அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நிதி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி அகர்வால்

ஹீரோக்கள் பாணியில், தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதில் விருப்பமாக இருக்கிறார் யோகமான காமெடி நடிகர்.

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில், புரட்சிகர இயக்குநர் தோற்றுப்போவார் என யாருமே எதிர்பார்க்கவில்லையாம். வாக்குரிமை உள்ள அத்தனை பேருக்கும் போன் பண்ணிப் பேசி, பெரிய அளவில் ஆதரவைத் திரட்டிவைத்திருந்தவர், தோல்வி எனத் தெரிந்ததும் துடித்துப்போனாராம். இல்லத்து வேதனைகளும் வாட்டிய நிலையில், சங்கத் தேர்தலும் அவரைப் பெரிய சங்கடத்தில் தள்ளியிருக்கிறதாம்.

சைக்கிள் நடிகரின் சமீபத்திய படம் மரண தோல்வியைத் தழுவிய நிலையிலும், அவருக்குப் பெரிய அளவில் வருத்தம் இல்லையாம். விமர்சனரீதியாகவும், தியேட்டர் வருவாயிலும் மட்டும் சறுக்கலாம். மற்றபடி டிஜிட்டல், சாட்டிலைட், எஃப்.எம்.எஸ் எனப் படத்தைத் தயாரித்த நிறுவனமும், பார்ட்னராக மாறிய சைக்கிள் நடிகரும் செம லாபம் பார்த்துவிட்டார்களாம். ‘நல்ல விமர்சனமா சோறு போடப்போகுது… லாபம்தான் பாஸ் முக்கியம்’ என நண்பர்களிடம் கெத்தாகச் சொல்கிறாராம் சைக்கிள் ஹீரோ.

வருத்தப்படாத நடிகரைக் காட்டிலும் பெரிய சம்பளம் வாங்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் அசுர நடிகர். இதுகாலம் வரை வாங்கிய சம்பளமும் அத்தகைய அளவில்தான் இருந்தது. ஆனால், இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, வருத்தப்படாத நடிகர் சம்பளத்தை மூன்று விரல்களாக உயர்த்திவிட்டார். ஆனால், அசுர நடிகரின் சமீபத்திய படம் பெரிய ஹிட்டடித்திருக்கும் நிலையிலும், சம்பளத்தை உயர்த்த மறுக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ‘நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால்தான் அக்ரிமென்ட்’ என்பதில் கறாராக நிற்கிறாராம் அசுர நடிகர்.

நிதி அகர்வால்
நிதி அகர்வால்
நிதி அகர்வால்
நிதி அகர்வால்
நிதி அகர்வால்
நிதி அகர்வால்

ஹீரோக்கள் பாணியில், தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதில் விருப்பமாக இருக்கிறார் யோகமான காமெடி நடிகர். கேரவனைவிட்டு அவர் இறங்கும்போது அவரைச் சூழும் அந்தக் கூட்டம், ஸ்பாட் வரை கொண்டுபோய் விட்டுவிட்டு பிறகு ஷாட் முடிந்து அழைத்துவரும் வரை உடனிருக்க வேண்டுமாம். ‘எளிமையான நடிகர் ஏன் இப்போ இப்படி பந்தா காட்டுறார்?’ எனக் கவலைப்படுகிறார்கள் யூனிட்டில்.

வலிமையான நடிகரின் படம் தீபாவளிக்கு வரப்போகிறது எனச் சொன்னதால், பொங்கல் பண்டிகையை நோக்கி நகர்ந்தார் மெர்சலான நடிகர். இப்போது வலிமையான நடிகரின் படமும் பொங்கலை நோக்கித் திட்டமிடப்பட, ‘போட்டிக்கு ரெடி’ எனத் தயாராகிவிட்டாராம் மெர்சலான நடிகர். இத்தனைக்கும் மெர்சலான நடிகரின் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வலிமையான நடிகரின் படம் இன்னமும் பாதி ஷூட்டிங்கூட நகரவில்லையாம். அதற்குள் போட்டி தூள் பறக்கிறது!