கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட் ஸ்பைடர்

கமலின் `சிங்காரவேலன்' படத்திற்குப் பின் இப்போது வெளியான `சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தில்தான் நடிகரானார் பாடகர் மனோ

இந்தி கைகொடுக்காததால், தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். அதன் முதல்கட்டமாக தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடியாகிறார். ``ஆர்.ஆர்.ஆர். நடிகரான என்.டி.ஆர். ஒரு ஜாம்பவான். அவருடன் நடிக்க விரும்புவதாகச் சொன்னேன். கனவு நனவாகியிருக்கிறது'' என்கிறார் ஜான்வி.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியின் `லியோ' படப்பிடிப்பு காஷ்மீரின் இன்டீரியர் ஏரியாக்களில் நடந்துவருகிறது. இம்மாத இறுதியில் அங்கிருந்து சென்னை திரும்புகிறார்கள். முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருப்பதால், ஸ்டன்ட் அன்பறிவிடம் மட்டும் தொடர்ச்சியாக 80 நாள்கள் கால்ஷீட் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அனுஷ்கா நடித்துவரும் `மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி' படம் ஓ.டி.டி-யை மனதில் வைத்து ஐந்து மொழிகளில் வெளியாகிறது. அஜித்தின் `துணிவு' படத்திற்குப் பின், நிரவ் ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படம் கோடைக் கொண்டாட்டமாக வருகிறது. இதன் வெளியீட்டுக்குப் பிறகே, `தெய்வத்திருமகள்' இயக்குநர் விஜய்யின் படத்திற்கு வருகிறார் அனுஷ்கா.

அனுஷ்கா
அனுஷ்கா

கமலின் `சிங்காரவேலன்' படத்திற்குப் பின் இப்போது வெளியான `சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தில்தான் நடிகரானார் பாடகர் மனோ. இடையே இத்தனை வருஷமாக அவர் நடிக்காமல்போனதன் ரகசியத்தையும் சொல்லியிருக்கிறார். `` `சிங்காரவேலன்' படத்திற்குப் பின் இசைஞானி என்னைக் கூப்பிட்டு `நீ மறுபடியும் நடிக்கப் போனால், பாடல்கள் உனக்காகக் காத்திருக்காது'ன்னு சொன்னார். அதன்பிறகு நான் நடிப்பில் கவனம் செலுத்தல'' என்கிறார் மனோ.

கோலிவுட் ஸ்பைடர்
கோலிவுட் ஸ்பைடர்

தனுஷின் `திருச்சிற்றம்பலம்' இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், அடுத்து மாதவனை இயக்குகிறார். தமிழிலும் வெளியான `ராக்கெட்ரி' படத்திற்குப் பின், மீண்டும் பாலிவுட்டிலேயே கவனம் செலுத்திவரும் மாதவனுக்கு `திருச்சிற்றம்பலம்' பிடித்துப்போனதில், மித்ரனுடன் கைகோக்கிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

அஜித் - மகிழ்திருமேனியின் `அஜித்-62' படத்திற்கான கதை விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. இம்மாதத்தில் ஒரு சுபமுகூர்த்த தினத்தில் படத்தின் தலைப்பை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் ஒரு ரீமேக் என்றும் சொல்கிறார்கள். `நேர்கொண்ட பார்வை'யின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் கையில் எடுக்கும் ரீமேக் இது என்கிறார்கள். படத்தை இப்போதைய நிலவரப்படி தீபாவளிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.