
கஞ்சா கருப்பு தொடங்கி வனிதா விஜயகுமார் வரை பலரையும் சீண்டி அதை வீடியோவாக்கி, ‘இந்தாளுகிட்ட உஷாரா இருக்கணும்ப்பா’ எனத் திரைத் துறையினரையே பதறவைத்தவர்
இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாரா அலிகானை நொடிப்பொழுதில் மாற்றிவிட்டு, ‘தி இம்மார்ட்டல் அஸ்வத்தாமா’ படத்தில் சமந்தாவை ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். இந்தியில் வரிசையாக மூன்று படங்கள் கமிட்டாகி, பின்னர் ஏற்பட்ட சங்கடங்களால் அவற்றிலிருந்து கழன்றுகொண்டார் சமந்தா. இந்தியில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த சமந்தாவுக்கு இப்போது இந்தப் படத்தின் மூலமாக அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஆதித்யா தார் இயக்கும் இந்தப் படத்துக்காக, மலைக்கவைக்கும் தொகை சமந்தாவுக்குச் சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறது. இதன் பிறகு கோடம்பாக்கத்தில் அம்மணியின் சம்பளம் ஐந்து விரல்களைத் தாண்டும் என்கிறார்கள்!
கவனம் ஈர்க்கக்கூடிய வெற்றிக்காகக் காத்திருக்கும் அதர்வா, கார்த்திக் நரேன் இயக்கும் ‘நிறங்கள் மூன்று’ படத்தை ரொம்பவே நம்புகிறாராம். படத்தில் இதுவரை செய்திராத பாத்திரத்தை, தான் செய்திருப் பதாகவும், இந்தப் படம் தனக்குப் பெரிய திருப்புமுனை தரும் என்றும் நண்பர்களிடம் சிலாகித்துவருகிறார். காதல், கிசுகிசு என எவ்விதச் சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கும் அதர்வா, பெரிய ஹிட் படம் ஒன்றைக் கொடுத்த பிறகுதான் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.



ப்ராங்க் வீடியோக்கள் மூலமாகச் சமூக வலைதளங்களில் செம வைரலானவர் ‘கட்டெறும்பு’ ஸ்டாலின். கஞ்சா கருப்பு தொடங்கி வனிதா விஜயகுமார் வரை பலரையும் சீண்டி அதை வீடியோவாக்கி, ‘இந்தாளுகிட்ட உஷாரா இருக்கணும்ப்பா’ எனத் திரைத் துறையினரையே பதறவைத்தவர். இப்போது சினிமாவில் கால்வைத்திருக்கிறார். உள்ளாட்சி சம்பந்தப்பட்ட அரசியல் கதையைக் கேட்ட ஸ்டாலின் உடனே தேதி கொடுத்து, அதில் நடிக்கவும் தொடங்கியிருக்கிறார். ‘இன்றைக்கும் மாறாமல் இருக்கும் சாதிய வன்மத்தைச் சொல்லும் கதை என்பதால், மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்’ எனச் சொல்லும் ஸ்டாலின், முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே அடுத்த இரண்டு படங்களுக்கு அட்வான்ஸும் வாங்கியிருக்கிறார்.
ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தால், இயக்குநர் தவிர்த்து வேறு யாருடனும் பேசும் வழக்கம் இல்லாதவர் அஜித். இயக்குநரிடம்கூட அடுத்த நாள் ஷூட்டிங் குறித்த விஷயத்தை மட்டுமே பேசுவார். அந்த அளவுக்குக் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அஜித், தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியரிடம் வீட்டுக்கு வந்த பிறகும் பேசுகிறாராம். தன் வீட்டில் நடக்கும் சமையலை வீடியோ காலில் காட்டுகிறாராம். அஜித்துக்கும் ஷாலினிக்கும் அவ்வளவு நெருக்கமான நட்பாகிவிட்டாராம் மஞ்சு வாரியர்!


உஷ்...
டைரக்ஷனில் கன்னாபின்னாவென்று தலையிடுகிறாராம் இசை ஹீரோ. அவரே டைரக்ஷன் செய்து, நடித்தும் ஆசை அடங்காதவர், `சினிமாவில் எல்லாம் எனக்கு அத்துப்படி; நானே பெரிய டைரக்டர்’ என்கிற ரேஞ்சில் கதை தொடங்கி இயக்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறாராம். அதற்கு உடன்படாத இயக்குநர்களை, தயாரிப்புத் தரப்பிடம் சொல்லி மாற்றவும் செய்கிறாராம். இதனால், அவருக்குக் கதை சொல்லவே பயந்து பம்முகிறார்கள் இயக்குநர்கள் பலரும். #ரொம்ப ‘மீசையை முறுக்காதீங்க’ ப்ரோ..!