அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சம்யுக்தா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
சம்யுக்தா மேனன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் படம் இயக்கவருகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

கொரோனா நெருக்கடியால், 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தை தைரியமாக ரிலீஸ் செய்து அட்டகாச வசூலை அள்ளினார் சிவகார்த்திகேயன். கொரோனா பரவல் குறைவாகிவரும் சூழலில், சீக்கிரமே நூறு சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்க விருக்கும் நிலையில் ‘டான்’ படத்தை பிப்ரவரி மாதமே ரிலீஸ் செய்யும்படி லைகா நிறுவனத்தை வலியுறுத்துகிறார் சிவகார்த்திகேயன். தந்தை - மகன் பாசத்தைச் சொல்லும் ‘டான்’ படம், தியேட்டருக்கு மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்துவரும் என சிவா அடித்துச் சொன்னாலும், அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸுக்குப் பிறகே `டான்’ ரிலீஸ் என உறுதியாக இருந்தது லைகா. அதன்படியே ‘வலிமை’ பிப்ரவரி 24 ரிலீஸ் எனத் தேதி குறிக்கப்பட, மார்ச்சில் ரிலீஸாகிறது ‘டான்!’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் படம் இயக்கவருகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். புதுமுக ஹீரோவைவைத்து ‘காதல்’ பட பாணியிலேயே இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற கதையை எழுதியிருக்கும் பாலாஜி சக்திவேல், சமீபத்தில் லைகா நிறுவனத்துக்குக் கதை சொல்லியிருக் கிறார். ‘அட்டகாசமான கதை’ எனச் சொல்லி, அட்வான்ஸ் கொடுத்திருக் கிறாராம் லைகா நிர்வாகி தமிழ்க்குமரன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது!

பெரும்பாலும் பத்திரிகையாளர் களுக்கு முகம் கொடுத்துப் பேச மாட்டார் தனுஷ். பேட்டிகளையும் முடிந்த மட்டும் தவிர்க்கவே செய்வார். இந்நிலையில் ‘மாறன்’ படத்தில் முதன்முறையாகப் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் தனுஷ். தன் சாதுர்யத்தைப் பயன்படுத்தி ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்குகிறார் என்பதுதான் கதையாம். பத்திரிகைப் பணியுடன் காதல், மோதல் என ஜனரஞ்சக மசாலாவையும் கலந்துகட்டி படத்தை முடித்திருக்கிறார்கள்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சமந்தாவின் ஒற்றைப் பாடல் ‘புஷ்பா’ பட வெற்றிக்கே காரணமாகச் சொல்லப்படும் நிலையில், சிரஞ்சீவி, ராம்சரண் நடிக்கும் ‘ஆச்சார்யா’ படத்தில் ரெஜினா காஸண்ட்ராவை பயங்கர ஆட்டம் போடவைத்திருக் கிறார்கள். ஆட்டமும் பாட்டும் அதகளமாக வந்திருப்பதால், இதுவும் `புஷ்பா’ பாணியில் புயல் கிளப்பும் என்கிறார்கள். இரண்டு படங்களில் நடித்தால் வாங்கும் சம்பளத்தை இந்த ஒற்றைப் பாடலுக்கு வாங்கியிருக்கிறார் ரெஜினா!

நடிகர் சத்யராஜை வெப் சீரீஸில் நடிக்கவைக்க பல நிறுவனங்கள் முயற்சி எடுத்தன. ஆனாலும், வெப் சீரீஸ் பக்கம் விருப்பம் காட்டாமலே இருந்தார் சத்யராஜ். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, ஒருவழியாக ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் சத்யராஜ். மல்டி லாங்குவேஜ் கதையில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் அக்ரிமென்ட் போட்டிருக்கிறது ஹாட் ஸ்டார்.

‘குற்றப் பரம்பரை’ கதையை வெப் சீரீஸாகத் தயாரிக்க, ஹாட் ஸ்டார் நிறுவனம் தீவிரமாகிவிட்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சசிகுமார் இயக்குகிறார். பான் இண்டியா தொடராகப் பல மொழிகளில் இந்தக் கதையைச் செய்ய, மல்டி ஸ்டார்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது ஹாட் ஸ்டார் நிறுவனம்.

உஷ்...

மாஸ்டர் பிளானுடன் இருக்கும் நடிகருக்கு, அக்கட மாநிலத்து நடிகையிடமிருந்து போன் வந்ததாம். ‘உங்க படத்துல எனக்கு வாய்ப்பு தர முடியுமா, முடியாதா சார்?’ எனக் கேள்வி தடாலடியாக விழ, வழக்கம்போல் சிரித்து மழுப்பி கட் பண்ணினாராம் நடிகர். #ஏன் சாமி... சொல்லு சாமி..!