அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சமந்தா

உள்ளாட்சித் தேர்தல் அடாவடிகளையும், வாக்குகளைப் பறிக்க நடக்கும் சூழ்ச்சிகளையும் அப்பட்டமாக்கிய படம் ‘மண்டேலா.’

சிம்புவை வைத்து ‘AAA’ படம் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், பிறகு நடிக்கப் போய்விட்டார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த ஆதிக், அஜித்துடன் ரொம்பவே நெருக்கமாகி, அவருக்குக் கதை சொல்கிற அளவுக்குப் போனார். ஏனோ அந்த முயற்சி கைகூடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது பேன் இண்டியா கதை ஒன்றை எழுதி முடித்திருக்கிறார். ‘எனிமி’ படத்தின் தயாரிப்பாளரான வினோத் அந்தக் கதையை விஷால் கவனத்துக்குக் கொண்டுபோக, இப்போது விஷாலின் 33-வது படமாக ஆதிக் படம் அமையவிருக்கிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘விநோதய சித்தம்’ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், மௌத் டாக் படத்துக்கு நல்லபடி அமைய, ஓடிடி தளத்தில் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு. இதற்கிடையில் யாரும் எதிர்பாராத ஆச்சர்ய அழைப்பு வந்திருக்கிறது சமுத்திரக்கனிக்கு. தெலுங்கில் மாஸ் ஹீரோவான பவன் கல்யாண் ‘விநோதய சித்தம்’ படத்தை ரீமேக் செய்து நடிப்பதாகச் சொல்லியிருக்கிறார். இன்னொரு பாத்திரத்தில், மோகன் லால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இயக்கம் சமுத்திரக்கனி. விமர்சனங்களைத் தாண்டி நல்ல படங்கள் வெல்லும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது ‘விநோதய சித்தம்.’

தனது 25-வது படமான ‘பூமி’ சரியாகப் போகாததால், மிகுந்த வருத்தத்தில் இருந்தார் ஜெயம் ரவி. கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தியும் படம் சொதப்பலானதால், அடுத்த படத்தை மிகுந்த கவனத்தோடு தொடங்கியிருக்கிறார். தன்னைவைத்து ‘பூலோகம்’ படம் செய்த இயக்குநர் கல்யாணுடன் பேசி, தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ற கதையை ரெடி செய்து படத்தை ஆர்ப்பாட்டமின்றி முடித்திருக்கிறார் ஜெயம் ரவி. தன்னை அடுத்தகட்டத்துக்கு உயர்த்துகிற தனித்துவமான கதைக்காகப் பல இயக்குநர்களுக்கு நேரம் ஒதுக்கிப் பேசிவருகிறார் ஜெயம் ரவி.

உள்ளாட்சித் தேர்தல் அடாவடிகளையும், வாக்குகளைப் பறிக்க நடக்கும் சூழ்ச்சிகளையும் அப்பட்டமாக்கிய படம் ‘மண்டேலா.’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையிலும், அவசரப்பட்டு அக்ரிமென்ட் வலையில் சிக்காத இயக்குநர் மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயனிடம் ஒன்லைன் சொன்ன தகவலை முதன்முறையாக நாம் எழுதியிருந்தோம். இப்போது இருவரும் இணைவது உறுதியாகிவிட்டது. பொறுமையாகத் திரைக்கதை எழுதி, சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம் ஸ்கிரிப்ட் புக் கொடுத்திருக்கிறார் அஸ்வின். படித்த சில மணி நேரங்களிலேயே வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி, அஸ்வினுக்கு அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லிவிட்டாராம் சிவா.

மிஸ்டர் மியாவ்

நாக சைதன்யாவை வெறுப்பேற்ற அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா’ படத்தில் அநியாயக் கவர்ச்சி ஆட்டம் ஆடினார் சமந்தா. இதற்கு பதிலடியாகச் சமீபத்தில் பேசிய நாக சைதன்யா, “நாம் ஏற்று நடிக்கும் பாத்திரங்களைப் பார்த்து நம் குடும்பத்தினர் முகம் சுளிக்கக் கூடாது” என்றார். திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடித்த பாத்திரங்களில் நாக சைதன்யாவுக்கு விருப்பம் இல்லை. அந்த வருத்தம்தான் இருவரையும் விவகாரத்து வரை கொண்டுவந்தது. இந்நிலையில், அடுத்த அதிரடியாகச் சர்ச்சைக்குரிய கதைகளை கையிலெடுக்கத் துணிந்துவிட்டாராம் சமந்தா.

உஷ்…

சிறு நிறுவனம், பெரு நிறுவனம் என்றெல்லாம் பாராமல், எல்லா இடங்களிலும் கதை சொல்லி டோக்கன் அட்வான்ஸ் வாங்கிவைத்திருக்கிறாராம் ‘தென்மேற்கு’ இயக்குநர். வளரும் ஹீரோக்களையும் விட்டுவைக்காமல் வளைத்து வளைத்துக் கதை சொல்கிறாராம். “முதல் படத்துக்கு வாய்ப்பு தேடும் இயக்குநர் மாதிரி முட்டி மோதுறார்” என முகம் சுளிக்கிறார்கள் பலரும். #மக்க கலங்குதப்பா... மடி புடிச்சு இழுக்குதப்பா!