அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர் தனது தோழிகளுடன் சம்மர் வெகேஷனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார்.

பூஜா ஹெக்டேவின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான்போல. `ராசியில்லாத ஹீரோயின்’ என்ற பெயரோடு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் இருந்தவருக்கு, தற்போது அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்கள் கிடைத்திருக்கின்றன. `லக்கி சார்ம்’ எனத் தற்போது பெயர் கிடைத்திருப்பது மட்டுமல்லாமல், தமிழில் விஜய் படத்தில் இணைந்திருக்கிறார். ஏற்கெனவே, பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் கைவசம் வைத்திருக்கிறார். தவிர, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திலும் பூஜாவை கமிட் செய்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர் தனது தோழிகளுடன் சம்மர் வெகேஷனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. குறிப்பாக, வெள்ளை நிற மோனோகினியில் அவர் இருக்கும் புகைப்படம்தான் ஹைலைட்! தற்போது, கார்த்திக் ஆர்யனுடன் ‘தோஸ்தனா 2’, ‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கான ‘குட் லக் ஜெர்ரி’ ஆகியவை ஜான்வியின் கைவசமுள்ளன.

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக ‘குக்கு வித் கோமாளி’ பவித்ரலட்சுமி நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இந்தப் படம், ஃபேன்டஸி காமெடி ஜானரில் உருவாகிறது. அதே நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தர்ஷா குப்தா, ‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நாயகியாக நடித்துவருகிறார்.

இன்ஸ்டாகிராம்வாசிகளின் கனவுக்கன்னிகளாக ஷிவானி, பவித்ரலட்சுமி, தர்ஷா ஆகியோர் இருக்க, அந்தப் பட்டியலில் கேப்ரியல்லாவும் இணைந்திருக்கிறார். குறிப்பாக `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, விதவிதமான உடைகளில் பலவிதமாக போட்டோ ஷூட் நடத்தி, அவற்றைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தவர், விரைவில் நாயகியாகும் முயற்சியிலிருக்கிறார்.

உஷ்...

எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில், கட்சிவிட்டு கட்சித் தாவி, சீட் வாங்கிப் போட்டியிட்டாலும் இந்தமுறை மலர வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, கொஞ்ச காலம் அரசியல் பேசாமல் அமைதியாக இருக்கலாம் என முடிவெடுத்துவிட்டாராம், பெயரிலும் சின்னத்திலும் ‘மலர்’ கொண்ட நடிகை. அடுத்ததாக, தன் படத் தயாரிப்பு வேலைகளை விரிவுபடுத்த கணவருடன் தீவிர டிஸ்கஷனில் இருக்கிறாராம்!