
‘இரும்புத்திரை' படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான ஆண்டனி பாக்யராஜின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் படம் ‘சைரன்.'
விஜய்யின் ‘லியோ' படப்பிடிப்பு காஷ்மீரில் மைனஸ் 12 டிகிரியில் மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் மிஷ்கினின் போர்ஷன் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் தொடர்பான காட்சிகளை எடுத்துவருகிறார்கள். அவரது பிறந்தநாளையும் அங்கே கேக் வெட்டிக் கொண்டாடி அவரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டனர். கௌதமை அடுத்து சஞ்சய் தத் போர்ஷனைப் படமாக்குகின்றனர்.

சுந்தர்.சி-யின் கனவுப் படமான ‘சங்கமித்ரா' மீண்டும் டேக் ஆஃப் ஆகிறது. இது 8-ம் நூற்றாண்டுக் கதை. சில வருடங்களுக்கு முன்னர் அதில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக அறிவித்தனர். அதன் பின் படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், இப்போது விஷால், ஆர்யா, பூஜா ஹெக்டேவிடம் பேசிவருகிறார்கள். படத்தை லைகா தயாரிக்கலாம் என்கிறார்கள்.
திரையுலகில் பதினொறாவது ஆண்டைக் கொண்டாடுகிறார் துல்கர் சல்மான். இப்போது அவர் நடித்துவரும் ‘கிங் ஆஃப் கோதா'வை ஓணம் பண்டிகைக்குக் கொண்டுவருகிறார்கள். இதில் இன்னொரு விசேஷம், துருவ் விக்ரம், ரித்திகா சிங், டொவினோ தாமஸ் எனப் பலரும் கௌரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். துல்கரின் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாகவும் இது உருவாகிவருகிறதாம்.

ஷங்கர்- கமல் கூட்டணியின் ‘இந்தியன் 2' படப்பிடிப்பு திருப்பதியைத் தொடர்ந்து சென்னையில் நடந்துவருகிறது. இதையடுத்து தனுஷ்கோடிக்குப் பறக்கிறார்கள். இதற்கிடையே திருப்பதியில் நடந்த படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கரின் குடும்பத்தினர் திடீர் விசிட் அடித்திருக்கிறார்கள். அன்று அவர் தன் குடும்பத்தினரைத் திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று, பெருமாளை தரிசிக்க வைத்து மகிழ்ச்சி பொங்க சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘பஹிரா'வில் பதினாறு கெட்டப்களில் நடித்திருந்தார் பிரபுதேவா. இதுபற்றி அவரிடம் பலரும் வியந்து சொன்னார்கள். ஆனால் அவரோ எளிமையாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘‘இப்பல்லாம் கெட்டப் போடுறது பெரிய விஷயமே இல்ல. அந்த கெட்டப்பை ஜனங்க நம்புறாங்களா என்பதுதான் விஷயம். நம்பற மாதிரி கெட்டப் போடுறதுதான் நிஜமாகவே பெரிய சவால்'' என்கிறார் சிரித்துக்கொண்டே!

‘இரும்புத்திரை' படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான ஆண்டனி பாக்யராஜின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் படம் ‘சைரன்.' ரவியின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். இப்போது காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. ஜெயம் ரவிக்கு ‘அகிலன்' படத்தைத் தொடர்ந்து அடுத்து ‘இறைவன்' வெளியாகிறது. தொடர்ந்து ‘சைரன்' படத்தைத் திரைக்குக் கொண்டு வருகின்றனர்.