
விஜய் - லோகேஷ் இணைந்திருக்கும் ‘லியோ’ படத்தின் பட்ஜெட் 350 கோடியாம். ‘வாரிசு’ படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காத நிலையிலும், தன் அடுத்த படத்தின் பிசினஸ் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் விஜய்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரைத் தமிழுக்கு யார் அழைத்து வருவது எனத் தொடர்ந்து போட்டி நடக்கிறது. இயக்குநர் லிங்குசாமி இயக்கவிருக்கும் ‘பையா - 2’ படத்தில் ஜான்வி கபூரை ஹீரோயினாகக் கேட்டிருக்கிறார்கள். ‘பையா’ முதல் பாகத்தில் பட்டையைக் கிளப்பிய கார்த்திக்கு மாற்றாக இரண்டாம் பாகத்தில் ஆர்யா நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி தயங்குவதாகத் தகவல். ஆனாலும், அம்மணி மனதைக் கரையவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் லிங்கு. படத்துக்கான லொக்கேஷன் தேடுதலுக்காக இந்தியா முழுக்க நெடுஞ்சாலைகளில் மாதக்கணக்கில் காரில் பயணித்துவருகிறார் லிங்குசாமி.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து எடிட் பணிகளை முடித்திருக்கிறார்கள். முதல் பாகம் சூரியை மையமாக வைத்து நகர, இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி நர்த்தனம் ஆடியிருக்கிறாராம். ‘இரண்டாம் பாதி முழுக்கவே தீவிர அரசியலைப் பேசியிருக்கிறார் வெற்றிமாறன்’ என்கிறார்கள் படக்குழுவினர். பட்ஜெட் எகிறியதால் பயந்துகொண்டே இருந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார், படத்துக்கான பிசினஸும் மிகுதியாகியிருப்பதால் இப்போது செம ஹேப்பியாம்.

விஜய் - லோகேஷ் இணைந்திருக்கும் ‘லியோ’ படத்தின் பட்ஜெட் 350 கோடியாம். ‘வாரிசு’ படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காத நிலையிலும், தன் அடுத்த படத்தின் பிசினஸ் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் விஜய். ‘வாரிசு’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய வகையில் ‘லியோ’ தயாரிப்பாளர் லலித்துக்கு 8 கோடி கையைக் கடித்திருக்கிறதாம். ஆனால், அது குறித்த எவ்விதக் கவலையும்படாமல் விஜய்க்காக அள்ளி இறைக்கத் தயாராகிவிட்டாராம் லலித்.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்குக் கைநழுவிப்போயிருக்கும் சூழலில், அஜித்துடன் ஜோடி போடும் வாய்ப்பு நயன்தாராவுக்கு அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். மகிழ் திருமேனி உள்ளிட்ட பல இயக்குநர்களின் பெயர்கள் அஜித் படத்துக்காக அடிபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ‘யார் இயக்கினாலும் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கட்டும்’ எனச் சொல்கிறதாம் லைகா நிறுவனம். விக்னேஷ் சிவனின் மன வருத்தத்தை இதன் மூலமாகச் சரிசெய்துவிட முடியும் என நினைக்கும் தயாரிப்புத் தரப்பின் இந்த முடிவுக்கு அஜித்தும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லையாம்.

உஷ்...
வயதே ஏறாமல் இருக்க வரம் வாங்கினாரோ என்னவோ… எப்போது பார்த்தாலும் அப்படியே இருக்கிறார் அந்த அழகிய நடிகை. “மாதம் நான்கைந்து முறை வெளிநாடு பறந்தும், பார்ட்டிகள் கொண்டாடியும் எப்படி இந்த இளமையைக் கட்டிக் காக்கிறார்” என அம்மணியைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் இண்டஸ்ட்ரியில். அந்த ரகசியத்தை வெளிப்படையாகவே சிலர் கேட்டுவிட, ‘உடல்வாகே அப்படித்தான்…’ என்றாராம் அந்த ஸ்லிம் அம்மணி!