அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

குஷி! #VikatanReview

குஷி  #VikatanReview
பிரீமியம் ஸ்டோரி
News
குஷி #VikatanReview

குஷி'யில் அது கொஞ்சம் கம்மிதானாம்... எது..?

ந்த டைரக்டருக்குமே முதல் படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டால், இரண்டாவது படம் கம்பி மீது நடப்பது மாதிரி. 'வாலி' பட டைரக்டர் சூர்யாவுக்கும் அதே நிலைதான் 'குஷி'யில்! 'ஒரே நாளில் கல்கத்தாவில் பிறந்த சிவாங்கற பையனும் (விஜய்), குற்றாலம் பக்கத்தில் பைம்பொழில் கிராமத்தில் பிறந்த ஜெனிபர்ங்கற பொண்ணும் (ஜோதிகா) காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க..' என்று எடுத்த எடுப்பில் கதையைச் சொல்லிவிடுகிறார் டைரக்டர். 

குஷி  #VikatanReview
குஷி #VikatanReview

 ஏராளமான கஷ்ட நஷ்டங்களைச் சந்தித்து விட்டு காதலர்கள் இணைகிறார்கள். அதே சமயம், காதலுக்கு பெற்றோர்களின் எதிர்ப்பு, அந்தஸ்து மற்றும் சாதி குறுக்கீடு என்ற வழக்கமான சங்கடங்களைத் தவிர்க்கவும் முயற்சித்திருக்கிறார் டைரக்டர். மாறாக, காதலர்களுக்கு இடையே இருக்கும் 'ஈகோ'வே அவர்கள் இணையத் தடையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். விஜய்யும் ஜோதிகாவும் உள்ளுக்குள் காதலைத் தேக்கி வைத்துக்கொண்டு, வெளியே பாம்பும் கீரியுமாகவே சண்டை போட்டுக்கொள்வது ரசிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. சில்லறை விஷயங்களுக்கெல்லாம் இவர்கள் கோபப்படுவதும் சீறிப்பாய்வதும் இயல்பாக இருக்கின்றன அதே போல், பொது  நண்பர்களாக இருந்து இன்னொரு காதல் ஜோடியை இவர்கள் சேர்த்து வைப்பதும்! கீழே ஆறு ஓடுகிறது. மேலே அபாய உயரத்தில் இரு கரைகளையும் இணைக்கிறது ஒரு பாலம். பாலத்தின் உச்சியிலிருந்து கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு அலறலும் ஆனந்தமுமாக அந்தரத்தில் ஊசலாடுகிற அந்த பங்கி ஜம்ப்புக்காக விஜய்க்கு ஒரு வெரிகுட்!

குஷி  #VikatanReview
குஷி #VikatanReview

 ஆனால் நடிப்பில் இன்னும் 'கண்ணுக்குள் நிலவு' படப் பாதிப்பு நிறைய இருக்கிறது. 'கொழுக் மொழுக்' என்று அமுல் பேபி மாதிரி இருக்கிற ஜோதிகா, படத்துக்குப் படம் நடிப்பில் முன்னேறி வருகிறார். ஸ்டைலாகத் தலைசாய்த்துச் சிரிக்கும் போதும் கோபப்படும் போதும் உணர்ச்சிகளை மென்மையாக வெளிப்படுத்துவது ஜோதிகா ஸ்பெஷல்!

குஷி #VikatanReview
குஷி #VikatanReview

பளிச்சென்ற ஜீவாவின் ஒளிப்பதிவு, பழைய டியூன்களை நினைவுபடுத்தினாலும் துள்ளலான தேவாவின் இசை, வளமை. இளமை துடிக்கிற ராஜூ சுந்தரத்தின் நடன அமைப்பு என்று படத்துக்கு பலம் சேர்க்கும் அம்சங்கள் பல. வாலியில் ஒரு பாத்திரம் காமுகன் என்றபோதும் கூட விரசத்தின் எல்லையைத் தொடவில்லை சூர்யா. இந்தப் படத்தில் தேவையேயில்லாமல் எல்லை தாண்டியிருக்கிறார். முக்கியமாக, விஜய் - மும்தாஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள். அதுவும் எக்கச்சக்க முக்கல் முனகல்களுடன் வருகிற 'கட்டிப் பிடிடா' பாட்டுக்கு மிட் நைட் மசாலாக்களில் அட்மிஷன் நிச்சயம்! திரையில் முகம் காட்டினாலே விசில் பறக்கிற அளவு பிரபலமாகிவிட்டார் விவேக். மகிழ்ச்சி! இவருக்கு நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். வருத்தம்! முதல் காட்சியிலேயே முடிவு தெரிந்துவிட்ட ஒரு கதையை ரசிக்க வேண்டுமானால், திரைக்கதையில் அதிகபட்ச சுவாரஸ்யம் இருக்க வேண்டும். 'குஷி'யில் இது கொஞ்சம் கம்மி!

- விகடன் விமரிசனக் குழு  

(04.06.2000 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)