Published:Updated:

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, சந்திரமுகி 2, AK 62 - லைகாவின் லைன்அப் குறித்த அப்டேட்ஸ்!

இந்தியன் - 2

'பொன்னியின் செல்வன் - 2' கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனையடுத்து அடுத்த மாதம், படக்குழு வெளிமாநிலங்களுக்கு புரொமோஷன்களுக்கு கிளம்பவிருக்கிறார்கள்.

Published:Updated:

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, சந்திரமுகி 2, AK 62 - லைகாவின் லைன்அப் குறித்த அப்டேட்ஸ்!

'பொன்னியின் செல்வன் - 2' கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனையடுத்து அடுத்த மாதம், படக்குழு வெளிமாநிலங்களுக்கு புரொமோஷன்களுக்கு கிளம்பவிருக்கிறார்கள்.

இந்தியன் - 2
தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்த நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் லைகாவையும் சொல்லலாம். 'பொன்னியின் செல்வன் - 1' படத்துக்குப் பின் மளமளவெனப் பல படங்களைத் தயாரித்து வருகிறது அந்நிறுவனம். விஜய்யின் 'கத்தி' மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைகா, இப்போது இரண்டு டஜன் படங்களைத் தாண்டி தயாரித்துவிட்டது. அதன் அடுத்தடுத்த லைன் அப்கள் பிரமிக்க வைக்கிறது. தயாரிப்பிலிருக்கும் படங்கள் குறித்த தகவல்கள் இனி...
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2

இந்தியன் 2

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', 'டான்' படங்களின் வெற்றிக்குப் பின், லைகா தனது பழைய கடன்களை எல்லாம் அடைத்துவிட்டது என்றும், லாபகரமான நிறுவனமாகிவிட்டது என்றும் தகவல்கள் பரவின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக லைகாவும் தனது பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது. கிடப்பில் போடப்பட்டிருந்த ஷங்கர் - கமலின் 'இந்தியன் 2'க்கு மீண்டும் உயிர்கொடுத்தது. 'இந்தியன் 2' படப்பிடிப்பு இப்போது திருப்பதி, கடப்பா ஆகிய இடங்களில் நடந்தது என்றும், விரைவில் தென்னாப்பிரிக்காவிற்கு டீம் பறக்கிறதும் என்றும் சொல்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் - 2

'பொன்னியின் செல்வன் - 2' படத்தின் டப்பிங் முழுவதும் நடந்து முடிந்துவிட்டது. அதன் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 28 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதால் தற்போது கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனையடுத்து அடுத்த மாதம், படக்குழு வெளிமாநிலங்களுக்கு புரொமோஷன்களுக்குக் கிளம்பவிருக்கிறார்கள்.

அஜித்
அஜித்

அஜித் 62 (AK 62)

'துணிவு' படத்திற்குப் பின் அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிக்கிறது என்றும், விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அறிவித்தனர். அதன்பிறகு விக்கி வெளியேறிவிட்டார். அவர் ஏன் வெளியேறினார், என்ன நடந்தது என்பதும், மகிழ் திருமேனி 'ஏகே 62'க்கு எப்படி வந்தார் என்பது குறித்தும் விவரமாக வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இப்போதைக்கு மகிழ் திருமேனி இயக்குவது விரைவில் உறுதியாகிவிடும் என்கிறார்கள். மகிழ், அஜித்தைச் சந்தித்ததும், கதை சொன்னதும் உண்மை. ஆனால், இன்னமும் முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் நீடித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

சந்திரமுகி 2

ராகவா லாரன்ஸ் - பி.வாசு இணைந்த 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, 'கிழக்கு சீமையிலே' விக்னேஷ இதில் இணைந்திருந்தார். வடிவேலுக்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' கைவிட்டதால் அவர் 'மாமன்னன்' படத்தையும், 'சந்திரமுகி 2'ஐயும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். பாலிவுட் குயின் கங்கனா ரணாவத்தும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் எடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

கங்கனா
கங்கனா

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினியின் 'லால் சலாம்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விஷ்ணு விஷால், விக்ராந்த், அனு இமானுவேல் எனப் பலரும் இதில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஜினி இதில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். 'ஜெயிலர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு இதன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

பிற படங்கள்

மேற்கண்டவை எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள். அதனைத் தொடர்ந்து சின்ன பட்ஜெட்களில் சில படங்களையும் தயாரித்து வருகிறது லைகா.
பாரதிராஜா
பாரதிராஜா
விகடன்

விதார்த், யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்தை டி.அருள்செழியன் இயக்கி வருகிறார். இதனையடுத்து ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கும் படத்தையும் தயாரிக்கிறது லைகா.

அதோடு லைகாவின் 24வது படமாக, இயக்குநர் பாரதிராஜா, அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு ஒரு படத்தை இயக்கி வருகிறார். 'திருவின் குறள்' என இதற்கு டைட்டில் வைத்திருப்பதாகத் தகவல். சமீபத்தில் திரைக்கு வந்த 'டாடா' படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபு, அடுத்து லைகாவுடன் கைகோர்க்கிறார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.