அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

வர்ஷினி சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
வர்ஷினி சௌந்தரராஜன்

அசுர நடிகரின் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பக்காவாகத் தயாராகிவிட்டது. ஆனாலும், ரிலீஸைத் தள்ளிப்போட வைத்து, தன் கோபத்தைக் காட்டிக்கொண்டேயிருக்கிறார் அசுர நடிகர்.

பொங்கல் மோதலுக்குத் தயாராகும் இரு உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கும் அநியாய எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இந்நிலையில், ஒரு படத்தின் தயாரிப்பாளர் ‘இரு நடிகர்களில் யார் டாப் ஒன்?’ என வெளிப்படையாகப் பேசி தேவையற்ற சர்ச்சைக்கு தூபம் போட்டார். உண்மையில் அவரை இப்படிப் பேசச் சொன்னதே அந்தப் படத்தின் ஹீரோதானாம். “சர்ச்சையானாலும் அதுதானே உண்மை” என இப்போதும் அதே நிலைப்பாட்டில் நிற்கிறாராம் அவர். அதற்கு பதிலடியாக என்ன செய்யலாம் என மற்றொருவரிடம் படக்குழு கேட்க, “அமைதியா இருங்க” எனச் சொல்லப்பட்டதாம்!

நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருந்த ஃபெமிலி சென்டிமென்ட் இயக்குநருக்கு, இப்போது அடுத்த பட வாய்ப்பு இல்லையாம். ‘ஒரே ஒரு ஃப்ளாப்தானடா கொடுத்தேன்…’ என நொந்துபோனவர், அட்டகாசமான கதையோடுதான் அடுத்த படம் எனச் சொல்லி தீவிரமான சிந்தனையில் அமர்ந்துவிட்டாராம். செதுக்கிச் செதுக்கி, செமத்தியான கதையைப் பிடித்தவர், சிலரிடம் சொல்லிப்பார்த்தாராம். அத்தனை பேரும் சிலிர்க்க, நம்பிக்கையோடு ஹீரோக்களை மீண்டும் அணுகத் தொடங்கியிருக்கிறாராம்.

வர்ஷினி சௌந்தரராஜன்
வர்ஷினி சௌந்தரராஜன்

அசுர நடிகரின் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பக்காவாகத் தயாராகிவிட்டது. ஆனாலும், ரிலீஸைத் தள்ளிப்போட வைத்து, தன் கோபத்தைக் காட்டிக்கொண்டேயிருக்கிறார் அசுர நடிகர். இத்தனைக்கும் பணரீதியான பஞ்சாயத்துகளுக்குத் தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே முடிவுகட்டிவிட்டதாம். ஆனாலும், இன்னமும் இறங்கிவராமல் நடிகர் இழுத்தடிக்கிறாராம். அதேநேரம், ‘படத்தை மேலும் மெருகேற்றுங்கள்’ என போஸ்ட் புரொடக்‌ஷன் டீமிடம் தனிப்பட்ட வகையில் சொல்லிவருகிறாராம் நடிகர். ‘ஓ.கே அளவில் இருக்கும் படம் சிறப்பு என்கிற அளவுக்குச் சீக்கிரமே வரும்’ என உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் நண்பர்களிடத்தில்!

‘டாக்’ படம் பெரிதாகப் போகாததால், வீட்டில் சோர்ந்துபோய் படுத்துவிட்டாராம் புயல் காமெடியார். முன்பெல்லாம் படம் குறித்த விமர்சனங்களைச் சட்டையே செய்யாதவர், இப்போது எந்நேரமும் போனும் கையுமாகவே இருக்கிறாராம். கழுவிக் கழுவி ஊற்றப்படும் விமர்சனங்களைத் தொடர்ந்து கேட்கிறாராம். எதுவாயினும் தனக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்துப் பேசும் வழக்கமுடையவர், அவர்களுக்கும் ஒரு வாரமாகத் தடைபோட்டுவிட்டாராம். படத்தின் தயாரிப்பு தரப்புக்கு மட்டும் போன் போட்டு தன் ஆதங்கத்தைச் சொன்னவர், ‘அடுத்த படத்துக்கு ரெடி பண்ணுங்க… நான் மாஸ் பண்ணிக் காட்டுகிறேன்’ என்றாராம். நிலைமை கையை மீறிப்போனதை புயல் காமெடியாரிடம் சொல்ல முடியாமல் போனை வைத்ததாம் தயாரிப்பு தரப்பு.

மிஸ்டர் மியாவ்

எதற்கும் துணிந்த நடிகரின் முழுச் சம்பாத்தியமும் மும்பை பக்கம்தான் முதலீடு செய்யப்படுகின்றனவாம். தமிழகத்தில் ஆஃப் தி ரெக்கார்டு அடிப்படையில் செய்திருந்த முதலீடுகளையும் மொத்தமாக மும்பைக்கு மாற்றிய நடிகர், அங்கேயே தனி வீடு பார்த்துத் தங்கிவிட்டாராம். மும்பையின் நட்பு வட்டாரமும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். அதனால், எப்போதாவது அத்தியாவசியம் என்றால் மட்டுமே சென்னைப் பக்கம் வருகிறாராம்.வர்ஷினி சௌந்தரராஜன்