Published:Updated:

LEO - Bloody Sweet: ரிலீஸ் தேதியுடன் `தளபதி 67' டைட்டில் - இதுவும் லோகேஷ் யுனிவர்ஸில் இடம்பெறுமா?

LEO - Bloody Sweet

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

LEO - Bloody Sweet: ரிலீஸ் தேதியுடன் `தளபதி 67' டைட்டில் - இதுவும் லோகேஷ் யுனிவர்ஸில் இடம்பெறுமா?

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEO - Bloody Sweet

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - விஜய்யின் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்பட வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் திரைப்படம் 'தளபதி 67'. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' என அனைத்து திரைப்படங்களுக்கும் படத்தொகுப்பாளராக இருந்த பிலோமின் ராஜ் இப்படத்திலும் பணிபுரிகிறார். 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் இணைந்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இதற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

தளபதி 67: விஜய், லோகேஷ்
தளபதி 67: விஜய், லோகேஷ்

மன்சூர் அலி கான், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குநர் கௌதம்  வாசுதேவ் மேனன், இந்தி நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டிருந்த படக்குழு, இப்போது கூடுதல் பரிசாகப் படத்தின் டைட்டிலுடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்பாகவே ரசிகர்கள் பலரும் படத்தின் டைட்டில் இதுதான் என 'Eagle', 'Goat', 'Gangster', 'Hunter', 'Killer', 'கருடன்', 'குருதிப் புனல்' என்று பல்வேறு டைட்டில்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் அவை அனைத்தும் பொய்யாகி இருக்கின்றன.

'விக்ரம்' படம் போலவே, ஒரு புரொமோ வீடியோவுடன் வெளியான இந்த அறிவிப்பில் படத்தின் பெயர் ‘லியோ’ (LEO) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'Bloody Sweet' என்று இந்த டீசரில் விஜய் சொல்லும் வசனம், படத்தின் டேக்லைனாக வைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் சர்ப்ரைஸாக படத்தின் ரிலீஸ் தேதியாக அக்டோபர் 19, 2023 அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்னும் 8 மாதங்களில், குறிப்பாகத் தீபாவளிக்கு முன்னதாகவே 'லியொ' படம் வெளியாகவிருக்கிறது.

அதே சமயம், ரசிகர்கள் பலரும் இந்தப் படமும் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டின் யுனிவர்ஸின் (LCU) கீழ் வருமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், இந்த புரொமோவில் அதற்கான விடை தரப்படவில்லை. அதே சமயம், முகமூடி மனிதர்கள், 'விக்ரம்' படத்தின் ரோலக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே கார்கள் போன்ற விஷயங்களை ஆராய்ந்து நிச்சயம் இது 'LCU' படம்தான் எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்
விஜய்
ஒருவேளை அது உண்மையாக இருப்பின், கமல், விஜய், சூர்யா, ஃபகத் ஃபாசில், கார்த்தி, முன்கதை என்றால் விஜய் சேதுபதி எனப் பலரும் ஒரே யுனிவர்ஸின் கீழ் படங்கள் நடிப்பது சாத்தியமே!