அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
News
பூஜா ஹெக்டே

நானி நடித்த ‘தசரா’ படம் தமிழில் சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தெலுங்கில் 100 கோடியைத் தாண்டி கல்லாகட்டிவிட்டது.

‘புஷ்பா - 2’ படத்தின் போஸ்டரும் டீசரும்தான் வெளியாகின. படத்தின் பிசினஸ் பிய்த்துக்கொண்டு போய்விட்டதாம். ஆடியோ ரைட்ஸ் மட்டும் 75 கோடி. இந்தி ரைட்ஸ் சுமார் 200 கோடி. இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு 175 கோடியும், இயக்குநர் சுகுமாருக்கு 55 கோடியும் பேசியிருக்கிறார்கள். படத்தின் மொத்த பிசினஸ் 2,000 கோடியைத் தொட வேண்டும் என்பதுதான் படக்குழுவின் திட்டமாம். கூடுதல் செய்தி, அடுத்து அல்லு அர்ஜுனுக்குக் கதை சொல்லி ஓகே செய்திருக்கும் நம்மூர் இயக்குநர் ‘விலங்கு’ வெப் சீரீஸ் செய்த பிரசாத் பாண்டிராஜ்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

நானி நடித்த ‘தசரா’ படம் தமிழில் சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தெலுங்கில் 100 கோடியைத் தாண்டி கல்லாகட்டிவிட்டது. இதுவரை செய்த படங்களிலேயே நானிக்குப் பெரிய வசூலைக் கொடுத்திருப்பது ‘தசரா’ படம்தான். தமிழில் 2 கோடி ஷேர் செய்திருப்பதையே மிகப்பெரிய வரவேற்பாக நினைக்கிறாராம் நானி. காரணம், அவருடைய படங்கள் இதுவரை இத்தகைய ஷேர் தொகையைத் தமிழில் பெற்றதில்லை. கூடுதல் செய்தி, நானியிடம் கதை சொல்லி, அவருடைய பதிலுக்காகக் காத்திருக்கும் நம்மூர் இயக்குநர் ‘டான்’ சிபி சக்கரவர்த்தி.

சுமார் 250 நாள்களைத் தாண்டி எடுக்கப்பட்ட ‘விடுதலை பாகம்-1’ படம், வரவேற்புக்கும் விமர்சனங்களுக்கும் குறைவில்லாமல் தியேட்டர்களில் தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், வெற்றிமாறன் இன்னும் இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறாராம். படமே ரிலீஸாகி பட்டிதொட்டி வரை போய்விட்ட பிறகும் என்ன எடிட்டிங் என்றுதானே ஆச்சர்யப்படுகிறீர்கள்... படத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும்விதமாக, இன்னும் 20 நிமிடக் காட்சிகளைச் சேர்த்து ஓடிடி வெளியீட்டில் கூடுதலாகக் கொடுக்கப்போகிறாராம் வெற்றிமாறன். இதனால் இரவு பகலாக எடிட்டிங் பணியிலேயே மூழ்கிக் கிடக்கிறாராம்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகப் பலரும் நினைத்த நிலையில், இன்னும் 10 நாள்கள் கேட்கிறாராம் படத்தின் இயக்குநர் அஸ்வின் மடோன். படத்தை எடிட் செய்து பார்த்தவர், பேட்ச் வொர்க்கின் அவசியம் குறித்து சிவகார்த்திகேயனிடம் சொல்ல, தயாரிப்பாளர் அருணிடம் கலந்து பேசி 10 நாள்களை மறுபடியும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். படத்தில் இடம்பிடித்திருக்கும் நான்கு ஃபைட் காட்சிகள், சிவகார்த்திகேயனை மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நிச்சயம் உயர்த்தும் என்கிறார்கள் படக்குழுத் தரப்பில்.

உஷ்...

`காதல் கொண்ட’ நடிகருக்கு அப்படி என்னதான் தேவையோ… ‘அவசரம் 50’ எனக் கடன் கேட்கிறாராம் பலரிடமும். ‘திருப்பித் தருவாரா, தேதி வாங்கிக் கழிப்பதா...’ எனத் தெரியாமல் பலரும் கொடுப்பதற்குத் தயங்க, ‘வட்டிக்குக் கொடுங்க’ என்கிறாராம்!