கெனவே டைட் ஷெட்யூலில் இருக்கிறார். இருந்தாலும், ‘அதையும் தாண்டி இதை அவரால் செய்து தர முடியுமா?’ என்று அவர் காதுக்குச் செய்தி போயிருக்கிறது. அவர் ஓகே சொல்லிவிட்டால் பெரும் பொருட்செலவில் வாழ்க்கை சரிதம் படமாகும் என்று சொல்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

அட்லி வீட்டில் விசேஷம். அட்லி - ப்ரியா தம்பதியினரின் வளைகாப்பு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சீரும் சிறப்புமாக நடந்தது. இருவரும் தங்களது நெருங்கிய நட்பு வட்டத்தினரை மட்டுமே வளைகாப்பிற்கு அழைத்திருந்தனர். திரையுலகினர் சிலரும் விழாவில் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு திடீரென வந்த விஜய், தம்பதியினரை வாழ்த்தியதோடு பிரமாண்டமான அழகான ஓவியம் ஒன்றையையும் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார். அண்ணனின் அன்புப் பரிசை எண்ணி மகிழ்கிறார் அட்லி.