கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

லட்சுமி மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி மேனன்

ஆஹா ஓ.டி.டி-யில் வெளியான ‘பேட்டைக்காளி' வெப்சீரீஸ், வரவேற்பை அள்ளியதில் மகிழ்ந்திருக்கிறார் அதன் இயக்குநர் ல. ராஜ்குமார்.

பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்' படத்தை முடித்துவிட்டு, கௌதம்மேனனின் ‘துருவநட்சத்திரம்' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகளில் பங்கேற்கிறார் விக்ரம். இப்போது நடிப்பில் பிஸியாக இருக்கும் கௌதமும் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்திக்குச் செல்கிறார் என்கிறார்கள். அங்கே அபிஷேக்பச்சனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல்.

கமல் தயாரிப்பில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, திஷா பதானி என டாப் ஹீரோயின்கள் பலரும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றனர். இந்தப் படத்திற்காக தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கும் சிம்பு, ‘‘என்னுடைய தீவிரமான படைப்புப் பசிக்கு இந்தப் படம் தீனியாக அமையும்'' என்கிறார்.

விக்ரம், கௌதம்மேனன், சிம்பு
விக்ரம், கௌதம்மேனன், சிம்பு

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்' படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடைகிறது. இன்னொரு பக்கம், படத்தை ஜூன் மாத வெளியீடாகக் கொண்டு வருவதால், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் மடோன் அஸ்வின். அடுத்த மாதம் இந்தப் படத்தின் டப்பிங்கை முடித்துக்கொடுக்கும் சிவா, அதன்பின் சாய் பல்லவியுடன் நடிக்கும் படத்திற்கு ரெடியாகிறார்.

ஆஹா ஓ.டி.டி-யில் வெளியான ‘பேட்டைக்காளி' வெப்சீரீஸ், வரவேற்பை அள்ளியதில் மகிழ்ந்திருக்கிறார் அதன் இயக்குநர் ல. ராஜ்குமார். வெற்றிமாறன் பட்டறையிலிருந்து வந்தவர் இவர். ‘பேட்டைக்காளி' தந்த உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து அந்த சீரிஸ் படப்பிடிப்பு நடந்த பகுதிக்குச் சென்று, அந்த சீரிஸில் நடித்த ஊர்மக்களுக்கு நன்றி தெரிவித்துத் திரும்பியிருக்கிறார் ராஜ்குமார்.

சிவகார்த்திகேயன்,
சிவகார்த்திகேயன்,

`விடுதலை'யில் சூரியின் உழைப்பை நேரில் பார்த்து வியந்த படத்தின் தயாரிப்பாளரான எல்ரெட் குமார், மீண்டும் இயக்குநராகும் ஆசையுடன் துள்ளியெழுந்திருக்கிறார். அமலாபாலை வைத்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தை ஏற்கெனவே இயக்கியிருக்கும் எல்ரெட் குமார், நீண்ட இடைவெளிக்குப் பின் சூரியைக் கதைநாயகனாக வைத்துப் புதிய படத்தை இயக்க ரெடியாகிறார். ‘விடுதலை'க்குப் பிறகு இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

எல்ரெட் குமார்
எல்ரெட் குமார்
லட்சுமி மேனன், லைலா
லட்சுமி மேனன், லைலா

விஜய் சேதுபதியின் ‘றெக்க', விக்ரம்பிரபுவின் ‘புலிக்குத்திப் பாண்டி' படங்களுக்குப் பின் தமிழில் படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த லட்சுமி மேனன், இப்போது ‘ஈரம்' அறிவழகனின் `சப்தம்' படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தில் லைலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்தியின் ‘சர்தார்' படத்திற்குப் பின் லைலாவைத் தேடி நிறைய வாய்ப்புகள் குவிந்தாலும், தான் ஸ்கோர் செய்யக்கூடிய கேரக்டரை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புகிறாராம் லைலா.