Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: சிவகார்த்திகேயன் - கவுண்டமணி காம்போ; டிமாண்டி காலனி 2 ரெடி; ஹீரோவாகும் தனுஷ் மகன்!

கோலிவுட் ஸ்பைடர்

லாரன்ஸ், வடிவேலு காம்பினேஷன் சீன்களை முதலில் படமாக்க உள்ளனர். இதற்காக வடிவேலு தொடர்ந்து 25 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதனை முடித்துவிட்டே அவர் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2' படத்துக்குச் செல்லவிருக்கிறார்.

Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: சிவகார்த்திகேயன் - கவுண்டமணி காம்போ; டிமாண்டி காலனி 2 ரெடி; ஹீரோவாகும் தனுஷ் மகன்!

லாரன்ஸ், வடிவேலு காம்பினேஷன் சீன்களை முதலில் படமாக்க உள்ளனர். இதற்காக வடிவேலு தொடர்ந்து 25 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதனை முடித்துவிட்டே அவர் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2' படத்துக்குச் செல்லவிருக்கிறார்.

கோலிவுட் ஸ்பைடர்

* 'ராக்கெட்ரி' நல்ல பெயரைக் கொடுத்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறார் மாதவன். இனி தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார். மாதவனின் மும்பை நண்பர்களும், அமெரிக்க நண்பர்களும் பொருளாதார உதவியைச் செய்யத் தயாராகி இருக்கிறார்கள். எனவே இப்போது சென்னையில் முகாமிட்டுக் கதை கேட்டு வருகிறார். அவரிடம் கதைகள் சொல்ல மணிரத்தினத்தின் உதவியாளர்களே முன் வருவதால், இந்த அழைப்பு எல்லோருக்கும் ஆனது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். சொல்லப்படும் கதை மீடியம் பட்ஜெட்டிற்குள் அடங்க வேண்டும் என்பதுதான் முதல் நிபந்தனையாம். அதேபோல நடுத்தர ஹீரோக்கள் ஏற்றுக்கொள்வது மாதிரி ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். ஸ்கிரிப்ட் அமைந்துவிட்டால் ஹீரோக்களிடம் அவரே பேசி முடிவு செய்கிறேன் என்று சொல்லி இருப்பதால் அவரிடம் கதை சொல்லக் கூட்டம் அள்ளுகிறது. இன்னொரு பக்கம், அவர் தன் மகனின் ஒலிம்பிக் கனவை நிறைவேற்றவும் இந்த தயாரிப்பாளர் அவதாரம் உதவும் என நம்புகிறார் மேடி.

'ராக்கெட்ரி' மாதவன்
'ராக்கெட்ரி' மாதவன்

* ஹைதராபாத்தில் போய் செட்டில் ஆகிவிட்டார் வரலட்சுமி. அங்கே நிறையத் தெலுங்குப் படங்களில் முக்கியமான ரோல்களில் கமிட்டாகி வருகிறார். ஆனாலும் அவருக்குக் கல்யாணம் செய்து வைக்க சரத்குமார், சாயா, ராதிகா மூன்று பேரும் இப்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு முன்னால் வரலட்சுமி - விஷால் கருத்து வேறுபாட்டை மறுபடியும் தீர்த்து வைக்க முயற்சிகள் நடந்து பலனளிக்கவில்லையாம். காரணம், அந்தப் பேச்சுக்கான ஆரம்பப் புள்ளியிலேயே அவர் 'நோ' சொல்லிவிட்டதால் இப்போது மணமகன் தேடுதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னும் இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

* மறுபடியும் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்காகவே தொடர்ந்து பல முறை அவரை சந்தித்துக்கொண்டே இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவாவின் பெரியப்பா கதாபாத்திரத்தில் அவர் படம் முழுவதும் வருகிற மாதிரி ஒரு கதையைத் தயாரித்துள்ளனர். அதை அவரிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கான தேதிகளில் முழு சுதந்திரம், இரவு படப்பிடிப்பு கிடையாது, அவுட்டோர் படப்பிடிப்பு இல்லை போன்ற சில நிபந்தனைகளை கவுண்டமணி அடுக்கியிருக்கிறார். அதிகபட்சம் 25 நாள்களுக்குள் தனது போர்ஷன்களை ஷூட் செய்துவிடுமாறும் சொல்லியிருப்பதால் அதற்கு ஏற்றவாறு குறுகிய கால தயாரிப்பாக இந்த புராஜெக்டை மாற்ற உத்தேசித்து இருக்கிறார்கள்.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

* பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் ஷூட்டிங் மைசூரில் இன்று துவங்கியுள்ளது. லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, வடிவேலு எனப் பலரும் இதில் கமிட் ஆகியுள்ளனர். லாரன்ஸ், வடிவேலு காம்பினேஷன் சீன்களை முதலில் படமாக்க உள்ளனர். இதற்காக வடிவேலு தொடர்ந்து 25 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதனை முடித்துவிட்டே அவர் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2' படத்துக்குச் செல்லவிருக்கிறார்.

* அருள்நிதியின் கரியரில் 'டிமாண்டி காலனி' ஒரு மைல்கல் படம். அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து, அருள்நிதி இருவரிடம் பலரும் கேட்கும் கேள்வி, "'டிமாண்டி காலனி பார்ட் 2' எப்போது வரும்?" என்பதுதான். இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது. விரைவில் பார்ட் 2-வை ஆரம்பிக்கிறார்கள். ஹீரோயினாக நடிக்கப் பிரியா பவானி சங்கரிடம் பேசி வருகிறார்கள். ஆனால், படத்தை இயக்கப் போவது அஜய் ஞானமுத்து அல்ல. அவரது இணை இயக்குநர் ஒருவர் என்கிறார்கள்.

தி கிரே மேன்: மகன்களுடன் தனுஷ்
தி கிரே மேன்: மகன்களுடன் தனுஷ்

* 'தி கிரே மேன்' விழாவிற்கு மகன்களைக் கூட்டிப் போயிருக்கிறார் தனுஷ். இன்னொரு விஷயம், அவர் மூத்த மகனைத் தனது விழாக்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். லிங்காவிற்காக தானே நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். இதனால் விஜய் மகன் போலவே, தனுஷ் மகனும் நிச்சயம் சினிமாவிற்கு வந்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள். 'அடுத்தடுத்த வருடங்களில் மகனுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணுங்க பிரதர்' என்று வெற்றி மாறனிடம் சொல்லி வைத்திருக்கிறாராம். அதேபோல், இன்னொரு தகவல், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இயக்குநராவதில் ஆர்வம் காட்டுகிறாராம்.