அரசியல்
கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

சிம்பு, கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்பு, கார்த்தி

இயக்குநர்கள் ராஜூமுருகன், நலன்குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் கார்த்தி.

தாய்லாந்திற்குச் சென்று சில மாதங்களாக தற்காப்புக் கலையைப் பயின்று வந்த சிம்பு, இப்போது தேசிங்கு பெரியசாமியின் படத்திற்காக ஹோம் ஒர்க்கில் இருக்கிறார். சமீபத்தில், தன் ரசிகர் மன்றத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து, பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்த சிம்பு, அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் சந்திக்க ரெடியாகிறார். சிம்புவின் இந்தத் திடீர் மாற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிம்பு -கார்த்தி
சிம்பு -கார்த்தி

இயக்குநர்கள் ராஜூமுருகன், நலன்குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் கார்த்தி. இவர்கள் மூவரின் படங்களையும் முடித்துவிட்டு, அடுத்து ஹரியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்போது விஷால் படத்தை இயக்கும் ஹரி, இதனை முடித்துவிட்டு கார்த்தியை இயக்குவார் என்கிறார்கள்.

இப்போது, ‘கடைசி விவசாயி' மணிகண்டனின் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி, அதனை முடித்துவிட்டு ‘குரங்கு பொம்மை' நித்திலன் படத்திற்கு வருகிறார். படத்திற்கு ‘மகாராஜா' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். விஜய்சேதுபதிக்கு வில்லனாக பாலிவுட் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். தமிழில் ‘இமைக்கா நொடிகள்' படத்துக்குப் பின், சுந்தர்.சி.யின் ‘ஒன் வெர்சஸ் ஒன்' படத்தில் கமிட் ஆன அனுராக், நித்திலன் படத்தின் மூலம் மீண்டும் தமிழில்!

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

தென்னாப்பிரிக்கா ஷெட்யூலை முடித்து சென்னை திரும்பிவிட்டது, ‘இந்தியன் 2' படக்குழு. இரண்டு சண்டைக் காட்சிகளையும் அங்கே படமாக்கிவிட்டு வந்திருக்கின்றனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இப்போது அரங்கம் அமைக்கும் வேலை நடந்துவருகிறது. அடுத்த ஷெட்யூல் அங்கேதானாம்.

‘நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து, ‘லப்பர் பந்து' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ‘அட்டகத்தி' தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையாம்.

தமிழரசன் பச்சமுத்து,தினேஷ்
தமிழரசன் பச்சமுத்து,தினேஷ்

இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் ஆஸ்தான டீமில் ஒருவரான ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி, ரஜினியின் ‘அண்ணாத்த'வை அடுத்து சூர்யாவின் ‘கங்குவா'விற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இடையே தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‘ராமபாணம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவந்தார். அந்தப் படம் இந்த மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மகிழ்ச்சியில் இருக்கிறார் வெற்றி!