Published:Updated:

`கலா தபஸ்வி' கே.விஸ்வநாத் மறைவு: பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் கலைஞர் காலமானார்!

கே.விஸ்வநாத்

ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கே.விஸ்வநாத், இயக்குநராக 53 படங்களை எடுத்துள்ளார். குணச்சித்திர நடிகராகவும் தென்னிந்திய படங்களில் வலம் வந்தார்.

Published:Updated:

`கலா தபஸ்வி' கே.விஸ்வநாத் மறைவு: பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் கலைஞர் காலமானார்!

ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கே.விஸ்வநாத், இயக்குநராக 53 படங்களை எடுத்துள்ளார். குணச்சித்திர நடிகராகவும் தென்னிந்திய படங்களில் வலம் வந்தார்.

கே.விஸ்வநாத்
தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.

நீண்ட காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார்.

கமல்ஹாசன், கே.விஸ்வநாத்
கமல்ஹாசன், கே.விஸ்வநாத்

'கலா தபஸ்வி' என்று அழைக்கப்பட்ட கே.விஸ்வநாத், 5 தேசிய விருதுகள், ஏழு நந்தி (மாநில) விருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டவர், 2017-ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதாசாகெப் பால்கே' விருதையும் பெற்றிருந்தார்.

ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர், இயக்குநராக 53 படங்களை எடுத்துள்ளார். பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை தன் படங்களின் மூலமாகப் பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் இயக்கத்தில் 'சங்கராபரணம்', 'ஸ்வாதிமுத்யம்', 'சாகரசங்கமம்' உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கே.விஸ்வநாத்
கே.விஸ்வநாத்

மாற்றுச் சினிமாவின் முன்னோடியாகத் திகழ்ந்தவர், தமிழில் 'குருதிப்புனல்', 'முகவரி', 'யாரடி நீ மோகினி', 'லிங்கா', 'உத்தம வில்லன்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மாபெரும் கலைஞர் கே.விஸ்வநாத்துக்கு புகழ் அஞ்சலி!