அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்ய லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்ய லட்சுமி

தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கமிட் ஆகியிருக்கிறார்.

  • ‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன் அடுத்தாக அரசியல் பின்னணிகொண்ட கதையைப் படமாக்கவிருக்கிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

  • ‘வணக்கம் சென்னை’க்குப் பிறகு ‘சுமோ’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். ஹோசிமின் இயக்கும் இந்தப் படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாகின்றன.

ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த்
  • சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்திருக்கும் படம், ‘காப்பான்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியான நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

  • ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கமிட் ஆகியிருக்கிறார். இவர் விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
  • ம்மூட்டி நடிக்கும் ‘ஷைலாக்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். மலையாளத்தில் ராஜ்கிரண் நடிக்கும் முதல் படமான இதில், மம்மூட்டிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.

  • ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி முத்தக் காட்சிகளில் நடிப்ப தில்லை’ என்று முடிவு எடுத்திருக்கிறார், மில்க் நடிகை. இந்த முடிவுக்குப் பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள், சக முன்னணி நடிகைகள்.

  • லதரப்பட்ட பணிகளுக்கு மத்தியிலும் தன்னுடைய அடுத்தப் படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அரசியல் நடிகர். காரணம், ஈழத்துப் பெருநிறுவனத்திடம் ஏற்கெனவே இவர் வாங்கிக் குவித்த கடன்கள்தானாம். சம்பளம் பெறாமல் இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர்.

  • முன்னணி நடிகரின் புதுப்படப் பாடல் ஒன்று இணையத்தில் வெளியானதால், அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு. இது, பப்ளிசிட்டிக்காகத் திட்டமிட்டே செய்யப்பட்ட வேலைதான் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.