கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

விஜய் தேவரகொண்டா, சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் தேவரகொண்டா, சமந்தா

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `சைரன்' படப்பிடிப்பு காரைக்குடியைத் தொடர்ந்து சென்னையில் நடக்கிறது. சென்னை ஷெட்யூலோடு அதன் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

டாப் ஹீரோயின்களான ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எனப் பலரும் கைவசம் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் வைத்திருக்கிறார்கள். ராஷ்மிகா மந்தனா `ரெயின்போ'விலும், அனுஷ்கா `மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி'யிலும், கீர்த்தி சுரேஷ் `ரிவால்வர் ரீட்டா'விலும், நயன்தாரா `லேடி சூப்பர்ஸ்டார் 75' என்ற படத்திலும் நடித்துவருகின்றனர்.

ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியத்தில், 40க்கும் அதிகமான வின்டேஜ் கார் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தவிர, ஏ.வி.எம் தயாரித்த படங்களில் எம்.ஜி.ஆர்., கமல், ரஜினி உட்பட டாப் ஹீரோக்கள் பயன்படுத்திய உடைகள், பிரத்யேக அணிகலன்கள் ஆகியவற்றையும் அந்த மியூசியத்தில் வைக்கவுள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்
ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த `ஜவான்', ஜூனில் வெளியாகவிருந்த நிலையில், செப்டம்பருக்குத் தள்ளி வைத்துள்ளனர். படத்தின் தாமதம் குறித்து ஷாருக் விளக்கம் கொடுத்திருக்கிறார். ``படம் ரெடியாகிவிட்டது. ஆனால், நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது. இதற்காக அட்லியின் டீம் அயராது உழைத்து வருகிறது'' என்கிறார் ஷாருக்கான்.

உலகை பைக்கில் சுற்றி வரும் பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்து, சென்னை திரும்பிவிட்டார் அஜித். அவரது உலக டூரான `Leg 1'ல் இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார். இம்மாதம் இறுதியில் `விடாமுயற்சி' படப்பிடிப்பைத் தொடங்கிவிடவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, அடுத்து அவர் `Leg 2'-க்கான பயணத்தை ஆரம்பிப்பார் என்றும் அது ஐரோப்பிய நாடுகளாக இருக்கலாம் என்றும் தகவல்.

ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்
ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த `குஷி' படம், வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த மே மாதமே இந்தப் படம் திரைக்கு வந்திருக்க வேண்டியது. இடையே சமந்தாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்குச் சென்றதால் இதன் படப்பிடிப்பு தடைபட்டது. சமந்தா நலம் ஆன பின்னரே, மீதிப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இந்த `குஷி'யின் இயக்குநர் சிவா நிர்வாணா, மணிரத்னத்தின் தீவிர ரசிகர் என்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா
விஜய் தேவரகொண்டா, சமந்தா

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `சைரன்' படப்பிடிப்பு காரைக்குடியைத் தொடர்ந்து சென்னையில் நடக்கிறது. சென்னை ஷெட்யூலோடு அதன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. ஜெயம் ரவி அதனை முடித்துவிட்டு ராஜேஷின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இதற்காக கொடைக்கானலில் லொக்கேஷன் பார்த்துத் திரும்பியிருக்கிறார் ராஜேஷ்.எம்.