Published:Updated:

நான் நயன்தாராவை குறிப்பிடவில்லை; லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா

நயன்தாரா,மாளவிகா மோகனன்

லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து நடிகை மாளவிகா மோகனன் விளக்கமளித்துள்ளார்.

Published:Updated:

நான் நயன்தாராவை குறிப்பிடவில்லை; லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா

லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து நடிகை மாளவிகா மோகனன் விளக்கமளித்துள்ளார்.

நயன்தாரா,மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், திரைப்படம் ஒன்றில் மருத்துவமனை காட்சியில் நடிகை ஒருவர் மேக்கப் போட்டு நடித்திருப்பதாக  விமர்சித்திருந்தார். 

இந்நிலையில் கனெக்ட் படம்  தொடர்பான நேர்காணல் ஒன்றில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நயன்தாரா, ``நடிகை ஒருவர் நான் மருத்துவமனைக் காட்சியில் மேக்கப் போட்டு நடித்தது குறித்துப் பேசியிருந்தார்.

 நயன்தாரா,மாளவிகா மோகனன்
நயன்தாரா,மாளவிகா மோகனன்

நான் நடித்தது ஒரு கமர்ஷியல் படம். அந்தப் படத்தின் இயக்குநர், `இவ்வளவு சோகம் வேண்டாம்!' என்று என்னை அப்படி நடிக்க வைத்தார். கமர்ஷியல் படம் என்றால் அப்படிதான் இருக்கும்" என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து நயன்தாரா நடிகை மாளவிகா மோகனைதான் சொல்கிறார் என்று அது தொடர்பான செய்திகளும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

 மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

இந்நிலையில், மாளவிகா மோகனன், சமீபத்தில் மலையாள தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி அது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.  

அவர் தனியார் சேனலுக்கு அளித்த அந்த பேட்டியில்,  லேடி சூப்பர் ஸ்டார் குறித்து  என்ன நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு, தனக்கு `லேடி சூப்பர் ஸ்டார்' என்ற வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்று மட்டுமே அழைக்கலாம். தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே'' என்று   மாளவிகா மோகனன் கூறியிருந்தார். 

இதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அவர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “லேடி சூப்பர்ஸ்டார் பற்றிய எனது கருத்தில், நான் எந்த ஒரு நடிகையையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. நயன்தாராவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு மூத்த நடிகையாக அவரது திரையுலகப் பயணத்தை  வியந்து பார்க்கிறேன் தயவு செய்து அமைதியாக இருங்கள்” என்று அவர் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.