
200 நாள்களை நெருங்கும் அளவுக்கு ‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங்கை நடத்திக்கொண்டே இருந்தார் வெற்றிமாறன்.
ரஜினி - நெல்சன் கூட்டணி இணையும் ‘ஜெயிலர்’ படத்துக்கு, ஹீரோயின் வேட்டை தீவிரமாக நடந்துவருகிறது. மஞ்சு வாரியர் தொடங்கி நம்மூர் மீனா வரை பரிசீலிக்கப்பட்ட பட்டியலில், ரஜினி டிக் செய்திருக்கும் ஆள் யார் தெரியுமா... ‘நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணன்! ‘நானும் ரம்யா கிருஷ்ணனும் இணைந்தால் சென்டிமென்ட்டா பெருசா வொர்க்அவுட் ஆகும்’ என ரஜினி சொல்ல, சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அம்மணியிடம் பேசி தேதி வாங்கியிருக்கிறதாம். நெல்சன் மட்டும் இன்னமும் திருப்திப்படாமல், ‘வேற ஹீரோயின் பார்க்கலாம் சார்’ எனப் போராடிவருகிறாராம்.
பல மொழிகளில் பரபரப்பாக வலம்வந்தாலும் ‘வருடம் ஒரு தமிழ்ப் படம்’ என முடிவெடுத்திருக்கிறார் சமந்தா. ஹீரோயின் ஓரியண்டட் கதைகளைத் தாண்டி, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடவே சமந்தா விரும்புகிறாராம். அதனால், அதற்கேற்ற கதைகளுடன் வந்தால், தானே ஹீரோக்களை ஏற்பாடு செய்துதருவதாகவும் அம்மணி தரப்பில் சொல்லப்படுகிறதாம். விஜய், சூர்யா, தனுஷ் எனத் தான் ஜோடி போட விரும்பும் ஹீரோக்களின் பெயர்களையும் வரிசையாகச் சொல்கிறாராம் சமந்தா.
ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கிவரும் அட்லி, ஷூட்டிங் இடைவெளியில் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். ‘200 கோடி பட்ஜெட்’ என அட்லி சொல்ல, அதைச் செய்ய ரொம்பவே ஆசைப்படுகிறாராம் விஜய். தன்னுடைய அடுத்த படம் இப்படிப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் எனத் தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்கள் தரப்பில் இந்த விஷயத்தைக் கசியவிடுகிறார் விஜய். விஜய் - அட்லி கூட்டணியில் மிக விரைவில் அடுத்த பட அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.



200 நாள்களை நெருங்கும் அளவுக்கு ‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங்கை நடத்திக்கொண்டே இருந்தார் வெற்றிமாறன். கடந்த வாரம் திடீரென அவர் பேக்கப் சொல்ல, ‘விட்டா போதும்டா சாமி’ என மொத்த யூனிட்டும் சிறுமலைக் காட்டைவிட்டு ஓட்டம் பிடித்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார் வெற்றி. “ரஜினி தொடங்கி சூர்யா வரைக்கும் என்கிட்ட கதை கேட்டுக் காத்திருக்காங்க. எனக்கு மட்டும் ஷூட்டிங்கை நீட்டிக்கொண்டே போக ஆசையா என்ன... ஒரு படம் நல்லா வரத்தானே போராடுறேன்…” என ஷூட்டிங் குறித்துக் கேட்டவர்களுக்குச் சுளீர் பதில் கொடுத்தாராம் வெற்றிமாறன்!
உஷ்...
வீட்டுக்குள்ளேயே லிங்கம், ருத்திராட்சம் என முழு சிவ பக்தராக மாறிவிட்டாராம் விரல் நடிகர். ‘லிங்க வழிபாடு செய்தால் ரொம்ப சுத்தபத்தமா இருக்கணுமே தம்பி…’ என நெருங்கியவர்கள் சொல்ல, ‘நான் இப்போ டீ டோட்லர்…’ என்கிறாராம் விரல் நடிகர்!