கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

அன்சிபா ஹஸன்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்சிபா ஹஸன்

சிவகார்த்திகேயனின் `அயலான்', தனுஷின் `கேப்டன் மில்லர்' படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வருகின்றன. இதனால், கார்த்தியின் `ஜப்பான்' வேறு தேதிக்கு மாறுகிறதாம்

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் `லியோ' படப்பிடிப்பு, சென்னையில் பரபரக்கிறது. லோகேஷைப் பொறுத்தவரையில் நடிகர்கள் தேர்வு என்பது முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டும் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே தேர்வாகிவிடுவார்கள்;மற்றபடி, காட்சிகளை மெருகேற்றும் போதெல்லாம் புதுப்புது ஆட்கள் படப்பிடிப்பிலும் என்ட்ரி கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி சமீபத்தில் அர்ஜுனை அடுத்து, `த்ரிஷ்யம் 2' நடிகையான அன்சிபா ஹஸன் இணைந்திருக்கிறார்.

அன்சிபா ஹஸன்
அன்சிபா ஹஸன்

`இந்தியன் 2'ல் நடித்துவரும் கமல், அதனையடுத்து அ.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பின்னரே மணிரத்னம் இயக்கும் படத்துக்குச் செல்வார் என்கிறார்கள். அ.வினோத்தின் படப்பிடிப்பு அனேகமாக செப்டம்பரில் தொடங்குமாம். `தங்கலான்' படத்தை பா.இரஞ்சித் முடித்ததும் அவருடனும் கைகோக்கவிருக்கிறாராம் கமல்.

சிவகார்த்திகேயனின் `அயலான்', தனுஷின் `கேப்டன் மில்லர்' படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வருகின்றன. இதனால், கார்த்தியின் `ஜப்பான்' வேறு தேதிக்கு மாறுகிறதாம். அதேசமயம், ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணியின் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தீபாவளி ரேஸில் புதிதாகக் குதித்திருக்கிறது.

கோலிவுட் ஸ்பைடர்
கோலிவுட் ஸ்பைடர்

விஜய்யின் `லியோ'வில் நடித்துவரும் நரேன், இப்போது `குரல்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக தன் உடல் எடையைப் பத்து கிலோ அதிகரித்திருக்கும் அவர், படத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞராக நடித்திருக்கிறார். தமிழில் இதற்கு முன் `ஜன்னலோரம்' என்ற படத்தை இயக்கிய சுஜீத், இதை இயக்கியிருக்கிறார். படத்தை ஓ.டி.டி-யில் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

உதயநிதியின் `கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்த ஆரவ், அடுத்து வரலட்சுமியுடன் `மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். ``வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. 25 நாள்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவோம் என்று சொல்லி, 21 நாள்களிலேயே முடித்துவிட்டார்கள்'' என வியக்கிறார் ஆரவ்.

 வரலட்சுமி, ஆரவ்
வரலட்சுமி, ஆரவ்

ஓ.டி.டி-க்காக விஜய்மில்டன் இயக்கிவரும் `கோலிசோடா' வெப்சீரீஸ், இரண்டு சீசன்களாக ரெடியாகிவருகிறது. ஏற்கெனவே திரைப்படமாக வெளியான `கோலி சோடா' பாகங்களின் நடிகர்களும் இந்த வெப்சீரீஸில் நடித்துவருகின்றனர். இதன் முதல் சீசன் படப்பிடிப்பு முடிவடையும் தறுவாயில் உள்ளது. இதற்கிடையே ராஜுமுருகன் இயக்கிவரும் கார்த்தியின் `ஜப்பான்' படத்திலும் விஜய் மில்டன் நடித்துவருகிறார்.