Published:Updated:

"இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி "-மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின்

இயக்குநர் மடோன் அஸ்வின்

ஏற்கெனவே என்னுடைய குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. ஆனால் அது பெரிதாகக் கவனம் பெறவில்லை. இப்போது கிடைத்திருக்கும் இந்த தேசிய விருது எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

"இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி "-மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின்

ஏற்கெனவே என்னுடைய குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. ஆனால் அது பெரிதாகக் கவனம் பெறவில்லை. இப்போது கிடைத்திருக்கும் இந்த தேசிய விருது எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

Published:Updated:
இயக்குநர் மடோன் அஸ்வின்
68வது தேசிய திரைப்பட விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா ஆகியத் தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதுகளை அள்ளிக் குவிந்துள்ளன.

குறிப்பாக அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படம் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும், ஜனநாயக நாட்டின் ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தையும் மையமாக வைத்து எடுக்கபட்டப் படம். இப்படதிற்காக சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனதிற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

மண்டேலா
மண்டேலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மகிழ்ச்சியானத் தருணம் குறித்து விகடன் உடன் பேசிய மடோன் அஸ்வின், "தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் கிடைச்சா நல்ல இருக்கும் என்று நினைத்தேன். இன்னைக்கு யோகி பாபுவின் பிறந்தநாள். காலையில் அவரைப் பார்க்கச் சென்றேன். அப்போது அவரிடம் பிறந்தாநாள் பரிசாக தேசிய விருது கிடைத்தால் நல்ல இருக்கும் என்று கூறினேன். இப்போது இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ஏற்கெனவே என்னுடைய குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. ஆனால் அது பெரிதாக கவனம் பெறவில்லை. இப்போது கிடைத்திருக்கும் இந்த தேசிய விருது எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. இது இன்னும் எனது பொறுப்புகளை அதிகரித்துள்ளது. என்னுடைய அடுத்தப் படத்தை இன்னும் பொறுப்புடன் எடுப்பேன்" என்றார்.