கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

விஜய், சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், சிம்பு

சிம்பு முன்பெல்லாம் அறிவாலயத்திற்கு அருகில் இருக்கிற ஹோட்டலில்தான் தங்கி வந்தார். அவர் இரவுப்பறவை என்பதால் வீட்டிற்குத் தொந்தரவு தர வேண்டாம் என்பதற்கான ஒரு ஏற்பாடு இது

முன்பு பாடல்கள் பதிவின்போது மட்டும்தான் விஜய் உடனிருப்பார். குறிப்பாக ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாடல்களில் வரும் வரிகளை மட்டுமே கவனித்துப் பார்ப்பார். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அக்கறையை வளர்த்துக் கொள்ளும் விதமாக ஸ்கிரிப்ட்டையும் படிக்கிறாராம். முன்பு அவரிடம் ஸ்கிரிப்ட்டை சொன்னால் மட்டும் போதும் என்ற நிலைமை இருந்தது. இப்போது தெரிந்த இயக்குநர்களிடம் மட்டும் வசனங்களில் கரெக்‌ஷன் செய்கிறாராம். அவர் சொல்லும் வசனங்கள் நன்றாக இருந்தால் மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம். இந்த மாற்றத்தைப் பார்த்து நண்பர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதரவாக அவர் இப்போது ஸ்கிரிப்ட், டைரக்ஷனில் ஆர்வம் காட்டுவதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். விஜய்யின் இயக்கத்தில் பெரிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்றும், வெகு நாள்களாக படங்கள் தயாரிக்காமல் இருக்கிற ஆஸ்கார் பிலிம்ஸ் அதைத் தயாரிக்கலாம் என்றும் தகவல்.

கோலிவுட் ஸ்பைடர்

சிம்பு முன்பெல்லாம் அறிவாலயத்திற்கு அருகில் இருக்கிற ஹோட்டலில்தான் தங்கி வந்தார். அவர் இரவுப்பறவை என்பதால் வீட்டிற்குத் தொந்தரவு தர வேண்டாம் என்பதற்கான ஒரு ஏற்பாடு இது. இந்நிலையில் டிஆருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிறகு, ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு வீட்டிற்கே வந்துவிட்டார். வந்ததோடு மட்டுமல்லாமல் ஷூட்டிங் இல்லையென்றால் அப்பாவை செக்கப் அழைத்துப் போவது, அவரோடு சாவகாசமாக இருந்து பேசுவது என அப்பாவை ஆச்சர்யப்படுத்துகிறாராம். நீங்கள் சொல்கிற பெண்ணுக்குத் தாலி கட்டுகிறேன் என்று வேறு அம்மாவிடம் சொல்லிவிட்டாராம். ‘மேற்கொண்டு மியூசிக் போடுங்கள்... நீங்க சும்மா இருக்க வேண்டாம்’ எனச் சொல்லித்தான் டி.ஆரை ஆல்பம் போடவும் ரெடி பண்ணுகிறார் சிம்பு. அவரின் இந்த மாற்றத்தைப் பார்த்து மொத்தக் குடும்பத்தினருமே ஆச்சர்யத்தில் திளைக்கிறார்கள்.

முற்றாக இப்போது புதுப்படங்களைக் குறைத்துக்கொண்டார் விஜய்சேதுபதி. கைவசம் இருக்கும் படங்களில் ஐந்து இந்திப் படங்கள் அடக்கம். இனி நடிக்கிற படங்கள் நண்பர்களுக்காகவோ, கௌரவத் தோற்றத்திற்கோ இருக்காது எனவும் சொல்லப்பட்டு விட்டதாம். ஷாருக்கான் உடன் சரிக்கு சமமான கேரக்டர் என்பதால் ‘ஜவான்' படத்தை ஆசை ஆசையாக எதிர்பார்க்கிறார். ஆனால் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்' தான் முதலில் வருகிற அவரின் இந்திப் படமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். அவரோடு கத்ரினா கைப் அதில் ஜோடியாக நடிக்கிறார் என்பது தெரிந்ததுதான். இதற்கு முன் இல்லாத நெர்வஸில் இருக்கிறார் சேதுபதி. புது மொழி, புது இடம் என்பதால்தான் இந்தப் பதற்றம்.

கோலிவுட் ஸ்பைடர்

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்' படம் சூர்யாவிடமிருந்து சுமுகமாக விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு அடுத்து வேறு ஹீரோவுக்கான தேர்வில் இறங்கிவிட்டார்கள். விஷாலிடம் படம் சென்று திரும்பிவிட்டது. அவர் இரண்டு படங்கள் கைவசம் இருப்பதைக் காரணம் காட்டி ‘நோ' சொல்லிவிட்டார். நடிகர் கதிரை அணுகியபோது அவர் ஆசைப்பட்டாலும் அவர் அப்பா ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆர்யாவும் கைவசம் இருக்கிற மூன்று படங்களைச் சுட்டிக்காட்டி ‘சாரி அண்ணே' என நழுவி விட்டாராம். புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பாலா. அதர்வா அவருக்கு ஏற்கெனவே கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும், அடுத்து எடுக்கப் போகிற கிராமப் படத்திற்குத்தான் அவர் பொருந்துவார் என பாலா அவரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருப்பதாகவும் தகவல்.

விக்ரமின் மகன் துருவ் நடிப்புப் பயிற்சிக்காக அமெரிக்கா போகிறாராம். கிட்டத்தட்ட மூன்று மாதம் கொண்ட குறுகிய காலப் பயிற்சி அது. ஹாலிவுட்டின் பிரபல டைரக்டர்கள், நடிகர்கள் இந்தப் பயிற்சியைத் தருகிறார்களாம். சீக்கிரத்தில் சென்னைக்கு வந்து அவர் அந்த வித்தையைக் காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

கோலிவுட் ஸ்பைடர்

இசைஞானி, இப்போது மோடியின் ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதால் தி.மு.க தலைமைக்கும், அவருக்கும் சரியான ஒட்டுதல் இல்லை என்ற பேச்சு அடிப்படுகிறது. சமீபத்தில் நடந்த காந்தி கிராமம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில்கூட முதல்வரும், இளையராஜாவும் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொள்வது போல் பேசிக்கொள்ளவில்லை என்கிறார்கள். இந்த இடைவெளியைக் குறைக்கவும், சுமுக உறவைக் கொண்டு வரவும்தான், அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதிக்கு அவர் வாழ்த்து சொன்னாராம். உடனே நன்றி தெரிவித்து ராஜாவிடம் உதயநிதி பேச, இப்போது சகஜமான நிலைக்கு வந்து விட்டார்கள். விரைவில் இளையராஜாவின் 80-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு விழா நடத்த பாரதிராஜா திட்டமிடுகிறார். அதற்குச் சிறப்பு விருந்தினராக முதல்வர் அழைக்கப்படுவார் என்கிறார்கள்.