Published:Updated:

மேடம் ஷகிலா - 31: `நவரசா’ அரவிந்த் சாமிகளுக்கு ஒரு கேள்வி… நீங்கள் கதை சொல்வது யாருக்காக?!

நவரசா - ரௌத்திரம்

தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் பெண்களை பொருள்களாக (Objectifying) பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு சுயமரியாதை மற்றும் கண்ணியம் (Dignity) இருக்காது என்பதையும் காட்சிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

Published:Updated:

மேடம் ஷகிலா - 31: `நவரசா’ அரவிந்த் சாமிகளுக்கு ஒரு கேள்வி… நீங்கள் கதை சொல்வது யாருக்காக?!

தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் பெண்களை பொருள்களாக (Objectifying) பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு சுயமரியாதை மற்றும் கண்ணியம் (Dignity) இருக்காது என்பதையும் காட்சிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

நவரசா - ரௌத்திரம்

திடீரென கணவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதால் வருமானத்துக்காக வீட்டுவேலைக்கு செல்லும் நாயகிக்கு வயது வந்த இரண்டு பிள்ளைகள். அத்தியாவசிய தேவைகள் மற்றும் கணவன் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியை சமாளிக்க தான் வேலை செய்யும் வீட்டு உரிமையாளரிடம் வட்டியில்லாமல் கடன் கேட்கிறார். கைமாறாக பாலியல் உறவுகொள்ள அழைக்கிறார் வீட்டு உரிமையாளர். நாயகியும் சம்மதிக்கிறாள். அந்த காட்சியை நேரில் பார்க்கும் மகன் வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு சிறைக்குச் செல்கிறான். அதை நேரில் பார்க்கும் பதின்வயது மகள் தாயின்மீது கோபம் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிடுகிறாள். பல ஆண்டுகள் கழித்து சாகும் தறுவாயில் இருக்கும் அம்மா அவளைப் பார்க்கவேண்டும் என்று அழைக்க, அப்போதும் அவளுக்குக் கோபம் குறையவில்லை என்று மறுத்துவிடுகிறாள்.

இது நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்.
`நவரசா’ அரவிந்த் சாமி
`நவரசா’ அரவிந்த் சாமி

கணவனைப் பிரிந்து அல்லது இழந்து வாழும் பெண்கள் வேலைக்கு செல்லும்போது அவர்களைச் சுற்றியிருக்கும் ஆண்கள் பாலியல் உறவுக்காக அணுகுவது போலவும், வீட்டுவேலைக்கு செல்பவர்கள், அலுவலகங்களில் கடைநிலை ஊழியராக இருப்பவர்கள், கார்மென்ட்ஸ் போன்ற பெரிய தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் என வறுமையின் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் பலரும் வருமானத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என இத்தகைய பாலியல் உறவுகளுக்கு சம்மதிக்கின்றனர் என்பதுபோலவும் காட்டும் வழக்கும் தமிழ் திரையுலகுக்குப் புதிதல்ல. தமிழ் சினிமா காலங்காலமாக பின்பற்றும் Stereotype template இது. ஆனால், இந்த ஓடிடி யுகத்தில்கூட பழைய டெம்ப்ளேட்டில், அதுவும் அரவிந்த்சாமி போன்றவர்கள் பிற்போக்குத்தனமாக கதை சொல்லியிருப்பது வருத்தத்தையே வரவழைக்கிறது.

தனியாக இருக்கும் பெண்களை மிக எளிதாக அணுகலாம் என்கிற எண்ணத்தை தமிழ் திரைப்படங்கள் இன்றும் மிக ஆழமாக மக்களிடம் விதைக்கின்றன. இதை பார்த்து வளரும் ஆண்கள் தனித்து வாழும் பெண்களின் சூழ்நிலையை பயன்படுத்தி தவறான எண்ணத்துடன் அணுகுகிறார்கள். 18 வயது நிரம்பிய இருவர் மனமொத்து உறவுகொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதன் பின்னணியில் வருவாய் பாதிப்பு, பணி நீக்கம் சார்ந்த அச்சுறுத்தல்கள் இருந்தால் அது பெண்கள்மீது செலுத்தப்படும் வன்முறையே.

”நமக்காகத்தான அம்மா இதையெல்லாம் செஞ்சுது” என்று இறுதிக்காட்சியில் நாயகியின் மகன் கூறுகிறான். தன் முதலாளியின் பாலியல் இச்சைக்கு நாயகி சரி என சொல்வது குற்றம் என்றும், அந்த குற்றம் பிள்ளைகளுக்காக எனும்போது தியாகமாக பார்க்கப்பட வேண்டும் எனவும் சொல்கிறது அக்காட்சி. இந்தத் தியாகத்தின் பின்னால் குற்றம் என நிறுவப்பட்டிருப்பது ஒரு பெண்ணின் சுதந்திரம். ‘நீ செய்தது குற்றம்தான். ஆனால் அதன் காரணம் பிள்ளைகள் என்பதால் அதை தியாகமாக ஏற்றுக்கொள்கிறோம்’ என்பதும் ஏமாற்று வேலையே.

‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்
‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்

கணவனைப் பிரிந்து / இழந்து வாழும் பெண்கள் தன்னுடைய மீதமுள்ள நாட்களை தனக்கான காதல், காமம் என்று எந்த உணர்வுகளும் இல்லாமல் பிள்ளைகளுக்காக தியாகத்தின் திருவுருவமாக வாழ்வதே போற்றதலுக்குரியது என்பது சமூகத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது.

பெண்களுக்கு இயற்கையில் பாலியல் ஆசைகளும், உணர்வுகளும் ஏற்படாது அல்லது அப்படி ஏற்படுவதும் தவறு என சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளது. அதுவே திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது. அதனால்தான் எப்போதும் ஆண்கள் மட்டுமே தனியாக வாழும் பெண்களிடம் பாலியல் உறவை எதிர்பார்ப்பதாகவும், கணவனை இழந்து / பிரிந்து வாழும் பெண்கள் வேறொருவருடன் பழகுவது அவரது கற்புக்கு இழுக்கு எனவும் பெரும்பாலான திரைப்படங்கள் சொல்கின்றன.

கணவனைப் பிரிந்து / இழந்து வாழும் பெண்கள் தன்னுடைய மீதமுள்ள நாட்களை தனக்கான காதல், காமம் என்று எந்த உணர்வுகளும் இல்லாமல் பிள்ளைகளுக்காக தியாகத்தின் திருவுருவமாக வாழ்வதே போற்றதலுக்குரியது என்பது சமூகத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது.

பெண்களுக்கு இயற்கையில் பாலியல் ஆசைகளும், உணர்வுகளும் ஏற்படாது அல்லது அப்படி ஏற்படுவதும் தவறு என சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளது. அதுவே திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது. அதனால்தான் எப்போதும் ஆண்கள் மட்டுமே தனியாக வாழும் பெண்களிடம் பாலியல் உறவை எதிர்பார்ப்பதாகவும், கணவனை இழந்து / பிரிந்து வாழும் பெண்கள் வேறொருவருடன் பழகுவது அவரது கற்புக்கு இழுக்கு எனவும் பெரும்பாலான திரைப்படங்கள் சொல்கின்றன.

சுவரில்லாத சித்திரங்கள்
சுவரில்லாத சித்திரங்கள்

1979-ல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ’சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தில் கணவனை இழந்த கதாநாயகியின் அம்மா தனக்கு ஆர்டர் கொடுப்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார். வறுமையில் இருக்கும் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக என்று காரணம் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த அம்மா மனம் விரும்பியே அவருடன் பழகுவார். ஒருநாள் இதை நேரில் பார்த்துவிட்ட கதாநாயகி தன் அம்மாவிடம் சண்டை போட்டு இனிமேல் அவர் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லுவாள். அவரது உதவியை ஏற்றுக்கொள்ளாமல் குடும்பமே வறுமையில் இருக்கும். பணம் ஈட்ட வேறு வழியில்லாமல் கௌரவத்திற்காக குடும்பத்தில் அனைவருக்கும் விஷத்தைக் கொடுத்துவிட்டு கதாநாயகி தானும் உண்டு இறந்துவிடுவாள். தன்னுடைய தாய்க்கு இரண்டாவது காதல் இருந்தது அசிங்கம் என எண்ணும் மகள் மொத்த குடும்பத்தையும் ’கௌரவக் கொலை’ செய்யும் கதை ‘கிளாசிக்’ சினிமாவாகக் கொண்டாடப்படுகிறது.

42 ஆண்டுகள் கழித்து இன்று அரவிந்த் சாமியின் ’ரௌத்திரம்’ படமும் அதே கருத்தை முன்வைக்கிறது. அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும், கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தாலும் அதை செய்யாமல், பெண்கள் சார்ந்த விஷயங்களில் நம் இயக்குநர்கள் பிற்போக்குத்தனங்களை விட்டு வெளியேற விரும்புவதில்லை என்பதையே இதுபோன்ற திரைப்படங்கள் காட்டுகின்றன.

இந்தியா போன்று குடும்ப அமைப்பை அடிப்படையாக கொண்ட நாட்டில் பெண்கள் தனித்து வாழும்போது சமூகம் அவர்களைச் சுற்றி சிசிடிவி பொருத்தி எப்போதும் கண்காணிக்கிறது. பெண்கள் எந்நிலையிலும் ஒழுக்கம்நெறி தவறிவிடக்கூடாது என்பதில் அது மிக கவனமாக இருக்கிறது.

Ajeeb Daastaans | Khilauna
Ajeeb Daastaans | Khilauna

பெண்கள் சமூகம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு விதமான பிரச்னைகளை மனம் மற்றும் உடல்ரீதியாக சந்திக்க வேண்டியிருக்கிறது. அவற்றை கடந்து சுயமரியாதையுடன் தனித்து வாழ அதீத மன உறுதியும் தேவைப்படுகிறது. பல சமயங்களில் அவர்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவுபவர்களைகூட சமூகத்தின் மோசமான தூற்றல்கள் சற்று தள்ளி நிற்கச் செய்கிறது.

வறுமையில் இருப்பவர்களுக்கு தனிமனித நெறிமுறைகள் இருக்காது என்பது போலவும், பணத்துக்காக பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் அடித்தட்டு மக்களை பற்றி குறிப்பாக பெண்களை பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பொதுமைப்படுத்தி வைத்திருக்கின்றன திரைப்படங்கள்.
சமீபத்தில் வெளியான ‘Ajeeb Daastaans’ எனும் இந்தி குறும்பட தொகுப்பில் ஒன்றான ‘Khilauna’வில் வறுமை காரணமாக வீட்டு வேலைக்கு செல்லும் இளம்பெண்ணான நாயகி கவர்ச்சியாக உடையணிந்திருப்பாள். வேலை செய்யும் வீட்டு உரிமையாளர் தவறாக அணுகக்கூடும் என்று சொல்லும் காதலனிடம், “நான் வீடு துடைக்கும்போது அவர் கண் என்மீது மேயும், பரவாயில்லை. எனக்கு என் வீட்டில் மின்சாரம் கிடைப்பதுதான் முக்கியம்” என சொல்வாள். அதாவது மற்றவர்கள் தவறாகப் பார்த்தாலோ, அணுகினாலோ, வறுமையில் இருக்கும் பெண்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்கிறது அப்படம்.

வறுமையில் இருக்கும் பெண்கள் பணத்துக்காக கண்ணியக்குறைவாக நடந்துகொள்வார்கள் என்பது போல இன்னொரு ஆபாசமான ஸ்டீரியோடைப், வசதிபடைத்த பெண்கள் தங்கள் கணவன் சரியில்லையென்றால் தங்கள் பணபலத்தை பயன்படுத்தி வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவுகொள்வார்கள் என்பதும். மொத்தத்தில் ஒழுக்கநெறியின் அடிப்படையில், ‘இவர்கள் இப்படித்தான்’ என்று பொதுமைப்படுத்துதல் இங்கு பெண்களுக்கு மட்டுமே நடக்கிறது.

தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் பெண்களை பொருள்களாக (Objectifying) பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு சுயமரியாதை மற்றும் கண்ணியம் (Dignity) இருக்காது என்பதையும் காட்சிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்
‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்

நாள் ஒன்றுக்கு 100 - 150 ரூபாய் வருமானம் தரும் பழைய பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து விற்கும் திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஞாயிறு வெளியான விஜய் டிவி ’நீயா நானா’ நிகழ்ச்சியில் பேசினார். அவர் குப்பையில் கண்டெடுத்த 58,000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை உரியவரிடம் சேர்க்கச் சொல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். ‘’ஏன் அப்பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளவில்லை?’’ என கேட்டதற்கு ‘’பணம் கிடைத்ததற்கு நான் சந்தோஷப்படலாம், தொலைத்தவர்களின் நிலையை எண்ணி பார்த்தேன்’’ என்றார். மேலும், “நாங்கள் உழைத்து சாப்பிடுவதால் கடவுள் எங்களை நன்றாகத்தான் வைத்திருக்கிறார்” என்றார் அந்த பெண்.

உழைக்காமல் கிடைக்கும் பணம் தமக்கு சொந்தமில்லை என்பதுதான் எளிய மனிதர்களின் புரிதல். அவர்கள் கடவுள், மனசாட்சி, பாவ-புண்ணியம் என ஏதோ ஒன்றின் மீதுள்ள நம்பிக்கையினால் எந்நிலையிலும் நேர்மையாக வாழ்பவர்களாகத்தான் நிஜவாழ்வில் இருக்கிறார்கள்.

அதிகாலையிலேயே எழுந்து மீன், காய்கறி, பூ விற்க செல்பவர்கள், சாலையோர உணவுக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் நடத்துபவர்கள், வீட்டு வேலைகளுக்கு செல்பவர்கள், வெயில் மழை பாராமல் விவசாயம் மற்றும் கட்டட வேலை செய்பவர்கள், பெரிய தொழில் நிறுவனங்களில் சுழற்சி முறையில் ஷிஃப்ட் வேலை செய்பவர்கள், 8-12 மணி நேரம் கடைகளில் நின்றுகொண்டு வேலை பார்க்கும் விற்பனையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் இன்னும் பல சிறுதொழில்கள் மற்றும் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து அடுத்த நிலைக்கு முன்னேற்ற பாடுபடும் பெண்கள்தான் நம்மை சுற்றி இருப்பவர்கள்.

‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்
‘நவரசா’ வெப்சீரீஸின் ’ரௌத்திரம்’ எபிசோட்

சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்பு, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்கிறவர்களின் பின்னணியில், மேலே குறிப்பிட்டுள்ள உழைக்கும் பெண்களின் பங்கு நிச்சயம் இருக்கும். நிஜவாழ்வு இப்படியாய் இருக்க, வறுமையில் இருக்கும் பெண்கள் பணத்துக்காக எதுவும் செய்வார்கள் என்பது போன்று தொடர்ந்து திரைப்படங்கள் காட்சிப்படுத்துகின்றன. இது பெண்களின் உழைப்பு மற்றும் திறமையை புறக்கணிப்பதோடு அவமானப்படுத்தும் செயல்.

ஒரு திரைப்படம் எடுக்கும்போது கதை சார்ந்த மக்களை, நிலப்பரப்பை சிறிதளவாவது கவனித்து, தெரிந்துகொண்டு புரிதலுடன் எடுக்க வேண்டும். இனிவரும் இயக்குநர்களாவது புரிந்துகொள்வார்களாக.